30 லட்சம் பைக்கை நிறுத்திய போலீசார்... காரணம் என்ன தெரியுமா?

0
31 லட்ச ரூபாய் பைக்கை ஓட்டி வந்தவரை போலீசார் தடுத்து நிறுத்தி யுள்ளனர். இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
30 லட்சம் பைக்


வாகன தணிக்கையில் ஈடுபடும் போலீசார் பைக் ரைடர்களை தடுத்து நிறுத்தி லைசென்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை கேட்டு விசாரிப்பது வழக்கம். 

அதுவும் மிகவும் விலை உயர்ந்த சூப்பர் பைக்குகளை ஓட்டி வருபவர்களை பார்த்து விட்டால் கேட்கவே வேண்டாம். இத்தகைய பைக்குகளை ஓட்டி வருபவர்களை பார்த்தால் போலீசார் கட்டாயம் நிறுத்தி விடுவார்கள்.
சூப்பர் பைக்குகளை ஓட்டி வருபவர்கள் ஏதேனும் சாகசத்தில் ஈடுபடலாம். அல்லது வேறு ஏதேனும் போக்குவரத்து விதிமுறை மீறல்களில் ஈடுபடலாம்.

இதுபோன்ற காரணங்களுக் காக தான் சூப்பர் பைக்குகளை ஓட்டி வருபவர்களை போலீசார் நிறுத்து கின்றனர்.
சூப்பர் பைக்
இது நம்பர் பிளேட் விதிமீறல், அதிக சப்தம் எழுப்பும் சைலென்சர் களை பயன்படுத்துவது உள்ளிட்ட காரணங்களுக் காகவும் சூப்பர் பைக்குகளை போலீசார் தடுத்து நிறுத்து கின்றனர்.

ஆனால் இது போன்றவை அல்லாமல் முற்றிலும் வித்தியாசமான ஒரு காரணத்திற் காக மிகவும் விலை உயர்ந்த பைக் ஒன்றை போலீசார் நிறுத்தி யுள்ளனர்.

போலீசார் தடுத்து நிறுத்தியது ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் கிளைட் ஸ்பெஷல் (Harley Davidson Street Glide Special) பைக் ஆகும். இதன் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையே 30.53 லட்ச ரூபாய் என்பது குறிப்பிடத் தக்கது.
ஸ்ட்ரீட் கிளைட் ஸ்பெஷல்


இந்த பைக்கின் எடை 362 கிலோ. இந்த பைக்கின் இன்ஜின் அதிகபட்சமாக 65 பிஎச்பி பவர் மற்றும் 163 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தி சாலைகளில் சீறிப்பாய்ந்து செல்ல கூடியது. 
மெலிந்த நிலையில் உயிரைத் தாங்கி நிற்கும் டிக்கிரி யானை !
இதன் முன் பகுதியில் 19 இன்ச் சக்கரமும், பின் பகுதியில் 18 இன்ச் சக்கரமும் பொருத்தப் பட்டுள்ளது. இந்த பைக்கின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 125 மிமீ.

சரி, இந்த பைக்கை போலீசார் எதற்காக தடுத்து நிறுத்தினார்கள் தெரியுமா? இந்த பைக்கின் விபரங்களை தெரிந்து கொள்வதற்காக தான் போலீசார் இந்த பைக்கை நிறுத்தி யுள்ளனர்.
எதற்காக தடுத்து நிறுத்தினார்கள்
சம்பவத்தன்று ரைடர் ஒருவர் இந்த பைக்கை ஓட்டி வந்துள்ளார். அப்போது இதன் தோற்றத்தால் ஈர்க்கப்பட்ட போலீசார் பைக்கை தடுத்து நிறுத்தி யுள்ளனர்.

இந்த பைக்கை நெடுஞ் சாலைகளில் எவ்வித பிரச்னையும் இல்லாமல் சாதாரண மாகவே 130-150 கிலோ மீட்டர்கள் வேகத்தில் ஓட்டி செல்ல முடியும்.

அத்துடன் இந்த பைக்கை நீங்கள் சாலையில் ஓட்டி சென்றால், உங்களை அனைவரும் திரும்பி பார்ப்பது உறுதி. அந்த அளவிற்கு இதன் தோற்றம் சிறப்பானதாக இருக்கும். இதே காரணத்திற் காக தான் போலீசார் இந்த பைக்கை நிறுத்தி யுள்ளனர்.

ரைடரை நிறுத்திய உடன் உண்மையில் இது என்ன பைக்? இதன் விலை என்ன? என்பது தொடர்பாக போலீசார் விசாரித் துள்ளனர்.
இதன் விலை என்ன?
இதற்கு அந்த பைக்கை ஒட்டி வந்த ரைடர் திருப்திகரமாக பதில் அளித்தார். அத்துடன் இந்த பைக்கின் ஆடியோ சிஸ்டம், இன்பில்ட் சார்ஜர் உள்ளிட்ட சிறப்பு வசதிகள் குறித்தும் அவர் விவரித்தார்.
இதன் பின் இந்த பைக் எவ்வளவு மைலேஜ் கொடுக்கும் என போலீசார் கேட்டனர்.

இதற்கு அந்த ரைடர் ஒரு லிட்டருக்கு 15-16 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என பதில் அளித்தார்.

இதனிடையே சிறிது நேரம் போலீசார் பைக்கை பற்றி விசாரித்ததுடன், அதனை கண்டு களித்தனர். இதன் பின் அந்த பைக்கை ஓட்டி வந்த ரைடரும், போலீசாரும் கை குலுக்கி கொண்டனர்.

அதன் பின் அந்த ரைடர் அங்கிருந்து புறப்பட்டு தனது பயணத்தை தொடர்ந்தார். பொதுவாக இது போன்ற பைக்குகளை பார்த்தால் நாம் வாயை பிளந்து பார்ப்போம்.

அதற்கு போலீசாரும் விதிவிலக்கு அல்ல என்பதற்கு இச்சம்பவம் ஒரு உதாரணம்.
இது தொடர்பாக யூ-டியூப்பில் வெளியிடப் பட்டுள்ள வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.


Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings