பொதுவாக இந்திய போலீசாருக்கு டிவிஎஸ் அப்பாச்சி, பஜாஜ் பல்சர் போன்ற சாதாரண மோட்டார் சைக்கிள்கள் தான் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆனால் குஜராத், கொல்கத்தா போலீசாரிடம் மட்டும் விலை உயர்ந்த ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்குகள் உள்ளன. எனினும் அவை விஐபி கான்வாய்களில் மட்டுமே பயன்படுத்தப் படுகின்றன.
எனவே தான் ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் கிளைட் ஸ்பெஷல் போன்ற மிக மிக விலை உயர்ந்த பைக்குகளை பார்த்தால், நம்மை போல் அவர்களும் ஆச்சரியத்தில் மூழ்கி விடுகின்றனர்.
இந்திய போலீசாரின் நிலைமை இப்படி இருக்க துபாய் போலீசாரோ பறக்கும் பைக்கில் கெத்தாக வலம் வர தொடங்கி யுள்ளனர்.
இதன் விலை மற்றும் சிறப்பம் சங்கள் தெரிந்தால் நீங்கள் ஆச்சரியத்தில் மூழ்கி போவது உறுதி. இது குறித்த தகவல்களை இனி பார்க்கலாம்.
உலகின் மிகவும் அதிநவீன காவல்துறை என்றால் சந்தேகத்திற்கு இடமின்றி அனைவர் மனதிலும் முதலில் நினைவுக்கு வருவது துபாய் காவல் துறையாக தான் இருக்கும்.
லம்போர்கினி, ஃபெராரி என முன்னணி நிறுவனங் களின் சூப்பர் கார்களை எல்லாம் துபாய் போலீசார் பயன்படுத்தி வருகின்றனர்.
சூப்பர் கார்கள் எல்லாம் மிகவும் விலை உயர்ந்தவை. எனவே இந்திய சாலைகளில் சூப்பர் காரை பார்ப்பது என்பதே மிகவும் அபூர்வமான ஒரு விஷயமாக இருந்து வருகிறது.
ஆனால் அப்படிப்பட்ட சூப்பர் கார்களை எல்லாம் துபாய் போலீசார் சர்வ சாதாரணமாக பயன் படுத்தி வருகின்றனர்.
இந்த சூழலில் அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் செயல்பட்டு வரும் ஹோவர்சர்ஃப் (Hoversurf) என்ற நிறுவனம், துபாய் போலீசாருக்காக பறக்கும் பைக்குகளை தயாரித்துள்ளது.
இதற்கு ஹோவர்சர்ஃப் எஸ்3 2019 (Hoversurf S3 2019) என பெயரிடப் பட்டுள்ளது. பார்ப்பதற்கு தேள் போன்ற வடிவத்தில் இருப்பதால், இந்த பறக்கும் பைக்குகளை ஸ்கார்பியன் என்றும் கூட குறிப்பிடு கின்றனர்.
இதன் விலை நம்மை நிச்சயமாக தலை சுற்ற வைத்து விடும். ஆம், ஒவ்வொரு பறக்கும் பைக்கின் விலையும் தலா சுமார் 1 கோடி ரூபாய்.
இந்த பறக்கும் பைக்குகளின் சிறப்பம் சங்கள் குறித்து துபாய் காவல் துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ''இந்த பறக்கும் பைக்கின் மொத்த எடை 114 கிலோ மட்டுமே.
இது அதிக பட்சமாக 272 கிலோ எடையை சுமந்து செல்லும் திறன் வாய்ந்தது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 96 கிலோ மீட்டர்கள். இதில், ஒருவர் மட்டுமே பயணம் செய்ய முடியும்.
இது தவிர ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஆள் இல்லாமலும் இதனை இயக்கலாம். இதில் ஆள் இருந்தால் அதிக பட்சமாக 25 நிமிடங்கள் இடை விடாமல் பறக்க முடியும்.
அதே சமயம் ஆள் இல்லா விட்டால் 40 நிமிடங்கள் வரை இடை விடாமல் பறக்கும் திறன் இதற்கு உண்டு.
இந்த பறக்கும் பைக்குகள் மின்சாரத்தால் இயங்க கூடியவை. இதனை முழுமையாக சார்ஜ் செய்ய சுமார் இரண்டரை மணி நேரம் ஆகும்.
இது செங்குத்தாக டேக் ஆப் ஆகும். அதே போல் செங்குத் தாகவே லேன்டிங்கும் செய்து கொள்ள முடியும். எனவே ஓடுதளம் போன்ற விஷயங்கள் எதுவும் தேவையே இல்லை.
எந்த இடத்தில் இருந்து வேண்டு மானாலும் உடனடியாக பறக்க தொடங்கலாம். அவசரமான சூழ்நிலைக ளிலும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களிலும் இந்த பறக்கும் பைக்குகள் மிகவும் உதவிகர மானதாக இருக்கும்.
முதற் கட்டமாக ரோந்து பணியிலும், விபத்தில் சிக்கியவர் களுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கும் பணியிலும் இதனை ஈடுபடுத்த முடிவு செய்துள்ளோம்.
பறக்கும் பைக்குகளை வழங்குவது தொடர்பாக ஹோவர்சர்ஃப் நிறுவனத் திற்கும், எங்களுக்கும் இடையே கடந்த 2017ம் ஆண்டே ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டது.
தற்போது பறக்கும் பைக்குகளை எப்படி இயக்குவது? என்பது தொடர்பாக ஹோவர்சர்ஃப் நிறுவனம் எங்களுக்கு பயிற்சி வழங்கி வருகிறது.
தற்போது பறக்கும் பைக்குகளை எப்படி இயக்குவது? என்பது தொடர்பாக ஹோவர்சர்ஃப் நிறுவனம் எங்களுக்கு பயிற்சி வழங்கி வருகிறது.
துபாய் காவல் துறையை சேர்ந்த 2 குழுக்கள் தற்போது பயிற்சி பெற்று வருகிறன்றன. வரும் 2020ம் ஆண்டில் இந்த பறக்கும் பைக்குகள், துபாய் காவல் துறையில் சேர்க்கப்படும்.
எவ்வளவு பறக்கும் பைக்குகளை பயன்படுத்துவது என்பது தொடர்பாக தற்போது ஆலோசனை நடைபெற்று வருகிறது'' என்றார்.
ஐக்கிய அரபு எமீரகத்தில், ஜிட்டெக்ஸ் என்ற மாநாடு கடந்த ஆண்டு நடைபெற்றது. அப்போதே பறக்கும் பைக் தொடர்பான சில தகவல்களை ஹோவர்சர்ஃப் நிறுவனம் வெளியிட்டு விட்டது.
தற்போது துபாய் போலீசாருக்கு பயிற்சி அளிக்க தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
பறக்கும் பைக்குகளில் துபாய் போலீசார் தீவிரமாக பயிற்சி பெற்று வரும் வீடியோ, பேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. அதனை நீங்கள் கீழே காணலாம்.
இந்த செய்தி நம்ம ஊர் போலீஸ் காரர்களை ஏக்க பெருமூச்சு விட வைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
அதே போல் இந்திய போலீஸ் காரர்களுக்கு இது போன்ற அதிநவீன தொழில் நுட்பங்கள் கிடைக்க இன்னும் பல வருடங்கள் என்பதிலும் சந்தேகமே வேண்டாம்.
Thanks for Your Comments