”புது புது பாணியில் ஏடிஎம் மையங்களில் கொள்ளை யடிக்கும் வட மாநில கொள்ளையர்கள்” நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வடமாநில கொள்ளை யர்களின் அட்டகாசம்
“கண்காணிப்பு கேமராவில் சிக்கிய வடமாநில கொள்ளையர்கள்” *தர்மபுரியில் நகைக் கடையில் கொள்ளை யடிக்க முயன்ற வட மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் கைது”
”குறியீடு போட்டு கொள்ளை யடிக்க வரும் வடமாநில ஆசாமிகள்”
பேப்பரையோ, செய்தி டிவி சேனலையோ, செய்தி இணைய தளங்களையோ பார்த்தால் ஒரு நாளாவது மேற்கண்ட தலைப்பில் செய்தி இல்லாமல் இருக்காது.
வட மாநிலத்தவர் வருகையால் தமிழகத்தில் வசிப்போரின் உயிருக்கும், உடைமைக்கும் அச்சுறுத்தல் இருப்பதை மறுப்பதற் கில்லை.
ஏடிஎம் கொள்ளை, நகைக் கடை கொள்ளை, வங்கிகளில் துளையிட்டு கொள்ளை என அடுத்தடுத்து அரங்கேறி வரும் கொள்ளைச் சம்பவங்கள் மற்றும்
அதைத் தடுக்க முயலும் காவலாளிகள், உரிமை யாளர்கள் கொல்லப் படுவதும் வட மாநிலத்தவர் களால் தான் என்பதற்கு தமிழக காவல் துறையில் பதிவாகியுள்ள வழக்குகளே ஆதாரம்.
உரிய ஆவணங்கள் இல்லாததால் மவுலிவாக்கம் கட்டிட விபத்து போன்ற தருணங்களில் இறந்தவர் களை அடையாளம் கண்டு சடலங்களை ஒப்படைப்பதில் கடும் சிரமம் ஏற்படுகிறது.
உள்ளூர் கொள்ளையர் களை விட வடமாநில இளைஞர்கள் வித்தியாச மான கோணத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடுவது வழக்கம். பல இடங்களில் அவர்கள் நடத்தும் கொள்ளை களை எளிதில் கண்டறிய முடியாது.
சம்பவத்திற்கு முன்பாக சில குறியீடுகளை போட்டு, கொள்ளையில் ஈடுபடுவது வடமாநில இளைஞர்கள் பாணி என்பது சமீபத்தில் தெரிந்தது.
* நாடு முழுவதிலும் உள்ள ஏடிஎம் மையங்களில் ஸ்கிம்மர் மெஷின் பொருத்தி கொள்ளை யடிப்பது, சிசிடிவி கேமராக்களை ஹேக் செய்து ஏடிஎம் அட்டை தகவல்களைத் திருடுவது என புதுப்புது பாணியில் வட மாநில கொள்ளை யர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
இது தொடர்பாக சமீபத்தில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப் பட்டனர். சென்னை நங்கநல்லூரில் தொழிலதிபர் ரமேஷ் (வயது 52) வீட்டில் 120 சவரன் நகை கொள்ளை யடிக்கப் பட்டது.
இது தொடர்பாக ராஜஸ்தானைச் சேர்ந்த ராம்நிவாஸ் (30), ராம்டிமியா (20), கைலாஸ் (18), காலுராம் (23), கரோவ் (19), கடு (18), சம்பவ்ரியா (20) ஆகிய 7 பேர் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள நக்டா ரெயில் நிலையத்தில் கைது செய்யப் பட்டனர்.
ராஜஸ்தானு க்கு ரெயிலில் தப்பிய போது சென்னை போலீஸார் அளித்த தகவலின் பேரில் அங்குள்ள போலீஸாரால் இவர்கள் கைது செய்யப் பட்டனர்.
* கடந்த ஜூலை 20 -ந்தேதி சவுதி ரியால் எனக்கூறி வெற்றுக் காகிதக் கட்டுகளை கொடுத்து நூதன முறையில் பண மோசடியில் ஈடுபட்ட வடமாநில கும்பலைச் சேர்ந்த 8 பேரை திருவான்மியூர் போலீஸார் கைது செய்தனர்.
* இந்நிலையில் திருச்சியில் உள்ள லலிதா ஜுவல்லரியில் கொள்ளை சம்பவம் இன்று நடந்து உள்ளது.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் பரபரப்பான இடத்தில் அமைந்துள்ளது
பிரபல நகைக் கடையான லலிதா ஜுவல்லரி. நூற்றுக் கணக்கான பணியாளர்கள், காவலாளிகள், கண்காணிப்பு கேமராக்கள் என எந்நேரமும் பரபரப்பாக இருக்கும். 24 மணி நேரமும் கடையைச் சுற்றி பாதுகாப்பு க்கு காவலாளிகள் இருப்பது வழக்கம்.
கடையின் பின்புறம் ஏசி மெஷின்கள் அமைக்கப் பட்டுள்ளன. இங்கு ஆள் நடமாட்டம் பகலிலேயே இருக்காது.
கொள்ளை யர்கள் இந்தப் பகுதி வழியாக ஏசி மெஷின்கள் இருக்கும் சுவர் வழியாகத் துளையிட்டு உள்ளே புகுந்து கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றி உள்ளது தெரிந்துள்ளது.
2 அடி தடிமனான சுவரில் துளையிட்டு உள்ளே சென்று கொள்ளை யடித்து உள்ளனர்.
இது வரைக்கும் கொள்ளை போன நகைகளின் மொத்த மதிப்பு சரியாக கணக்கிடப் பெறவில்லை என்றாலும் கிட்டத்தட்ட 100 கிலோ தங்க, வைர நகைகள் கொள்ளை அடிக்கப் பட்டிருக்கலாம் என முதல் தகவல் வெளியானது.
அவற்றின் மதிப்பு ரூ.50 கோடிக்கு மேல் இருக்கும் எனத் தெரிகிறது. வடமாநில கொள்ளை யர்களுக்கு இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் தொடர் பிருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.
கொள்ளையர் களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளன. இது போல் தேனியிலும் ஒரு கொள்ளை சம்பவம் நடந்து உள்ளது.
* தேனி மாவட்டம் பழனிச் செட்டி பட்டியில் ரியல் எஸ்டேட் அதிபர் கோகுல கிருஷ்ணன் வசித்து வருகிறார்.
இவர், பிரமோற்சவம் காண குடும்பத்துடன் திருப்பதி சென்று வீட்டிற்கு திரும்பி யுள்ளார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப் பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டினுள் சென்று பார்க்கையில் வீட்டில் வைத்திருந்த 280 சவரன் நகைகளும், ரூ. 2 லட்சம் பணமும் கொள்ளை யடிக்கப் பட்டதை அறிந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர்.
* சமீபத்தில் உத்தம பாளையம் காவல் நிலையத்தை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் கண்காணிப்பு கேமரா ஆய்வுகளை பரிசோதித்த போது வட மாநில கொள்ளை யர்கள் நடமாட்டம் குறித்து தெரிய வந்தது.
கொள்ளை யர்களின் உருவம் தெளிவாக தெரிந்தது. எனவே, வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் தேடி வந்தனர்.
அந்த வடமாநில கொள்ளை யர்கள் சட்டை அணியாமல், டவுசர் போன்ற உள்ளாடை மட்டும் அணிந்திருந்தனர்.
அவர்கள் யார்? அப்பகுதிக்கு எப்படி வந்தனர் என்பது பற்றி விசாரித்து வருவதாக காவல்துறை அதிகாரிகள் கூறினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி இருந்தது .
இது குறித்த செய்திகள் பத்திரிகை களிலும் வெளியானது. இந்த நிலையில் தான் தற்போது கொள்ளை நடந்து உள்ளது.
* வட இந்திய மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை தென் இந்திய மாநிலங்களில் அதிகரித்துள்ளது என்று 2011இல் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் கிடைத்த மொழிகள் தொடர்பான தரவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் தமிழகத்தில் அதிர்வலை களை ஏற்படுத்தி யுள்ளது.
அதில் குறிப்பாக தென்னிந்தியாவில் 58.2 லட்சமாக இருந்த வட இந்தியர் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் 77.5 லட்சமாகி இருக்கிறது என்கிற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
பீகார், உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்துதான் தொழிலாளர்க ளாக அதிகளவில் வருகின்றனர். 2021 கணக்கெடுப்பில் இது மேலும் அதிகரிக்கும் என எதிர் பார்க்கப் படுகிறது.
குறிப்பாக தமிழகத்தில் வட இந்தியர்கள் குடியேற்றம் கணிசமாக அதிகரித்து வருவது அரசியல் தாக்கங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக மூத்த பத்திரிகை யாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்கள், டோல்கேட், சிப்காட் தொழில் சாலைகள் என அனைத்து இடங்களில் வட இந்தியர்கள் ஆதிக்கம் நீக்கமற நிறைந்திருக் கிறார்கள்.
தமிழகத்தின் குக்கிராமங் களிலும் கூட வட இந்தியர்கள் குடியேற்றங்கள் அதிகரித்தி ருக்கின்றன. சமீபத்தில் மத்திய அரசுப் பணிகளில் முறைகேடாக திணிக்கப்படும் வட இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
அண்மையில் தமிழக தபால் நிலையங்களில் பீகாரைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் நியமிக்கப் பட்டதும், இவர்கள் தமிழில் நடைபெற்ற தேர்வில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றவர்களாக சான்றிதழ்கள் வைத்திருந்தனர் என்கிற தகவலும் வெளியாகி இருப்பது குறிப்பிடத் தக்கது.
அதுபோல் தென்னக ரெயில்வே திருச்சி கோட்டத்தில் தொழில் பழகுநருக் கான 1,765 இடங்களில் 1,600 இடங்களுக்கு வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கி றார்கள்.
இதைக் கடுமையாகக் கண்டித்துள்ள மதிமுக தலைவர் வைகோ, தமிழகத்தில் பொதுத்துறை நிறுவனங்களில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகரித்து வருவது பற்றி கேள்வி யெழுப்பி யிருக்கிறார். எளிதில் புறந்தள்ள முடியாத குற்றச்சாட்டு இது.
மும்பையில் 1970களிலும் 1980களிலும் தமிழர்களுக்கு எதிர்ப்பு இருந்தது. இப்போது பீகார் மற்றும் உத்தர பிரதேசம் போன்ற வட மாநிலத் தொழிலாளர் களுக்கு எதிராக அந்த மனநிலை உள்ளது.
சமீபத்தில் மகாராஷ்டிர மாநில அரசு ஒரு கொள்கை முடிவை அறிவித்துள்ளது.
அதன்படி, இனிமேல் அம்மாநிலத் தில் தொடங்கப் படுகிற தொழிற் சாலைகள், தொழில் நிறுவனங்கள் தங்களது நிறுவன வேலை வாய்ப்புகளில் 80%-ஐ மகாராஷ்டிரா வைச் சேர்ந்தவர் களுக்கு அளிக்க வேண்டும் என்பது கட்டா யமாக்கப் பட்டுள்ளது.
கர்நாடகம் ஒரு படி மேலாகப் போய், அம்மாநிலத்தில் தொடங்கப் படுகிற தனியார் நிறுவனங் களில் குரூப் ‘சி’ மற்றும் ‘டி’ நிலை பணிகள் அனைத்தை யும் கன்னடம் பேசுபவர் களுக்கே வழங்க வேண்டும் என்று சட்டம் இயற்றியுள்ளது. தமிழகத்தின் நிலையோ வேறாக இருக்கிறது
2017ல் ஆந்திரா, தெலுங்கானா ,கோவா, ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் மண்ணின் மைந்தர் களுக்கே அரசு வேலைகளில் முக்கியத்துவம் என அரசு பணியாளர் தேர்வாணைய சட்டங்களில் திருத்தம் கொண்டு வந்து உள்ளன.
இந்த நிலையில் தான் தமிழகத்தில் பணியாற்றும் வட மாநிலத்த வர்களை கணக்கெடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து உள்ளது.
சமீபத்தில் ஒரு விழாவில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் அதிகாரி களுக்கு அறிவுறுத்தி யுள்ளார். ஆனால் அது அவர்களின் பாதுகாப்புக்குத் தான்.
Thanks for Your Comments