உலகில் ஆண்டு தோறும் 20 லட்சம் குழந்தைகள் நிமோனியா வால் இறக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலை தருகிறது உலக சுகாதார நிறுவனம்.
இந்தியாவில் ஒவ்வொரு 2 நிமிடத்து க்கும் ஒரு குழந்தை (ஐந்து வயதுக்குட்பட்ட) நிமோனியா காரணமாக மரணமடைகிறது என்கிறது இந்தியன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் அறிக்கை.
2015 -இல் இந்தியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட 12 லட்சம் குழந்தைகள் இறந்து விட்டனர் என்றும், அந்த ஆண்டில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பில் இந்தியா தான் முதலிடத்தில் இருந்தது என்றும் தெரிவித்துள்ளது லான்செட் என்ற மருத்துவ இதழ்.
நிமோனியா பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தவே ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 12ஆம் தேதியை "உலக நிமோனியா தினமாக" உலக சுகாதார நிறுவனம் கடைபிடித்து வருகிறது.
நிமோனியாவால் ஏற்படும் குழந்தைகளின் இறப்பு விகிதம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தை களின் இறப்பிற்கு நிமோனியா முதன்மையான காரணமாக உள்ளது.
முதியவர்களின் இறப்பைப் பொருத்த வரை மாரடைப்பு, பக்க வாதத்திற்கு அடுத்தப் படியாக மூன்றாவது காரணமாக நிமோனியா உள்ளது.
மார்பகப் பகுதியை எக்ஸ் ரே எடுத்து பரிசோதித்தல், ரத்தம் மற்றும் சளி ஆகிய வற்றை பரிசோதிப்பதன் மூலம் நிமோனியா வால் பாதிக்கப் பட்டிருப்பதை உறுதிப் படுத்தலாம்.
நிமோனியா என்றால் என்ன?
நுரையீரல் திசு அழற்சியே (வீக்கம்) நிமோனியா என்று அழைக்கப் படுகிறது. இந்நோயால் நுரையீரலின் காற்றுப்பைகள் பாதிக்கப் படுகின்றன. வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால் இந்நோய் ஏற்படுகிறது.
பொதுவாக நாம் காற்றை சுவாசிக்கும் போது காற்றில் கலந்திருக்கும் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை போன்ற நோய் பரப்பும் கிருமிகள், நுரையீரலைத் தாக்கி நிமோனியாவை ஏற்படுத்து கின்றன.
பெரும்பாலும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் தான் நிமோனியாவால் அதிகம் பாதிக்கப் படுகின்றனர்.
நிமோனியாவின் அறிகுறிகள்
நிமோனியாவின் அறிகுறிகள் லேசானது முதல் கடுமையானது வரை இருக்கும். பொதுவாக வயது, நுண்ணுயிரி களின் வகை மற்றும் உடல்நிலை பொருத்து நிமோனியா அறிகுறிகள் காணலாம்.
இருமல்
குளிர் காய்ச்சல்
நடுக்கம்
வேகமாக மூச்சு விடுதல்
மூச்சுத் திணறல்
வயிற்றுப்போக்கு
அதிகளவு வியர்வை வெளியேறுதல்
உதடுகள் வெளிறிப்போதல் அல்லது நீலம் பூத்தல்
நெஞ்சு வலி
பசியின்மை
உடல் சோர்வு
அதிகப் படியான இதய துடிப்பு
நிமோனியா எவ்வாறு பரவுகிறது?
குழந்தையின் மூக்கு அல்லது தொண்டையில் பொதுவாக இருக்கும் வைரஸ் அல்லது நுண்ணுயிரி நுரையீரலைப் பாதித்தல் மூலம் நிமோனியா பரவுகிறது.
இருமல் அல்லது தும்மல் மூலம் நோய் பரப்பிகள் பரவலாம். இரத்தம் மூலமும் பரவலாம் (பிறக்கும் போது மற்றும் பிறந்த உடனையும்).
யாரை யெல்லாம் நிமோனியா தாக்கும்?
குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது குறையும் போது, குழந்தை களுக்கு நோயெதிர்ப்பு சக்தி குறைய ஆரம்பிக்கும். இதானால் குழந்தைகளை எளிதில் நிமோனியா தாக்கும்.
65 வயதிற்கு மேல் உள்ளவர் களுக்கும் உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் நிமோனியா வர வாய்ப்புகள் அதிகம். சர்க்கரை நோய், புகை பிடிப்பது மற்றும் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள்,
ஆஸ்துமா, உள்ளிட்ட நெஞ்சு சளி பிரச்சினை உள்ளவர்கள், இதய நோயால் பாதிக்கப் பட்டவர்கள், சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள், பக்க வாதத்தால் மருந்துகளை தொடர்ச்சியாக எடுத்துக் கொள்பவர்கள்,
புற்று நோயிற்கு அளிக்கப்படும் சில மருந்துகள் போன்ற வற்றின் காரணமா கவும் நிமோனியா தாக்குவதற்கு வாய்ப்புண்டு.
நிமோனியாவுக்கு என்ன சிகிச்சை?
நிமோனியா சிகிச்சையானது முக்கியமாக நிமோனியாவின் வகை, அதன் தீவிரத்தன்மை, அதை உண்டாகும் நுண்ணுயிரிகள் ஆகிய வற்றை பொறுத்தது மேற்கொள்ளப் படும்.
நிமோனியா அறிகுறிகள் தென்பட்டால் நிவாரணம் அளித்தல், நோய் தொற்றுதலைத் தீர்த்தல் மற்றும் மேலும் உடல்நிலை மோச மடையாமல் தடுத்தல் ஆகிய சிகிச்சை முறைகள் கொடுக்கப்படும்.
பொதுவாக நிமோனியா பாதிப்பு உள்ளவர் களுக்கு அதிகமான நீர் வறட்சி ஏற்படும். அதை ஈடு செய்யும் விதமாக, அவர்களுக்கு அதிகமான திரவ உணவுகளை வழங்க வேண்டும்.
நிமோனியா வராமல் பாதுகாப்பது எப்படி?
குழந்தை களுக்கு சரியான கால அளவுக்கு தாய்ப்பால் கொடுக்கமால் இருப்பதாலும் நிமோனியா ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆதலால், பிறந்த குழந்தை களுக்கு ஆறு மாத காலம் கட்டாயமாகத் தாய்ப்பால் கொடுக்கப்பட வேண்டும்.
நிமோனியாவை தடுப்பூசி மூலம் தடுக்க இயலும். பிறந்த குழந்தை களுக்கு சரியான கால அளவில் நிமோனியா தடுப்பு ஊசி கட்டாயம் போட வேண்டும்.
ஐம்பது வயதைக் கடந்தவர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரேயொரு முறை நிமோனியா தடுப்பூசி போட்டுக் கொண்டால் போதும். இந்த தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது.
முதியவர் களுக்கு இத்தகைய தடுப்பூசி போட்டுக் கொள்வதால், அவர்களுடைய குடும்பத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு நிமோனியா பாதிப்பு வருவது தடுக்கப் படுகிறது.
சாதாரண மாக காய்ச்சல் குழந்தை களுக்கு வந்தால் கூட, அலட்சிய படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதன் மூலம் குழந்தை களை நிமோனியா போன்ற கடுமையான நோய் பாதிப்பிலிருந்து பாதுகாக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
சளி மற்றும் இருமல் இருப்பவர்கள் குழந்தைகளைக் கொஞ்சக் கூடாது. தும்மும் போதும் இருமும் போதும் கைக்குட்டையைப் பயன்படுத்த வேண்டும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை களுடன் சுத்தம் பேணி வந்தால் நிமோனியாவை வர விடாமல் தடுத்து விடலாம்.