உலகையே திரும்பி பார்க்க வைத்த ரயில் கொள்ளை சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
1963ம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப் பட்டாலும் கொள்ளை யடிக்கப்பட்ட பணம் குறித்த எந்த தகவலும் யாருக்கும் தெரிய வில்லை.
இது பற்றி முழுமையாக கீழே பார்க்கலாம் வாருங்கள்.
ரயில் கொள்ளை
ஓடும் ரயிலை நிறுத்தி ஒரு கொள்ளை கும்பல் 2.6 மில்லியன் யூரோ பணத்தைக் கொள்ளை யடித்தார்கள் என சொன்னால் உங்களால் நீங்கள் இது ஏதோ சினிமா கதை என்று நினைப்பீர்கள்.
ஆனால் அப்படியான ஒரு சம்பவம் இந்த உலகில் நடந்துள்ளது. இதுவும் இப்பொழுது அல்ல 1963லேயே நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து முழுமையாகப் பார்க்கலாம் வாருங்கள்.
1963 சம்பவம்
1963ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி லண்டனில் உள்ள கிளாஸ்கவ் என்ற பகுதியி லிருந்து எவ்ஸ்டான் என்ற பகுதிக்கு ஒரு ரயில் புறப்பட தயாராக இருந்தது.
மாலை சுமார் 6.50 மணிக்குக் கிளம்பும் இந்த ரயில் மறு நாள் அதிகாலை 3.59 மணிக்கு எவ்ஸ்டான் ரயில் நிலையத்திற்கு செல்லும் என திட்டமிடப் பட்டிருந்தது.
நகரும் போஸ்ட் ஆபீஸ்
இந்த ரயிலில் மொத்தம் 12 பெட்டிகள் இணைக்கப் பட்டிருந்தன. அதில் ஒரு பெட்டி போஸ்ட் ஆபீஸ் பெட்டி . அந்த காலங்களில் தொழிற்நுட்ப வளர்ச்சிகள் அதிகம் இல்லாததாதல்
மக்கள் தகவல் பரிமாற்றம், பணப்பரிமாற்றம் பொருள் பரிமாற்றம் உள்ளிட்ட பல பரிமாற்றங் களை போஸ்ட் ஆபீஸ் மூலமாகச் செய்தனர்.
அதனால் இங்கிலாந்தில் தொலை தூரம் செல்லும் ரயில்களில் எல்லாம் பயணிக்கும் போஸ்ட் அலுவலகம் ஒன்று செயல்படும்.
போஸ்ட் ஆபீஸ் பணி
குறிப்பிட்ட பகுதிகளில் சேரிக்கப்படும் தபால்களை எல்லாம் ஒன்றாகச் சேகரித்து அதை அந்த ரயிலில் ஏற்றுவார்கள்.
அவ்வாறு ஏற்றப்படும். தபால்கள் எல்லாம் ஒவ்வொரு ஊர் வாரியாக பிரிக்கப்பட்டு ரயில் குறிப்பிட்ட ஊருக்குச் சென்றதும் அந்த ஊரில் அந்த தபால்களைக் கொண்டு சேர்ப்பார்கள்.
சுறுசுறுப்பாக செயல்பாடு
அங்குள்ள லோக்கல் தபால் நிலையங்கள் எல்லாம் அந்த தபாலைப் பிரித்துக் குறிப்பிட்ட முகவரிக்குக் கொண்டு சேர்க்கும்.
இப்படியாகப் பயணிக்கும் தபால் நிலையங்கள் இங்கிலாந்தில் அந்த காலத்தில் மிகச் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வந்தனர். ரயிலில் ஒரு பெட்டி முழுவதும் போஸ்ட் ஆபீஸிற்காக ஒதுக்கப்படும்.
72 ஊழியர்கள்
பெண்ணும் பெண்ணும் காதலித்து ஓடிப்போன கதை !
ஒரு பெட்டியில் 72 பேர் பயணிக்க அனுமதி யிருப்பதால் போஸ்ட் ஆபீஸ் ஊழியர்கள் 72 பேர் அந்த பெட்டியில் பயணித்தனர். ரயிலை ஜேக் மில்ஸ் என்பவர் இயக்கினார்.
குறிப்பிட்ட அந்த ரயிலில் வங்கி பணப்பரிவர்த்தனைக் காக 2.6 மில்லியன் யூரோ பணம் கொண்டு செல்லப்பட்டது.
2.6 மில்லியன் யூரோ
ரயில் சரியான நேரத்தில் தனது பயணத்தைத் துவங்கியது.
மக்கள் எல்லாம் பயணிகள் பெட்டிகளில் ஏறினர். போஸ்ட் ஆபீஸூம் செயல்படத் துவங்கியது.
ரயில் போஸ்ட் ஆபீஸ் பெட்டியில் அந்த 2.6 மில்லியன் யூரோ பணம் வைக்கப் பட்டிருந்தது. அந்த பணம் எவ்ஸ்டான் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தது.
சிவப்பு விளக்கு
மறுநாள் அதாவது 1963ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி அதிகாலை 3மணிக்கு ரயில் சரியாக நானே வேலி ரயில் நிலையத்தைத் தாண்டி சென்றது.
குறிப்பிட்ட ஒரு பகுதிக்குச் சென்றது சிவப்பு விளக்கு இருந்தது அதைப் பார்த்ததும் ஜேக் மில்ஸ் ரயிலை நிறுத்தினார்.
ஆனால் வழக்கமாக அங்குச் சிவப்பு விளக்குப் போட வேண்டிய அவசியம் இல்லை என்பது 58 வயதான பல ஆண்டு ரயில் ஓட்டுநராக பணியாற்றிய ஜேக் மில்ஸிற்கு தெரியும்.
டெலிபோன்
அதனால் அவர் சிக்னல் கோளாறாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் அவருடன் வந்த கோ பைலட் டேவிட் ஓயிட்பே என்பவரை இறங்கி அருகில் உள்ள சின்னல் கண்ட்ரோல் சென்டருக்கு போன் செய்யச் சொல்லி யுள்ளார்.
அந்த காலங்களில் சிக்னல் கம்பங்களில் டெலிபோன் இணைப்புகளும் இருக்கும்.
சம்பவம் துவக்கம்
அதன் மூலம் சிக்னல் கோளாறு ரயில் கோளாறு உள்ளிட்டவைகள் குறித்து ரயில் பைலட்கள் கட்டுப்பாட்டு மையத்திற்குத் தகவல் தெரியப் படுத்துவதற் காக அந்த வசதி செய்யப் பட்டிருந்தது.
அதன் மூலம் கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்பு கொள்ள டேவிட் ரயிலி லிருந்து இறங்கினார்.
சிக்னல் ஹேக்கிங்
சிக்னல் கம்பத்திற்கு அருகே அவர் சென்றதும் சிக்னலில் பச்சை விளக்கு எரிந்து கொண்டிருந் ததையும் அதை யாரோ சிலர் தடுப்புகளை வைத்து மறைத்திருந் ததையும்.
கொள்ளையர்கள்
சிவப்பு விளக்கை வேறு ஒரு பேட்டரியில் கனெக்ட் செய்து ஒளிர்விக்கப் பட்டிருந்ததை யும் பார்த்து அதிர்ச்சி யடைந்தார்.
அவர் அதைப் பார்த்து விட்டு ரயிலுக்குத் திரும்பு நினைக்கும் போது அந்தப் பகுதியில் மறைந்திருந்த சிலர் வந்து டேவிட்டை தாக்கினர்.
நோக்கம்
பின்னர் அவர்கள் ரயிலில் ஏறி ஜேக் மில்ஸையும் தாக்கினர். அதன் பின்பு அடுத்த சில மர்ம நபர்களும் ரயிலை நோக்கி வந்தனர். அவர்களது நோக்கம் ரயிலில் உள்ள 2.3 மில்லியன் யூரோ பணத்தைக் கொள்ளை யடிப்பது தான்.
15 பேர் கும்பல்
15 பேர் கொண்ட அந்த கும்பல் ரயிலில் ஏறிக் கொள்ளை யடிக்க முடிவு செய்தனர்.
இந்த கூட்டத்தை ப்ரூஸ் ரிச்சர்ட் ரெனால்ட்ஸ் என்பவர் தலைமை வகித்து கொள்ளைக்கு மூளையாகச் செயல்பட்டார்.
ரயிலில் ஏறிய கொள்ளையர்கள் இரு பிரிவாகப் பிரிந்து ஒரு பிரிவு ரயில் இன்ஜினிலும் ஒரு பிரிவு போஸ்ட் ஆபீஸ் பெட்டியிலும் ஏறினர்.
பாலம்
போஸ்ட் ஆபீஸ் பெட்டியில் ஏறிய கொள்ளையர்கள் அங்கிருந்த வர்களை ஆயுதங் களைக் காட்டி மிரட்டினர். அதே நேரத்தில் ரயில் என்ஜினில் ஏறிய கொள்ளையர்கள் ரயிலை அருகில் உள்ள பாலத்திற்கு அருகே ரயிலைக் கொண்டு செல்ல முடிவு செய்தனர்.
ரயில் இயக்கம்
அந்த கொள்ளை கூட்டத்தில் ஒரு ரயில் பைலட்டும் இருந்தார். ஆனால் இது புது மாதிரி ரயில் என்பதால் அவரால் அந்த ரயிலை இயக்க முடிய வில்லை.
அதனால் அந்த கொள்ளைக் கூட்டம் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜேக் மில்ஸையே ரயிலை இயக்க வைத்தனர்.
பணம் மாற்றம்
ரயில் சரியாகப் பாலத்தின் மீது கொண்டு நிறுத்தப் பட்டது. அப்பொழுது கொள்ளைக் கூட்டம் ரயிலில்
சுமார் 128 பைகளில் கட்டப் பட்டிருந்த பணத்தைக் கொள்ளை யடித்து அந்த பாலத்திற்குக் கீழே நிறுத்தி வைக்கப் பட்டிருந்த டிரக்கில் ஏற்றினார்.
120 பைகள்
இதை யெல்லாம் செய்ய 30 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே ரெனால்ட்ஸின் திட்டம். 30 நிமிடத்தில் சுமார் 120 பைகள் ரயிலில் ஏற்றப்பட்ட நிலையில் கொள்ளை கூட்டம் அந்த இடத்தி லிருந்து தப்பித்தது.
2.5 டன் எடை
அவர் கொள்ளை யடிக்கப்பட்ட பைகளின் எடை மட்டும் 2.5 டன் எடை கொண்டதாகும். அதை ஏற்றிக் கொண்ட கொள்ளை கூட்டம் அப்பகுதி யிலிருந்து தப்பித்தது.
பின்னர் போஸ்ட் ஆபீஸ் ஊழியர்கள் கொள்ளச் சம்பவம் குறித்து ரயில் கட்டுப்பாட்டு மையத்திற்கும் தங்கள் உயரதிகாரிகளுக்கும் தகவல் சொன்னார்கள்.
செய்தி வெளியானது
மறு நாள் இந்த செய்தி ஊர் முழுவதும் பரவியது. செய்தித் தாள்களில் தலைப்பு செய்திகளா கியது. மக்கள் அனைவரும் இந்த சம்பவம் குறித்துப் பேசத் துவங்கினர். போலீசார் இந்த வழக்கைத் தீவிரமாக விசாரிக்கத் துவங்கினர்.
தடயம் கிடைக்கவில்லை
போலீசார் இந்த சம்பவம் தடயங்களை எல்லாம் சேகரித்தனர். சம்பவத்தில் படுகாயமடைந்த ஜேக் மில்ஸ் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப் பட்டார்.
அங்கு அவர் கோமா நிலைக்குச் சென்றார். அதனால் இந்த கொள்ளையர்கள் குறித்து போலீசாருக்கு போதிய தகவல் கிடைக்க வில்லை.
கண்காணிப்பு
இந்நிலையில் பணத்தைத் திருடியவர்கள் ஊருக்கு வெளிப்புறம் உள்ள பகுதியில் பதுங்கி யிருக்கூடும் எனக் கருதிய போலீசார் வெளிப்புறங் களில் தனியாக இருக்கும் இடங்களைக் கண்காணிக்கத் துவங்கினர்.
சிக்கிய கொள்ளையர்கள்
இந்நிலையில் சம்பவம் நடந்த இடத்தி லிருந்து சுமார் 30 கி.மீ தூரம் உள்ள லெதர்ஸ்லைடு என்ற பகுதியில் சில மர்ம நபர்களின் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் அங்குச் சென்று பார்த்த போது திருடப்பட்ட பணம் கொண்டு கொண்டு செல்லப்பட்ட பைகள் இல்லாமல் காலியாக கிடந்தது.
ரிச்சர்ட் ரெனாலட்ஸ்
இதை வைத்து கொள்ளையர்கள் இங்கு தான் இருந்தார்கள் எனக் கண்டுபிடித்து விட்டனர். அதன் பின் போலீசார் நடத்திய விசாரணையில் குறிப்பிட்ட அந்த பகுதியில் தங்கி யிருந்தவர்கள் ரிச்சர்ட் ரெனாலட்ஸ் குழுவினர் என்பது தெரிய வந்தது.
கைது
இதை யடுத்து அவரை போலீசார் தேடி அவர் பதுங்கிருந்த இடத்திற்குச் சென்று அவரை கைது செய்தனர்.
ஆனால் அவரிடம் கொள்ளை யடிக்கப்பட்ட பணம் எதுவும் கிடைக்க வில்லை.
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த கொள்ளையில் ஈடுபட்டது 15 பேர் மட்டுமல்ல மேலும் இருவர் இவர்களுக்குத் தகவல் கொடுத்து உதவியது குறித்துத் தெரிய வந்தது.
அனைவரும் கைது
மேலும் ரெனால்ட்ஸ் நடந்த சம்பவம் அனைத்தையும் போலீஸ் விசாரணையில் கக்கி விட்டார்.
ஆனால் பணம் தன்னிடம் எதுவும் இல்லை எனச் சொன்னார். போலீசார் அவருடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டவர் களை ஒவ்வொருவ ராகக் கைது செய்தனர்.
தகவல் கொடுத்தவர் யார்?
ஆனால் போலீசாரால் தகவல் கொடுத்ததாகச் சொல்லப்படும் இரண்டாவது நபரை மட்டும் அடையாளம் காணவே முடியவில்லை. ரெனால்டஸிற்கே அது யார் என்று தெரிய வில்லை.
அவரிடம் இருந்து பெறப்பட்ட தகவல் தான் ரயிலில் குறிப்பிட்ட அந்த பணம் வருவது உறுதியாகி யுள்ளது. அதனால் இந்த வழக்கில் 16 பேரைக் கைது செய்தனர்.
உதவி
இதற்கிடையில் முன்னாள் ரயில் பைலட்டான ரொனால்ட் பிக்ஸை கைது செய்த போது அவர் மேலும் சிலரை அந்த கொள்ளை கூட்டத்தில் சேர்ந்து கொள்ளுமாறு கேட்டதையும்,
ஆனால் அவர்கள் மறுத்து விட்டதையும் கூறினார். ஆனால் அவர்கள் அதற்கு மறுத்து விட்டதையும் கூறினார். அவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் அவர்கள் மீது தவறு இல்லாததால் அவர்கள் கைது செய்யப்பட வில்லை.
கோர்ட் விசாரணை
பின்பு கோர்ட்டில் விசாரணை நடத்தப்பட்டு கோர்ட் அந்த கூட்டத்திற்கு சுமார் 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை தண்டனைகள் விதித்தது. அதன் படி அந்த கொள்ளை கூட்டம் சிறையில் தண்டனையை அனுபவித்தனர்.
ஆனால் கைது செய்யப்பட்ட யாரிடமும் கொள்ளை யடிக்கப்பட்ட பணம் எதுவும் கைப்பற்ற முடிய வில்லை. அந்த பணம் யாரிடமும் அவர்கள் எல்லோரும் பணம் குறித்துத் தெரியாது என்றே பதிலளித்தனர்.
பணம் எங்கே சென்றது?
இந்த சம்பவம் நடந்து 50ஆண்டு களைக் கடந்தும் இன்று வரை அந்த பணம் எங்குச் சென்றது என யாராலும் கண்டுபிடிக்கவே முடியவில்லை. மேலும் இவர்களுக்கு முக்கியமான தகவலைக் கொடுத்த அந்த மர்மமான நபரையும் இன்று வரையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
உலகை அதிர வைத்த சம்பவம்
உலகிலேயே ரயிலில் நடந்த கொள்ளை சம்பவத்தில் முதல் சம்பவமாக இது பார்க்கப் படுகிறது.
உலகம் முழுவதும் இந்த கொள்ளை சம்பவம் குறித்துப் பேசப்பட்டது.
இந்த கொள்ளைக்குப் பின்பு ரயில்களில் பாதுகாப்பிற் காக பல்வேறு தொழிற் நுட்பங்கள் அறிமுகப் படுத்தப் பட்டன.
தீராத மர்மம்
இன்று வரை கிரேட் டிரெயின் ராபரி என்ற பெயரில் இந்த சம்பவம் குறித்து எல்லோரும் பேசி வருகின்றனர். இந்த வழக்கு பல்வேறு வழக்குகளை விசாரிக்கும் வழிமுறைகளையே மாற்றியது.
இன்று வரை நாம் இதை ஒரு செய்தியாகப் படித்துக் கொண்டிருக் கிறோம் என்றால் அதில் உள்ள சினிமாவை மிஞ்சும் சுவாரஸ்யம் மற்றும்
சில விஷயங்களும் என்றும் நம்மை அச்சப்பட வைக்கிறது என்பதால் தான். இந்த கிரேட் டிரெயின் ராபரி குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
Thanks for Your Comments