தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த லீ ஹீகீஸ் மற்றும் மேகன் வால்டிங். அவர்கள் ஓர்பால் ஈர்ப்பாளர்கள்.
திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த இருவரும் திருமண மண்டபத்துக் காக அதன் உரிமையாளரை அணுகி யுள்ளனர்.
ஆனால், மண்டபத்தின் உரிமையாளர் ஓர்பால் ஈர்ப்பாளர்கள் என்பதற் காக திருமண மண்டபத்தை தர மறுத்துள்ளார்.
அதற்கு காரணமாக, ஓர்பால் ஈர்ப்புத் திருமணம் கிறிஸ்துவ நம்பிக்கைக்கு எதிரானது என்று கூறியுள்ளார்.
இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ஹீகிஸ், ‘நான் காயப்படுத்தப் பட்டதை நீங்கள் புரிந்து கொள்ள மாட்டீர்கள்.
உங்களுடைய முன் அனுமானங்க ளால் நான் எவ்வளவு வேதனை யடைந்திருப்பேன். அடுத்த ஆண்டுக்குள் நாங்கள் விரும்பும்படி திருமண மண்டபம் கிடைக்கும்’ என்று குறிப்பிட் டுள்ளார்.
ஆப்பிரிக்கா கண்டத்திலேயே தென் ஆப்பிரிக்காவில் மட்டும் தான் ஓர்பால் ஈர்ப்புத் திருமணம் சட்டப் பூர்வமாக்கப் பட்டுள்ளது.
இது குறித்து தென் ஆப்பிரிக்க மனித உரிமைகள் ஆணையம், ‘திருமண மண்டப உரிமையாளரின் செயல் பாகுபாடு நிறைந்தது’ என்று தெரிவித்துள்ளார் .
Thanks for Your Comments