ரூ13 கோடிக்கு மீன் விற்பனை... என்ன மீன் தெரியுமா?

0
ஜப்பான் தலைநகர் டோக்கியோ வில் உள்ள டொயோசு என்ற பகுதியில் மீன் சந்தை ஒன்று இயங்கி வருகிறது. அங்குக் கடற்பகுதியில் பிடிக்கப்படும் மீன்கள் ஏலத்திற்குக் கொண்டு வரப்படும். 
ரூ13 கோடிக்கு மீன் விற்பனை... என்ன மீன் தெரியுமா?


இப்படியாக இந்த புத்தாண்டை யொட்டி ஒரு மெகா சைஸ் மீன் ஒன்று விற்பனைக்கு வந்தது.

இந்த மீன் ஏலமிடப்பட்டது. இந்த மீன் சுமார் 276 கிலோ எடை கொண்ட அரிய வகை டுனா ரக மீன் என்பதால் இதை வாங்குவ தற்குக் கடுமையான போட்டி யிருந்தது.

பலர் போட்டிப் போட்டுக் கொண்டு ஏலம் கேட்டனர். இதை யடுத்து கியோஷி கிமுரா என்பவர் இந்த மீனை ஏலத்தில் எடுத்தார்.

எவ்வளவு தொகைக்கு ஏலம் எடுத்தார் தெரியுமா? 193.2 மில்லியன் யென் அதாவது 1.8 மில்லியன் அமெரிக்க டாலர். 
இந்திய ரூபாய் மதிப்பில் ரூ13 கோடியாகும். இந்த மீனை ஏலத்திற்கு எடுத்தவர் அதைத் தனது ரெஸ்டாரெண்டில் உணவிற்காகப் பயன்படுத்தப் போவதாகத் தெரிவித்தார்.

இந்த சந்தையிலேயே இரண்டாவது அதிக விலைக்கு விற்பனையான மீனாக இந்த மீன் கருதப் படுகிறது. இந்த டுனா வகை மீன் வடக்கு அமோரி பிரிஃபெக்ச்சர் பகுதியில் பிடிக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings