மேற்கு வங்கத்தை சேர்ந்த முல்ஹக் என்பவர் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக வேலை தேடி கேரள மாநிலத்தி லுள்ள கோழிக்கோடு பகுதிக்கு கட்டிட தொழிலாளியாக வந்தார்.
அதே பகுதியில் அவர் மனைவி மற்றும் அவரது மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னதாக கேரள அரசின் அனுமதியுடன் விற்கப்பட்ட லாட்டரி டிக்கெட் வாங்கினார் முல்ஹக்.
அதில் அவர் வாங்கிய லாட்டரி சீட்டின் முதல் பரிசாக ரூபாய் ஒரு கோடி பரிசாக கிடைத்தது.
மேலும் பரிசு கிடைத்த மகிழ்ச்சியோடு அதனை யாரும் திருடி விடக்கூடாது என்பதற் காக அருகில் இருந்த காவல் நிலையத்தில் பாதுகாப்பு காக உதவி கேட்டிருக்கிறார்.
இதை தொடர்ந்து, போலீசார் அந்த சீட்டை வாங்கி பார்த்து ஒரு கோடி கிடைத்த லாட்டரி சீட் தான் என்று உறுதி செய்து,
பின்னர் தக்க பாதுகாப்புடன் வங்கிக்கு அழைத்து சென்ற ஒரு கோடியை டெபாசிட் செய்யவும் உதவி செய்தார்கள்.
பின்னர் தக்க பாதுகாப்புடன் வங்கிக்கு அழைத்து சென்ற ஒரு கோடியை டெபாசிட் செய்யவும் உதவி செய்தார்கள்.
பின் முல்ஹக் ஒரு கோடியை போலீசார் உதவியுடன் வங்கியில் டெபாசிட் செய்தார்.
இதைத் தொடர்ந்து லாட்டரியில் கிடைத்த பணத்தை வைத்து என் குழந்தைகளின் வாழ்க்கை முன்னேற்றத் திற்கு பயன் படுத்துவோம் என்றும் 10 ஆண்டுகளாக வாழ்வதற்கு மிகவும் கஷ்டப்பட்டு தான் குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்தேன்,
இந்த பணம் எங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று அவர் கண்ணீர் மல்க தெரிவித்திருந்தார்.
Thanks for Your Comments