ரஜினியை தடுக்க முடியாது என்று அன்றே சொன்ன கலைஞர் - வைரல் வீடியோ !

0
நடிகர் ரஜினி 'துக்ளக்' விழாவில் அந்த பத்திரிக்கையின் பெருமைகளை பற்றி மேடையில் பேசி இருந்தார். 
ரஜினியை தடுக்க முடியாது என்று அன்றே சொன்ன கலைஞர்


அதில் குறிப்பிட்ட முக்கியமான விஷயம் என்ன வென்றால், கடந்த 1971 ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் பெரியார் தலைமை யிலான அப்போதைய ஆளும் கட்சி 

திமுகவின் ஆதரவோடு மூட நம்பிக்கையை ஒழிக்கும் வகையில் மாநாடு என்ற பெயரில் பேரணி ஒன்று நடைபெற்றது என்று கூறினார்.

அந்தப் பேரணியில் இந்து கடவுள்களான ராமர் மற்றும் சீதையை ஆடைகளற்ற நிலையில்,

செருப்பு மாலை அணிவித்தும், சிவன் மற்றும் பார்வதியை ஆடையின்றி செருப்பு மாலை அணிவித்து இந்து மத நம்பிக்கையை இழிவு படுத்தினார்கள். 

இந்த சம்பவத்தை அந்த காலகட்டத்தில் இருந்த எந்த ஒரு பத்திரிக்கையும் பிரசுரிக்க வில்லை. 

ஆனால் அப்போதே சோ நடத்திய 'துக்ளக்' பத்திரிக்கை யில் அட்டைப் படமாக போட்டு தனது எதிர்ப்பை தெரிவித்தார் என்று ரஜினி பேசியிருந்தார்.

ரஜினியின் இந்த பேச்சு தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

மேலும் ரஜினி பெரியாரை இழிவு படுத்திய தாகவும் அதற்காக அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று திருமாவளவன் உள்ளிட்ட பல அரசியல் தரப்பு தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.


இந்த நிலையில், போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர் களை சந்தித்து பேசிய அவர், நான் உண்மையை பேசியதால் யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது. 

இல்லாததை ஒன்றும் நான் சொல்ல வில்லை. 1971 ம் ஆண்டு ராமர் சீதை சிலை உடை யில்லாமல் கொண்டு வரப்பட்டது உண்மை தான் என்றும் தெரிவித்திருந்தார். 

தொடர்ந்து பேசிய அவர், இது மறுக்க வேண்டிய சம்பவம் இல்லை, மறக்க வேண்டிய சம்பவம் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி,
பைக்கில் பெண்களின் பின்புறம் தட்டிய இளைஞர் கைது !
வருமானம் ரூ.5000.. ரூ.220 கோடிக்கு சொத்து - ஆந்திரா !
“ரஜினிகாந்த் சினிமா வாழ்க்கையில் இருந்தாலும் கூட பொது வாழ்வில் அதிக நாட்ட முடையவர் ரஜினி.

மேலும் அவர் யாருடைய மனமும் புண்படக் கூடாது என்பதில் மிகுந்த அக்கறை கொண்டவர். அப்படி புண்படுத்தி விட்டால் அந்த புண்ணை ஆற்ற வேண்டும் என்பதில் முனைப் புடையவர். 

அவர் அரசியலுக்கு நேரடியாக வந்து தான் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று இல்லை. 

அவர் அரசியலுக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது. வந்தால் வரவேற்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். கருணாநிதி பேசும் இந்த வீடியோ தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.


Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings