கொரோனாவால் அறைக்குள்ளே தவிக்கும் மக்கள் - ரோபோக்கள் செய்யும் செயல் !

1 minute read
சீனாவில் கொரோனா வைரஸ் பீதியால் ஹோட்டல்களில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு ரோபோ ஒன்று உணவு வழங்கும் காட்சி இணையத்தில் வெளியாகி யுள்ளது.
கொரோனாவால் அறைக்குள்ளே தவிக்கும் மக்கள்


கொரோனா தாக்கத்தால் கிழக்கு சீனாவின் ஹாங்க்சோவில் தனிமைப் படுத்தப்பட்ட இடத்தில் 200க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.

நோய்த்தொற்று பரவுதை தடுக்கும் நோக்கத்தோடு விருந்தினர் களுக்கு அவர்களின் அறை கதவிற்கு முன் சென்று உணவு வழங்கும் வகையில் 16 ரோபோக்களுக்கு புரோகிரம் செய்யப் பட்டுள்ளது.
குறித்த ரோபோக்கள், விருந்தினரின் அறைக்கு முன் சென்று அவர்களை அழைத்து உணவு வழங்குவதோடு, அவர்களை மகிழ்விக்க பாட்டு பாடி அசத்தும் வகையிலும் புரோகிரம் செய்யப் பட்டுள்ளதாம்.


Tags:
Today | 16, April 2025
Privacy and cookie settings