உதவினால் பரவும் கொரோனா - சுருண்டு விழும் மக்களின் அதிர்ச்சிக் காட்சி !

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக மக்கள் சாலையில் சுருண்டு மடியும் சம்பவங்களின் அதிர்ச்சிக் காட்சி தற்போது வெளி வந்துள்ளது.
சுருண்டு விழும் மக்கள்


சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அங்கு இதுவரை 131 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் பலியாகி இருக்கிறார்கள். 

அதே போல் இதுவரை 5300 பேருக்கு இந்த வைரஸ் தாக்கியுள்ளது. கொரோனா வைரஸ் சீனாவின் வுஹன் நகரத்தில் தோன்றிய கொடுமையான வைரஸ் ஆகும். 

இது தொடுதல் மூலமாக ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவ கூடியது. இந்த நோய் தாக்குதல் காரணமாக சீனாவில் மிகவும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. 
இயற்கை பேரழிவு நடக்கும் போது என்ன நடக்குமோ அதே போல் தான் தற்போதும் சீனாவில் நடந்து வருகிறது. 

நோய் பாதிக்கப்பட்ட வுஹன் நகரம் மொத்தமாக மூடப்பட்டுள்ளது. அங்கு போலீஸ் கூட வெளியே செல்ல வில்லை. அங்கு இதனால் பலர் தண்ணீர், உணவு இன்றி கடும் கஷ்டத்தில் இருக்கிறார்கள்.
உதவினால் பரவும் கொரோனா


சாதாரண நோய் தாக்கத்தி னால் இருக்கும் நோயாளிகள் கூட தங்களது மருத்துவத் தேவையினை சந்திப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சாலையில் சுருண்டு விழுந்து 10க்கும் மேற்பட்டோர் பலியாகி யுள்ளனர். சாலையிலும், மெட்ரோவில் சுருண்டு விழுந்து உயிரிழக்கும் மனிதர்களின் காட்சி தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சி யினை ஏற்படுத்தி யுள்ளது.
கொரோனாவின் பாதிப்பால் கீழே விழும் நபர்களை அடுத்தவர்கள் காப்பாற்றக் கூட முன் வரவில்லை. சுற்றி நின்று மக்கள் வேடிக்கை பார்த்து வருகின்றனர். 

மேலும் மாஸ்க் கிடைக்காமல் தண்ணீர் போத்தலை தலையில் அணிந்துகொண்டு உயிரைக் காப்பாற்றி வருகின்றனர்.




Tags:
Privacy and cookie settings