தலைமுடியை அறுத்து சித்ரவதை செய்து நிர்வாணமாக மிதக்க விட்ட ரூபஸ்ரீ சடலம் !

உடம்பெல்லாம் காயங்கள், டிரஸ் இன்றி.. தலைமுடி அறுக்கப்பட்ட நிலையில் ஆசிரியை ரூபஸ்ரீ கொடூரமாக கொன்ற வழக்கில் கொலை யாளியை கேரள போலீசார் கைது செய்துள்ளனர்.. 
நிர்வாணமாக மிதக்க விட்ட ரூபஸ்ரீ சடலம்


ரூபஸ்ரீயுடன் வேலை பார்க்கும் டிராயிங் மாஸ்டர்தான் கொலைகாரர் என முடிவாகி உள்ளது.

கேரள மாநிலம் பத்தனம் திட்டா மஞ்சேஸ்வரம் பகுதியை சேர்ந்த தம்பதி சந்திரசேகரன் - ரூபஸ்ரீ. சந்திரசேகரன் ஒரு பேங்கில் வேலை பார்க்கிறார். 

ரூபஸ்ரீ ஒரு பள்ளியில் டீச்சராக வேலை பார்த்து வந்தார்.. வயது 44 ஆகிறது..

இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ரூபஸ்ரீ வழக்கமாக ஸ்கூலுக்கு டூவீலரில்தான் செல்வார்.. 

அப்படித்தான், 16-ந் தேதியும் ஸ்கூலில் இருந்து நேராக, பிள்ளைகள் படிக்கும் ஸ்கூலுக்கு சென்றார்.. அதற்கு பிறகு சொந்தக்காரர் வீட்டு கல்யாணத் திற்கும் சென்றார்.. அதற்கு பிறகு தான் வீடு திரும்பவே இல்லை.

இதனால் கணவரும், உறவினர்களும் ரூபஸ்ரீயை எங்கெங்கோ சென்று தேடினர்.. ஆனாலும் கண்டு பிடிக்கவே முடிய வில்லை.. இந்நிலையில் தான், மஞ்சேஸ்வரம் பீச்சில் ரூபஸ்ரீ பிணமாக கிடந்தார். 

சடலம் பக்கத்திலேயே ரூபஸ்ரீயின் டூவீலரும் விழுந்து கிடந்தது. அவரது தலைமுடி அறுக்கப்பட்டு இருந்தது. உடம்பெல்லாம் பல காயங்கள் இருந்தன.. 
ரூபஸ்ரீயை கடத்தி, அளவுக்கு அதிகமாக சித்ரவதை செய்து யாரோ கொன்றிருக் கிறார்கள் என்று மட்டும் தெரிந்தது. பீச் ஓரத்தில் விழுந்த கிடந்த இந்த சடலத்தை பார்த்த மீனவர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் சொன்னார்கள்.

விரைந்து வந்த போலீசார் ரூபஸ்ரீ சடலத்தை மீட்டனர். உடம்பெல்லாம் அழுகி கிடந்தது.. எதற்காக தலைமுடியை அறுத்திருந்தனர்... பலாத்காரம் செய்து கொன்றார்களா என்று தெரியாமல் போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர். 


எப்போதும் ரூபஸ்ரீயிடம் 2 செல்போன்கள் இருக்கும்.. அதில் ஒரு செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது.

இன்னொரு செல்போனை தொடர்பு கொண்டால் போன் ரிங் போய் போனது.. 

ரூபஸ்ரீயின் வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் செல்போன் டவர் காட்டவும், இதனை வைத்து கொலையாளியை தேடும் முயற்சியில் போலீசார் இறங்கினர்.

இந்த சமயத்தில்தான் சுபஸ்ரீ பள்ளியில் வேலை பார்க்கும் டிராயிங் மாஸ்டர் வெங்கட்ரமணா மீது சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் தெரிவிக்கவும், போலீசார் அந்த டிராயிங் மாஸ்டரை பிடித்து விசாரித்தனர்.. 

இறுதியில் அவர்தான் கொலையாளி என்றும் முடிவாகி உள்ளது. சம்பவத்தன்று ரூபஸ்ரீ தனது மகளுக்கு ஸ்கூல் பீஸ் கட்ட சென்றுள்ளார். அப்போது ஒரு செல்போன் வந்துள்ளது.. 
அதை எடுத்து பேசியதுமே ரூபஸ்ரீ முகம் மாறிவிட்டது என்று அவரது மகள் போலீசாரிடம் தெரிவித்தார்.. இதனால் தான் செல்போன் சிக்னலை போலீசார் ஆராய்ந்தனர்.. 

அதில், கடைசியாக ரூபஸ்ரீ வெங்கட்ரமணா விடம் பேசியது தெரிய வந்தது. இதை யடுத்து தான் அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர். 

அப்போது வெங்கட்ரமணா வின் கார் டிக்கியில் முடிகள் இருப்பதையும் போலீசார் பார்த்துள்ளனர். அதனை கைப்பற்றி ஆய்வுக்கு உட்படுத்தியதில் அது ரூபஸ்ரீயின் தலைமுடி என்பது உறுதியானது.

இப்போது, வெங்கட்ரமணாவை கைது செய்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர் சொன்னதாவது: 

"நான் வேலைக்கு சேர்ந்த அதே வருஷம் தான் ரூபஸ்ரீயும் வேலைக்கு சேர்ந்தார்.. நட்பாக பழகினோம்.. ஒரே பள்ளி என்பதால் எங்களுக்குள் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்தது.. 


லோன் எடுத்தது தொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது..

இதனால் நான் ரூபஸ்ரீயை அடிக்கடி சந்தித்து தொந்தரவு செய்து வந்தேன்.. சம்பவத்தன்று வீட்டுக்கும் போயிருந்தேன்.

அப்போதும் எங்களுக்குள் தகராறு வந்தது.. அதனால் ரூபஸ்ரீயை பக்கெட்டில் உள்ள தண்ணீரில் மூழ்கடித்து கொன்றேன்.. அதன் பிறகு தான் காரில் கொண்டு சென்று கடலில் வீசினேன்.. 

இதற்கு என் டிரைவரும் உதவி செய்தார்" என்றார். இதை யடுத்து தொடர் விசாரணை டிராயிங் மாஸ்டரிடம் நடக்கிறது.. 
ரூபஸ்ரீ உடம்பெல்லாம் காயங்கள், டிரஸ் இன்றி கிடந்த சடலம், தலைமுடியை ஏன் வெட்டினார் என்ற கேள்விகளுக்கு விடை இனிமேல்தான் தெரியவரும்.
Tags:
Privacy and cookie settings