கொரோனா பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சையளித்த மருத்துவருக்கு ஏற்பட்ட சோகம் !

சீன நாட்டில் உள்ள உஹான் பகுதியில் கரோனா என்ற புதியவகை வைரஸ் பரவி யிருப்பது அண்மையில் கண்டறியப்பட்ட நிலையில், 
கொரோனா பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சையளித்த மருத்துவருக்கு ஏற்பட்ட சோகம்


இந்த வைரஸின் காரணமாக பாதிக்கப் பட்டவர்கள் அங்குள்ள மருத்துவ மனையில் அனுமதி செய்யப்பட்டு, தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர்.
இந்த வைரஸ் தாக்கம் அமெரிக்கா, தைவான், ஜப்பான், தென்கொரியா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நான்கு நாடுகளுக்கும் பரவி யுள்ளதாக தற்போது கண்டறியப் பட்டுள்ளது. 

இந்த வைரஸின் தாக்கத்தால் சுவாசக் கோளாறு பிரச்சனை ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

மேலும் கொரோனா வைரஸ் பரவிய முதல் நகரமான வுஹான் நகரம் முற்றிலும் முடக்கப் பட்டுள்ளது.

மேலும், அங்கிருந்து யாரும் மற்ற நகரங்க ளுக்கோ, மற்ற நகரத்தில் இருந்து வுஹானுக்கு செல்லவோ தடை விதிக்கப் பட்டிருக்கிறது.
இந்த வைரஸ் தாக்குதலின் அறிகுறியாக நுரையீரல் மற்றும் வைரஸ் தாக்குதல் நிமோனியா காய்ச்சல் போன்றவை ஏற்பட்டு, நுரையீரலின் வீக்கம் போன்றவை ஏற்பட்டு மரணம் ஏற்படுவ தாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. 


இந்த நோய்க்கு மருந்துகள் ஏதும் கண்டறியப் படாத நிலையில், நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நபர்களுக்கு நோய் தாக்கும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

எனவே, இந்த வைரஸை கட்டுப் படுத்த மருத்துவ குழுக்கள் அனைவரும் தீவிரமாக போராடி வருகின்றனர். 

இதில் வுஹான் நகரில் ஹூபியின் சின்ஹியா மருத்துவ மனையில் பணியாற்றி வந்த லியாங் உடோங் என்பவர் முதன்மை மூத்த மருத்துவராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், தற்போது அவர் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந் துள்ளதாக தகவல்கள் வெளி வந்துள்ளது. இது அனைவர்க்கும் அதிர்ச்சியை யும், பயத்தையும் ஏற்படுத்தி யுள்ளது.
Tags:
Privacy and cookie settings