இதய வால்வு பாதிப்புக்கு சிகிச்சை செய்வது !

0
தெற்காசியா முழுவதும் இன்றைய திகதியில் ஆயிரத்திற்கு எட்டு குழந்தைகள் பிறக்கும் போதே இதயத்தில் குறைபாடுகளுடன் பிறக்கிறார்கள். 
இதய வால்வு பாதிப்புக்கு சிகிச்சை
அதே போல் விளிம்பு நிலையில் உள்ள மக்கள் மற்றும் பொருளாதார நிலையில் பின்தங்கிய வர்களின் பிள்ளைகளில் மூன்று வயது முதல் 12 வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளிடம் ரூமாட்டிக் இதய வால்வு பாதிப்பு நோய் அதிக அளவில் காணப்படுகிறது.

இதயத்தில் பொதுவாக நான்கு அறைகள் உண்டு. இந்த நான்கு அறைகளில் இரத்தவோட்டம் என்பது இயல்பாக நடைபெற வேண்டும். 

இந்த நான்கு அறைகளையும் பிரிக்கக் கூடிய வால்வுகள் எனப்படும் சேம்பர்ஸ் இருக்கின்றன. இந்த நான்கு வால்வுகளில் ஏதேனும் ஒன்றிலோ அல்லது நான்கிலோ பாதிப்புகள் ஏற்படலாம்.

இதன் காரணமாக இதயத்தின் இயக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டு வரக்கூடிய நோயிற்கு ரூமாட்டீக் இதய வால்பு நோய் என்று மருத்துவர்கள் குறிப்பிடு கிறார்கள்.

இது பாக்டீரியா தொற்றால் வரக்கூடும். சிறிய வயதிலேயே தொண்டை வலி, மூட்டு வலி போன்ற பாதிப்புகள் இருந்தால், அதனுடைய எதிர் விளைவு களாக இதயத்தில் உள்ள இந்த வால்வுகளில் எதிரொலிக்கும். 

உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி, இத்தகைய வால்வுகளை பாக்டீரியா எனக்கருதி தாக்கத் தொடங்குவதால் இத்தகைய பாதிப்பு ஏற்படுகின்றன.

அதேபோல் சிலருக்கு பிறவியிலேயே இந்த நான்கு வால்வுகளில் ஏதேனும் ஒரு வால்வில் குறைபாடு இருக்கலாம். இதன் காரணமா கவும் ருமாட்டிக் இதய பாதிப்பு ஏற்படக்கூடும். 

வயது ஆக ஆக முதுமையி லும் இத்தகைய வால்வுகள் தளர்ச்சி அடையத் தொடங்கும். அதன் காரணமாகவும் இதய வால்வுகள் பாதிக்கப் படக்கூடும்.
இதய வால்வுகள் பாதிக்கப்படும் போது இந்த வால்வுகள் சுருங்கி விடக்கூடும் அல்லது இந்த வால்வுகளின் சுவர்கள் தடித்து விடும். 

இதன் காரணமாக இரத்த வோட்டத்தில் சீரற்ற தன்மை ஏற்பட்டு, இரத்தக் கசிவு அல்லது வால்வு பலவீனமாகும்.

அதாவது இதயத்திற்கு செல்ல வேண்டிய நல்ல இரத்தமும், இதயத்தி லிருந்து வெளியேற்றப்பட வேண்டிய அசுத்த இரத்தமும் ஒன்று சேரலாம் அல்லது வெளியேறுவதில் ஏதேனும் இடையூறு ஏற்படலாம். 

இதன் காரணமாக இதய வால்வுகள் பாதிப்படையும். இதற்கு உரிய தருணத்தில் இதய வால்வு மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இதை பற்றிய உங்கள் கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்.......
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings