வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் - பணிகள் தீவிரம் !

வலங்கைமான் வரதராஜம் பேட்டைத் தெருவில் உள்ள மகாமாரியம்மன் கோயிலில் அடுத்த மாதம் நடைபெறும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றது.
மகாமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்


திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சிக் குட்பட்ட பகுதியில் கும்பகோணம் & மன்னார்குடி சாலையில் குடமுருட்டி ஆற்றின் அருகில் மகாமாரியம்மன் கோயில் உள்ளது. 

இது சக்தி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை பாடைகாவடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

தமிழகத்தில் வேறு எங்கும் நடைபெறாத பாடைக்காவடி திருவிழாவில் இந்துக்கள் முறைப்படி இறந்தவர் சடலத்தை எடுத்து செல்வதை போன்று பாடைக்காவடி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவர். 
மேலும் தொட்டில் காவடி, அலகுகாவடி, பறவைகாவடி, பால்குடம், அங்கப் பிரதட்சனம், பால்காவடி உள்ளிட்ட காவடிகள் எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவர். 
வலங்கைமான் கோயில் கும்பாபிஷேகம்


இவ்வாறு புகழ்பெற்ற மகாமாரியம்மன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் கடந்த 2005ம் ஆண்டு நடைபெற்றது.

அதனை யடுத்து தற்போது கும்பாபிஷேகம் செய்யும் விதமாக கோயிலுக்கு வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகின்றது. 

வருகின்ற பிப்ரவரி 12ம் தேதி (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10. மணிக்குள் மகாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 

அதனை முன்னிட்டு முன்னதாக வருகின்ற பிப்ரவரி 8 -ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெறுகிறது. யாகசாலை பூஜைகள் நடைபெறு வதற்கான முன்னேற்பாடு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. 
அரபு நாட்டின் மந்தி பிரியாணி - விலை ரூ.12,000 !
விழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் சிவக்குமார், தக்கார் ரமணி, மற்றும் கோயில் பணியாளர்கள் கிராமவாசிகள் செய்து வருகின்றனர்.
Tags:
Privacy and cookie settings