சாமியார் நித்தியானந்தா வின் பிடியில் இருக்கும், மா நித்திய தத்வ பிரியானந்தா மாறி மாறி வெளியிட்ட மாறுபட்ட வீடியோக்கள் அவரது தந்தை ஜனார்த்தன சர்மாவுக்கு அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளன.
பெங்களூரை சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவர் தனது 3 மகள்கள், 1 மகனை பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் சேர்த்திருந்தார்.
ஆனால் சமீபத்தில் தான், இவரது புகார் ஒன்றால் மீண்டும் நித்யானந்தா லைம் லைட்டுக்கு வந்தார்.
தனது குழந்தை களை நித்யானந்தா குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்திற்கு கடத்தி சென்று சிறை வைத்திருப்பதாக ஜனார்த்தன சர்மா போலீசில் அளித்த புகார், நாடு முழுக்க, பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆசிரமத்தில் ரெய்டு
ஆசிரமத்தில் சோதனை நடத்திய போலீசார் அங்கிருந்த ஜனார்த்தன சர்மாவின் ஒரு மகள், மகனை மீட்டனர். மூத்த மகள் தத்துவப் பிரியானந்தா, மற்றொரு மகள் நந்திதா ஆகிய 2 பேரும் ஆசிரமத்தில் இல்லை.
அதிர்ச்சி யடைந்த ஜனார்த்தன சர்மா மகள்களை மீட்டு தன்னிடம் ஒப்படைக் கக்கோரி குஜராத் ஹைகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை நடந்த போதே, தத்துவப் பிரியானந்தாவும், நந்திதாவும் மேற்கு இந்திய தீவுகளின், பார்படாஸ் நாட்டில் இருந்து வீடியோ வெளி யிட்டனர்.
அதில் தங்கள், தந்தையால் தங்களது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே இந்தியா வர எங்களுக்கு விருப்பம் இல்லை என்று பரபரப்பு கருத்து தெரிவித்தனர்.
ஆனால், இந்த பதிலை நீதிமன்றம் ஏற்கவில்லை. எந்த நாட்டில் இருக்கிறீர்களோ அந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் ஜனவரி 16ம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
ஆபத்து
இந்த நிலையில்தான், தத்துவப் பிரியானந்தாவின் வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது. அதில், தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும்,
அடுத்த வீடியோ வெளி யிடுவதற்குள் நான் உயிரோடு இருப்பேனோ, இல்லையோ எனத் தெரிய வில்லை என்றும், தத்துவ பிரியானந்தா கதறுவது போல காட்சிகள் இருந்தன.
இந்த வீடியோ நாடு முழுக்க உள்ள பிரபல தொலைக்காட்சி ஊடகங்களிலும் வெளியானது.
ஜனார்த்தன சர்மாவும் அதிர்ச்சி யடைந்தார். இது குறித்து அகமதாபாத் போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஜனார்த்தன சர்மாவும் அதிர்ச்சி யடைந்தார். இது குறித்து அகமதாபாத் போலீசில் புகார் அளித்துள்ளார்.
புது வீடியோ
இந்நிலையில் தான், தத்துவப் பிரியானந்தா தனது சகோதரியுடன் இணைந்து, பேஸ்புக்கில், புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில், உயிருக்கு ஆபத்து என நான் கூறியது ஒன்றரை ஆண்டுக்கு முன்பு, ஒரு தொலைக்காட்சி சேனலில் நடத்தப்பட்ட தாக்குதலின்போதுதான். அது பழைய வீடியோ.
இதை நித்யானந்தா வுக்கு எதிராக, பேசியதுபோல திசை திருப்பி விட்டன ஊடகங்கள் என தாறுமாறாக ஆங்கிலத்தில் பேசியுள்ளனர்.
அந்த வீடியோ அவ்வப்போது கட் செய்து, எடிட் செய்யப் படிருப்பதை பார்த்தாலே புரிந்து கொள்ள முடிகிறது. எனவே தான், இந்த வீடியோவை நம்ப மறுக்கிறார், ஜனார்த்தன சர்மா.
ஜனார்த்தன சர்மா ஆதங்கம்
இதுபற்றி ஜனார்த்தன சர்மா அளித்துள்ள பேட்டியில், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக, எனது மகள், பேசியது உண்மை யானது.
ஒரு தந்தை என்ற அடிப்படையில், அவரது முக பாவங்கள் நன்றாக தெரியும். உயிருக்கு ஆபத்து என சாதாரணமாக யாரும் பேச மாட்டார்கள்.
முன்பு ஒருமுறை எனது மகள் பேசியதாக ஒரு பேச்சுக்கு, எடுத்துக் கொண்டாலும், 14 வயதி லிருந்து நித்தியின் கட்டுப்பாட்டில் இருக்கும் அவருக்கு
உயிருக்கு பாதுகாப்பில்லை என்கிற ஒரு சந்தர்ப்பம், சில வருடங்கள் முன்பு உருவாகி இருக்குமானால் அதுவும் தப்பாகத் தானே படுகிறது.
ரஞ்சிதா வீடியோ
நித்தியானந்தா தன்னை காப்பாற்றிக் கொள்ள எதையும் செய்வார். நித்தியானந்தா - ரஞ்சிதா வீடியோவை போலி என அவர் மறுத்தார்.
ஆனால், அது உண்மையானது என காவல்துறை நிரூபித்து விட்டது.
ஆனால், அது உண்மையானது என காவல்துறை நிரூபித்து விட்டது.
எனவே எனது மகளது வீடியோவை போலியானது என அவர் அறிவிக்க வில்லை. முன்பு பேசியது என சமாளிக்க சொல்லி யிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்.
அச்சம்
எனது குழந்தைகளை காப்பாற்றத் தான் போராட்டத்தை தொடங்கினேன். இன்று அது நித்யானந்தாவின் சாம்ராஜ்யத்தையே நிலைகுலைய செய்யும் அளவுக்கு தேசிய அளவில் பெரிதாக மாறி விட்டது.
எனவே, எனது குழந்தைகளுக்கு, நித்யானந்தாவால், பாதிப்பு ஏற்படுமோ என அஞ்சுகிறேன். இவ்வாறு ஜனார்த்தன சர்மா தெரிவித்துள்ளார்.
வழக்கு
ஜனவரி 16ம் தேதி குஜராத் உயர் நீதிமன்றத்தில் நித்யானந்தா வுக்கு எதிராக ஜனார்த்தன சர்மாவின் மகள்களை கடத்திய வழக்கு விசாரணைக்கு, வருகிறது.
அந்த வழக்கில் முதல் குற்றவாளி நித்தியானந்தா. அவரை கைது செய்ய கோர்ட் வாரண்ட் பிறப்பித்தால் தற்பொழுது மத்திய அரசால் பிறப்பிக்கப் பட்டுள்ள ப்ளூ கார்னர் நோட்டீஸ், ரெட் கார்னர் நோட்டீஸாக மாறிவிடும்.
எனவே, அதில் இருந்து தப்ப, இப்படி ஒரு பதில் வீடியோவை, வெளியிட வைத்திருக்க கூடும் என்கிறார்கள், நித்யானந்தா வழக்கு விசாரணையில் ஈடுபட்டுள்ள சில போலீசார்.
Thanks for Your Comments