அரசியலமைப்பு சட்டப்படி இந்தி இந்தியாவின் ஆட்சி மொழியாக ஏற்கப் பட்டுள்ளது. 1963ல் நாடாளு மன்றத்தில் பண்டிதநேரு இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் ஆட்சி மொழியாக தொடரும் என்று உறுதி யளித்தார்.
எனினும் 1965முதல் இந்தியும், ஆங்கிலமும் சேர்ந்தே வழக்கில் உள்ளன.
அரசியல்சட்டம் தமிழ், மலையாளம், உருது, கொங்கனி உள்ளிட்ட 22 மொழிகளை தேசிய மொழியாக ஏற்றுள்ளது.
அரசியல்சட்டம் தமிழ், மலையாளம், உருது, கொங்கனி உள்ளிட்ட 22 மொழிகளை தேசிய மொழியாக ஏற்றுள்ளது.
தேசியச் சின்னம்: சாரநாத் அசோக ஸ்தூபியில் அமர்ந்த நிலைச் சிங்கங்களே இந்திய தேசியச் சின்னம்.
நான்கு சிங்கங்களும் ஒன்று பின்புறம் உள்ளதால் முப்புற சிங்கங்களும் அதன் கீழ் அசோக சக்கரமும் சீறிப்பாயும் குதிரைகளும், காளைகளும் அதன் அடியில் ‘சத்தியமேவ ஜெயதே’ என்ற தேவநாகிரி எழுத்துமே இச்சின்னத்தின் முழுவடிவம்.
இச்சின்னம் இந்திய, மாநில அரசுகளின் நோக்கங் களுக்கே பயன்படுத்த வேண்டும். குடியரசுத் தலைவர் அமைச்சர்கள், ஆளுநர்கள், வெளிநாட்டு இந்திய தூதரர்கள் ஆகியோரே இவற்றை பயன்படுத்த முடியும்.
இந்திய அரசின் அதிகாரப்பூர்வ முத்திரை இது. அமைச்சர்கள் பயன்படுத்தும் எழுது தாள்களில் நீல வண்ணத்திலும், அதிகாரிகள் சிவப்பு வண்ணத்திலும்,
சில குறிப்பிட்ட அதிகாரிகள் அயல்நாட்டு தொடர்பிற்கு நீல வண்ணத்திலும், மக்களவை உறுப்பினர்கள் பச்சை வண்ணத்திலும், மாநிலங்களவை உறுப்பினர்கள் சிவப்பு வண்ணத்திலும் பயன்படுத்த வேண்டும்.
Thanks for Your Comments