முந்தானை முடிச்சு படத்தில் நடிக்க ஆசை - அமிதாப் பச்சன் !

1 minute read
முந்தானை முடிச்சு படத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஆசைப் பட்டதாக இயக்குநர் பாக்யராஜ் கூறியுள்ளார். 


புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி யுள்ள படம் பூதமங்கலம் போஸ்ட். இத்திரைப் படத்தை ராஜன் மலைச்சாமி இயக்கி நடித்துள்ளார். 

அஸ்மிதா, மவுனிகா ரெட்டி, பந்தா பாண்டி உள்ளிட்ட பல புதுமுகங்கள் இத்திரைப் படத்தின் மூலம் நடிகர்களாக அறிமுகமாக உள்ளனர். அர்ஜுன் இசையமைக்கும் இத்திரைப் படத்துக்கு பிரேம்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் பாக்யராஜ், தயாரிப்பாளர் கே.ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நோயெதிர்ப்பு மண்டலத்தின் நிலையை உணர்த்தும் அறிகுறிகள் !
நிகழ்வில் பேசிய இயக்குநர் பாக்யராஜ், முந்தானை முடிச்சு படத்தை அமிதாப் பச்சன் விருப்பட்டதால் அவருக்கு போட்டு காட்டினேன். 

நல்ல கதையம்சம் கொண்ட படம் என்பதால் இந்தியில் இந்தப்படத்தில் நடிக்க ஆசைப் படுகிறேன் என்றார். ஆனால் என்னை ஆக்‌ஷன் ஹீரோவாக ரசிகர்கள் பார்த்து விட்டார்கள். 

இந்த மாதிரி ரோலில் நடித்தால் ஏற்றுக் கொள்வார்களா என்று கேட்டார். 


இருந்தாலும் முந்தானை முடிச்சு பிடித்துப் போனதால் தயாரிப்பாளரிடம் சொல்லி என் சம்பளத்தை குறைத்துக் கொள்கிறேன் நீங்களும் பட்ஜெட்டை குறைத்துக் கொள்ளுங்கள். 

ஒரு வேளை படம் எதிர் பார்த்தபடி அமையாமல் போனால் நஷ்டப்படக் கூடாது என்றார். 

ஆனால் அதற்கு தயாரிப்பாளர் ஒத்துக் கொள்ளாததால் முந்தானை முடிச்சில் அமிதாப் நடிக்க முடியாமல் போனதாக பாக்யராஜ் தெரிவித்தார்.
Tags:
Today | 13, March 2025
Privacy and cookie settings