மாருதி காரை மாட்டு சாணத்தால் கோட்டிங் செய்தவருக்கு பெரிய ஆச்சரியம் ஒன்று கிடைத்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
கார்களை மாட்டு சாணத்தால் கோட்டிங் செய்வது சமீப காலமாக இந்தியாவில் டிரெண்ட் ஆகி வருகிறது.
இந்தியாவில் வெயில் வாட்டி வதைப்பதால், அதில் இருந்து தப்பிக்கும் நோக்கத்தில், ஒரு சிலர் தங்கள் கார்களை மாட்டு சாணத்தால் கோட்டிங் செய்து வருகின்றனர்.
குஜராத்தை சேர்ந்த பெண் ஒருவர் டொயோட்டா கரொல்லா காரை மாட்டு சாணத்தால் கோட்டிங் செய்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்த சம்பவம் சர்வதேச செய்தியாக மாறியது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்த சம்பவம் சர்வதேச செய்தியாக மாறியது.
இதன் பின்னர் இந்தியாவில் பலர் இதே போல் மாட்டு சாணத்தால் கார்களை கோட்டிங் செய்ய தொடங்கினர். இதன் மூலம் டெம்ப்ரேச்சர் குறைவதாக அவர்கள் தெரிவித்தனர்.
குஜராத் பெண்ணை தொடர்ந்து டாக்டர் ஒருவரும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரை மாட்டு சாணத்தால் கோட்டிங் செய்து பிரபலமானார்.
இந்த சூழலில், சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரை சேர்ந்த ஒருவர் தனது மாருதி சுஸுகி இக்னிஸ் காரை மாட்டு சாணத்தால் கோட்டிங் செய்ததற் காக போட்டி ஒன்றில் தற்போது முதல் பரிசை வென்றுள்ளார்.
ராய்ப்பூர் நகரில் சமீபத்தில், ரேலி ஒன்று நடைபெற்றது. இதில், கார் உரிமை யாளர்கள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். சுமார் 30 பேர் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ரேலியில் கலந்து கொள்பவர்கள் தங்கள் வாகனத்தை மற்ற வாகனங்களிடம் இருந்து வித்தியாசப் படுத்தி காட்ட வேண்டும்.
இறுதியில் தனித்துவமான மைய கருத்துடன் இருக்கும் வாகனங்களு க்கு பரிசு வழங்கப்படும். இந்த வகையில் ராஜேஸ் என்பவர் இந்த போட்டியில் முதல் பரிசை வென்றுள்ளார்.
அவர் தனது காரை மாட்டு சாணத்தால் கோட்டிங் செய்திருந்தார்.
பெண்கள் முன்னேற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பல்வேறு மைய கருத்துக்க ளுடன் இந்த போட்டியில் கார்கள் கலந்து கொண்டன.
பெண்கள் முன்னேற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பல்வேறு மைய கருத்துக்க ளுடன் இந்த போட்டியில் கார்கள் கலந்து கொண்டன.
இதில், வெற்றி பெற்ற ராஜேஸின் கார், மாட்டு சாணத்தால் கோட்டிங் செய்யப் பட்டிருந்ததுடன், மறு சுழற்சி என்ற மைய கருத்தை வலியுறுத்தி வந்திருந்தது.
போட்டி ஏற்பாட்டாளர்கள் அவருக்கு விருது வழங்கி கௌரவித்துள்ளனர். ஆனால் பணம் பரிசாக வழங்கப்பட்டதா? என்பது உறுதியாக தெரிய வில்லை.
மொத்த வாகனத்தையும் கவர் செய்வதற்கு 21 கிலோ மாட்டு சாணம் மற்றும் வைக்கோலை பயன் படுத்தியதாக ராஜேஸ் கூறியுள்ளார். இந்த கார் சாலையில் வந்த போது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
உலகில் அதிக வெப்பம் நிலவும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. குறிப்பாக கோடை காலங்களில் இங்கு வெயில் வாட்டி வதைக்கும்.
எனவே வெப்பத்தில் இருந்து தப்பிக்க பலர் இவ்வாறு புதுப்புது ஐடியாக்களை கண்டு பிடிக்கின்றனர்.
தற்போது கோடை காலம் நெருங்கி வருவதால், இது போன்ற சம்பவங்களை நாம் இன்னும் அதிகமாக பார்ப்பதற் கான வாய்ப்புகள் உள்ளன.
பொதுவாக வெளியில் இருக்கும் டெம்ப்ரேச்சரை விட காரின் கேபினுக்குள் டெம்ப்ரேச்சர் அதிகமாக இருக்கும் என்பது உண்மை தான்.
எனினும் மாட்டு சாணத்தால் காரை கோட்டிங் செய்வதால் கேபின் டெம்ப்ரேச்சர் குறையுமா? என்பது உறுதியாக தெரிய வில்லை.
ஆனால் காரின் பெயிண்ட்டிங் பாதிக்கப் படுவதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளன.
எனவே நிழலான பகுதியில் காரை பார்க்கிங் செய்வதும், தேவைப்படும் சமயங்களில் எல்லாம் ஏசியை பயன்படுத்துவதும் தான் நல்ல ஐடியாவாக இருக்கும்.