கூகுளில் தன் பெயரை தேடினால் அந்த மாதிரி படங்களாக வருகிறது என்று ஹீரோயின் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். மலையாளத்தில் திலீப், மடோனா நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான படம், கிங் லையர்.
லால் இயக்கி இருந்த இதில் மாடலாக நடித்திருந்தவர் நடாஷா சூரி. இது ஹிட்டானது. இதை யடுத்து இந்தியில் விஸ்வாஸ் பாண்டியா இயக்கிய, பாபா பாபா பிளாக் ஷீப் என்ற படத்தில் நடித்திருந்தார்.
மிஸ் இந்தியா
இப்போது அதாலத் என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். பூஷன் படேல் இயக்கும் இந்த ரொமான்டிக் த்ரில்லர் படத்தில் கரண் சிங் குரோவர், சோனாலி ராவத் உட்பட பலர் நடிக்கின்றனர்.
முன்னாள், மிஸ் இந்தியாவும் மாடலுமான இவர், இன்சைட் எட்ஜ் என்ற வலைத் தொடரிலுல் நடித்திருந்தார்.
ஆபாச புகைப்படங்கள்
இவர் ஃபிளின் ரெமெடியோஸ் என்பவர் மீது மும்பை தாதர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்திருந்தார்.
அந்தப் புகாரில், எனது பெயரைப் போல, நடாஷா சிங் சூரி என்ற பெயரில் ஆபாச தகவல் களையும் புகைப்படங் களையும் வலைதளங்களில் ஃபிளின் பதிவிட்டு இருந்ததாகக் கூறி இருந்தார்.
அதோடு, சமூக வலைத் தளங்களில் பொய்யாகக் கணக்கு களையும் உருவாக்கி தவறான புகைப்படங் களைப் பதிவிட்டிருந்த தாகவும் கூறியிருந்தார்.
பாத்ரூமில்
இது பற்றி அவர் கூறும் போது, 'இந்த தொல்லை 2019 நவம்பரில் தொடங்கியது. யாரோ என்னைக் குறி வைக்கத் தொடங்கினர்.
பாத்ரூமில், முகம் மங்கலாகத் தெரியும் பெண்ணின் ஆட்சேபனைக் குரிய படங்களை வெளியிட்டு என் பெயரையும் குறிப்பிட்டிருந்தனர்.
ஆபாச வலைத்தளங் களிலிருந்து படங்களை எடுத்து அவற்றில் எனது தலையை ஒட்டி, அந்த நபர் இதைச் செய்திருந்தார் என்று கூறியிருந்தார்.
கிளாமர் போட்டோஷூட்
அது நான் இல்லை என்றாலும் என்னோடு தொடர்புபடுத்தி சில தென்னிந்திய வெப் சைட்கள் என்னை அதில் தொடர்பு படுத்தி ஆபாசமான செய்திகளையும் வெளியிட்டுள்ளன என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் அதுபற்றி அவர் மேலும் கூறும்போது, நான் பல கிளாமர் போட்டோ ஷூட்களில் பங்கேற்றுள்ளேன் என்றாலும் நானே பாத்ரூமில் இருந்து நிர்வாண படம் எதையும் எடுத்ததில்லை.
கூகுளில் தேடினால்
கூகுளில் என் பெயரை டைப் செய்தால் ஆபாசப் படங்களும் நிர்வாணப் படங்களு மாகவே வருகின்ற. அதை நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறேன்.
இந்த வேலையில் ஈடுபட்ட அந்த நபர் மீது புகார் கொடுத்து விட்டேன். போலீசார் அவர் மீது வழக்கு பதிந்துள்ளனர் என்று கூறி யுள்ளார்.