"கல்யாணத்துக்கு முன்னாடியே நான் கர்ப்பமாக இருந்தேன்.. ஆனா குழந்தை யாருக்கு பிறந்தது என்று என் கணவருக்கு டவுட் இருந்தது.. அதான்" என்று சுஷ்மிதா அளித்த வாக்குமூலத்தி னால் போலீசார் அதிர்ந்து நின்றனர்!!
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள திருமால் புதுப்பட்டியை சேர்ந்தவர் அமல்ராஜ்... இவரது 11 மாத குழந்தை கடந்த 5-ம் தேதி இறந்து கிடந்தது.
தண்ணீர் தொட்டியில் இருந்து தான் குழந்தையை சடலமாக மீட்டனர்... அப்போது கணவர் அமல்ராஜ் தான் குழந்தையை கொன்றதாக அவரது மனைவி சுஷ்மிதா பகிரங்கமாக புகார் சொன்னார்..
மேலும் தன்னுடைய தந்தையுடன் சென்று போலீசிலும் புகார் தந்தார். இதனால் போலீசாரும் விறுவிறு விசாரணையில் இறங்கினர்.. அப்போது தான் ஆடிப்போய் விட்டனர் போலீசார்!!
காரணம்.. அந்த பிஞ்சுவை தண்ணீர் தொட்டியில் அமுக்கி.. குடும்பத்துடன் சேர்ந்து கொன்றது தாய் சுஷ்மிதாவும் தான்!
உடலில் மிகவும் அழுக்கான இடம் தெரியுமா?சுஷ்மிதா... வயது 18.. சென்ற வருடம் காரியாப் பட்டியில் ஸ்கூல் படித்துக் கொண்டிருந்தார்... அப்போதுதான் அமல்ராஜுடன் பழக்கம் ஏற்பட்டது..
பழக்கம் நெருக்கம் ஆகி.., கடைசியில் சுஷ்மிதா கர்ப்பமானார்! விஷயம் தெரியவரவும், ஸ்கூலில் இருந்து அவரை நிறுத்தி விட்டனர்... கர்ப்பத்துக்கு யார் காரணம் என்று விசாரித்து, பேச்சு வார்த்தையும் நடந்து..
ஒரு வழியாக சுஷ்மிதா - அமல்ராஜ் -க்கு திருமணம் முடிவானது. அதாவது சுஷ்மிதா 7 மாத கர்ப்பிணியாக இருந்த போது அமல்ராஜ் அவருக்கு தாலி கட்டினார்..
ஓரிரு மாதங்களிலேயே ஆண் குழந்தையும் இவர்களுக்கு பிறந்தது.. இந்த சமயத்தில், சுஷ்மிதாவுக்கு அவருடைய மாமன் மகனுடன் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது...
இது அமல்ராஜ் -க்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதனால், அந்த குழந்தை தன்னுடைய குழந்தை இல்லை என்று சொன்னார்.. மேலும் குழந்தையின் அருகில் கூட செல்லாமல் தவிர்த்தார்..
தொட்டுக்கூட பார்க்க வில்லை.. அமல்ராஜ் இப்படி ஒரு குண்டை தூக்கி போடவும், அமல்ராஜின் பெற்றோரும் அந்த குழந்தையை புறக்கணித்தனர்.. அழுதால்கூட அந்த பிஞ்சுவை தூக்குவதில்லை.
தன் வீட்டில் அந்த குழந்தை இருப்பதை அமல்ராஜ் விரும்பவில்லை.. அதனால், குழந்தையைக் கொன்று விடுமாறு சுஷ்மிதாவுக்கு சொல்லி உள்ளார்.. முதலில் சுஷ்மிதா மறுத்துள்ளார்..
அமல்ராஜின் பெற்றோரும் இதே ஐடியாவை தான் தந்தனர்... குழந்தையை கொன்றால் தான் வாழ்க்கை திரும்ப கிடைக்கும் என்று சுஷ்மிதா இறுதியாக முடிவு செய்தார்..
அதன்படி குழந்தையை கொல்ல நாள் குறித்தார் அமல்ராஜ்.. கடந்த 5ம் தேதி என்று முடிவெடுத்தார்.. தம்பதி மட்டுமே வீட்டில் இருந்தனர்.
அமல்ராஜ் குழந்தையின் தலையை பிடித்துகொண்டு, பாத்ரூம் டப்பிப்பில் இருந்த நீரில் மூழ்கடித்தார்.. அந்த சமயம் யாராவது வருகிறார்களா என்று கதவோரம் நின்று எட்டி எட்டி பார்த்து கொண்டிருந்தார் தாய் சுஷ்மிதா..
இறுதியில், குழந்தை இறந்து விட்டது என்று உறுதியானதும் தான் இருவரும் நிம்மதி அடைந்தனர்..
ஆனால் குழந்தை தூங்குவது போல அப்படியே சடலத்தை வீட்டில் படுக்க வைத்து, கண்வலி என்று சாக்கு சொல்லி ஆஸ்பத்திரிக்கு போயுள்ளார் சுஷ்மிதா.
திரும்பி வந்ததும், "டப்பில் தவறி விழுந்து விட்டதே, மயங்கிடுச்சே.. மூழ்கி மூச்சி பேச்சில்லாமல் இருக்கே.." என்று டிராமா செய்துள்ளார்... இவ்வளவையும் விசாரணையில் கேட்ட போலீசார் விக்கித்து நின்றனர்..
குழந்தையைக் கொலை செய்த சுஷ்மிதா, அமல்ராஜ், சுஷ்மிதாவின் தந்தை சூசை மாணிக்கம், அமல்ராஜ் தந்தை மரியலூகாஸ், தாய் விமலா என மொத்த பேரையும் அள்ளியது போலீஸ்..
இந்த சம்பவம் இப்போது வரை பெருத்த அதிர்ச்சியை பொது மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது..
படிக்கிற வயசு முதல் இறுதி வரை தவறு செய்துள்ளனர் சுஷ்மிதாவும், அமல்ராஜும்.. குழந்தை யாருக்கு பிறந்தது என்பதை டெஸ்ட் எடுத்து நிரூபித்திருக்க லாம்..
அல்லது குழந்தை இல்லாமல் கண்ணீருடன் அல்லாடும் எத்தனையோ பேர் உள்ளனர்.. அவர்களுக்கு தாரை வார்த்து, செய்த பாவத்தையாவது போக்கி யிருக்கலாம்..
குழந்தையின் பிறப்பின் மீது இருந்த சந்தேகத்தை போக்க, அக்குழந்தையை ஒரு குடும்பமே சேர்ந்து கொன்றதை யாராலும் மன்னிக்க முடியாது.. முக்கியமாக சுஷ்மிதாவை!!