உலகையே அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் கொரோனா வைரஸின் எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் படத்தை இந்தியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் வெளியிட்டு உள்ளனர்.
சில வாரங்களுக்கு முன் சீன விஞ்ஞானிகள் இதேபோல் கொரோனா வைரஸின் எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் படத்தை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் சீனாவை தாக்கி அங்கு பலர் பாதிக்கப்பட்டு வந்த தொடக்க காலங்களில் அது வுஹன் வைரஸ் என்று அழைக்கப்பட்டது.
தற்போது வைரஸ்களை வகைபுரிக்கும் சர்வதேச குழு மூலம் இந்த கொரோனா வைரஸ் (SARS) -CoV-2 என்று அழைக்கப் படுகிறது.
கொரோனா வைரஸ் குடும்பத்தை சேர்ந்த SARS-CoV-2 வைரஸ் மூலம் பரவும் நோய்தான் COVID-19 ஆகும்.
கொரோனா வைரஸ் குடும்பத்தில் மொத்தம் 6 வைரஸ்கள் தான் இருக்கிறது என்று கருதப்பட்ட நிலையில் தற்போது 7வதாக உருவாகி இருக்கும் வைரஸ் தான் SARS-CoV-2.
உலகம் முழுக்க இந்த புதிய கொரோனா வைரஸ் குறித்த ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது.
இந்தியா செய்த ஆராய்ச்சி
இந்த நிலையில்தான் கொரோனா வைரஸின் எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் படத்தை இந்தியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் வெளியிட்டு உள்ளனர்.
புனேவில் இருக்கும் மத்திய அரசின் தேசிய வைராலஜி நிறுவனம் - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR-NIV) ஆராய்ச்சியாளர் குழு இந்த படத்தை வெளியிட்டு இருக்கிறது.
டிரான்மிஷன் எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப் மூலம் இந்த படம் எடுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான ஆய்வு கட்டுரை இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப் பட்டுள்ளது.
என்.ஐ.வி புனேவில் எலக்ட்ரான் நுண்ணோக்கி மற்றும் நோயியல் துறையின் துணை தலைவர் அதனு பாசு தலைமையில் இந்த சோதனை நடந்துள்ளது.
யாருடைய ரத்தத்தில் இருந்து
இந்தியாவில் முதல் முதலில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட மூன்று பேரில் ஒருவரின் தொண்டையில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் மூலம் இந்த வைரஸ் கண்டு பிடிக்கப்பட்டு, படம் பிடிக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 30ம் தேதி கேரளாவில் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டது.
சீனாவின் வுஹனின் மருத்துவம் படிக்கும் கேரளா மாணவி ஒருவர் மூலம் கேரளாவில் கொரோனா பரவியது. இவரின் தொண்டையில் இருந்துதான் இந்த மாதிரி எடுக்கப்பட்டுள்ளது.
எப்படி வைரஸ் மாதிரியை எடுத்தார்கள்
இந்த வைரஸ் மாதிரியை தொண்டையில் இருந்து எடுப்பது மிகவும் எளிதான விஷயம்தான். ஆங்கிலத்தில் இதை throat swab என்று அழைப்பார்கள்.
அதாவது ஒரு பட்ஸ் போன்ற பஞ்சு கொண்ட சாதனம் மூலம் உள் நாக்கில் தொண்டைக்கு அருகே லேசாக வைத்து தேய்ப்பார்கள். அங்கு இருக்கும் எச்சில் கலந்த மாதிரியை இந்த பஞ்சு மூலம் எடுப்பார்கள்.
இதில் தான் அந்த வைரஸ் இருந்துள்ளது. இதை சோதனை செய்துதான் தற்போது புகைப்படத்தை வெளியிட்டு உள்ளனர். இந்த வைரஸ் மாதிரியை தொண்டையில் இருந்து எடுப்பது மிகவும் எளிதான விஷயம் தான்.
ஆங்கிலத்தில் இதை throat swab என்று அழைப்பார்கள். அதாவது ஒரு பட்ஸ் போன்ற பஞ்சு கொண்ட சாதனம் மூலம் உள் நாக்கில் தொண்டைக்கு அருகே லேசாக வைத்து தேய்ப்பார்கள்.
அங்கு இருக்கும் எச்சில் கலந்த மாதிரியை இந்த பஞ்சு மூலம் எடுப்பார்கள். இதில்தான் அந்த வைரஸ் இருந்துள்ளது. இதை சோதனை செய்துதான் தற்போது புகைப்படத்தை வெளியிட்டு உள்ளனர்.
கொரோனா வைரஸ் அப்படியே இருக்கிறது
எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் மூலம் எடுக்கப்பட்ட இந்த கொரோனா வைரஸ் படம் அப்படியே சீனாவின் வுஹனில் எடுக்கப்பட்ட கொரோனா வைரஸ் போலவே இருக்கிறது.
இதன் ஜீன்களை ஆராய்ச்சி செய்து பார்த்ததில் வுஹனில் இருந்த வைரஸ் உடன் அது 99.98% அப்படியே ஒத்துப்போய் உள்ளது.
வுஹனில் இருந்து நேரடியாக அப்படியே இந்த வைரஸ் இந்தியாவிற்கு பரவியது குறிப்பிடத்தக்து.
வட்ட வடிவம்
இந்த வைரஸ் படத்தில் காட்டப்பட்டு இருப்பது போல வட்ட வடிவத்தில் உள்ளது. பொதுவாக தண்டு போன்ற பகுதியை வெட்டினால் எப்படி அதன் மேல் வடிவம் இருக்குமோ அதே போல் வட்ட வடிவத்தில் உள்ளது.
இது நுனிப்பகுதியில் சிறு சிறு துகள்கள் போன்ற அடுக்குகள் உள்ளது. இதில் ஆச்சர்யம் அளிக்க கூடிய விஷயம், கொரோனா வைரஸ் குடும்பத்தில் இருக்கும் 7 வைரஸ்களும் ஏறத்தாழ ஒரே வடிவம் கொண்டது தான்.
ஆனால் குணாதிசயம் மட்டுமே ஒவ்வொரு முறையும் வீரியம் அடைந்து கொண்டே சென்றுள்ளது.
வளர்ந்தது முழுமையாக வளர்ந்து
இந்த ஆய்வு கட்டுரையின் மிக முக்கியமான இன்னொரு விஷயம் குறிப்பிடப் பட்டுள்ளது.
அதன்படி, உடலில் இருக்கும் கொரோனா வைரஸ் குழுவில் ஒரு குறிப்பிட்ட வைரஸ் மட்டும் முழுமையாக பாதுகாக்கப்பட்டு, மிக சிறப்பான கட்டமைப்பில், முழுமையாக வளர்ந்து உள்ளது.
இது போல வெகு சில நோயாளிகளின் உடலில் மட்டுமே முழுமையாக கொரோனா வைரஸ் வளர்ந்து, பாதுகாக்கப்பட்டு காணப்படும்.
ஏனென்றால் முழுமையாக வளரும் முன்பே கொரோனா வைரஸ் வேறு நபர்களுக்கு பரவும். அதாவது கருவிலேயே பரவும் தன்மை கொண்டது.
சீனா புகைப்படம்
ஆனால் இதன் முக்கியமான சில உடல் மூலக்கூறு பண்புகள் இன்னும் முழுமையாக யாருக்கும் தெரியவில்லை . சீனா கடந்த மாதம் வெளியிட்ட கொரோனா வைரஸ் படம் போலவே தான் இந்த வைரஸ் படம் உள்ளது.
பொதுவாக ஒரு வைரஸ் குறித்த ஆராய்ச்சியில் இது போன்ற படங்கள் அதிகம் உதவும். வைரஸ் தன்மை, அதன் செயல்பாடுகள் குறித்து அறிய இந்த படங்கள் அதிகம் உதவும்.
இந்தியா வெளியிட்டுள்ள இந்தப்படம், கொரோனா ஆராய்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என்கிறார்கள்.