சிலருக்கு காரணமே இல்லாமல் தலைசுற்றும்; சில சத்தங்கள் ஒத்துக் கொள்ளாது
அப்படியே மயக்கம் வருவது மாதிரி தலை கிறுகிறுக்கும். சுற்றியிருக்கும் மனிதர்களும் பொருள்களும் சுழல்வது போலத் தெரியும்.
எந்தவித நோய்த் தாக்குதலும் இல்லாத போது எதற்காக இப்படித் தலைச் சுற்றுகிறது என்று குழப்பமாக இருக்கும்.
பல் வலி வராமல் இருக்கனுமா அப்ப இதை சாப்பிடுங்க !
இந்தப் பிரச்னையை `வெர்டிகோ’ என்கிறார்கள் மருத்துவர்கள்.
வெர்டிகோ
வெர்டிகோ தலைச்சுற்றல் சில சமயங்களில் அச்சத்தினால் ஏற்படும். இதில் நம்முடைய தலை மட்டும் சுற்றுவது,
நம்மைச் சுற்றி உள்ள பொருள்கள் மட்டும் சுற்றுவது அல்லது நாம் இருக்கும் இடம் மட்டும் சுற்றுவதுபோலத் தலைசுற்றல் ஏற்படும்.
ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நீர்வறட்சி ஏற்படும்போது, இதுபோன்று தலைசுற்றல் ஏற்படலாம்.
இதனால் காது கேளாமை, உடல் சோர்வு போன்றவை உண்டாகும்.
மாத்திரை சாப்பிட சரியான முறை எது தெரியுமா?
அறிகுறிகள்...
* குமட்டல்
* வாந்தி
* நடப்பதில் சிரமம் (தள்ளாடுவது)
* அதிக வியர்வை
* பார்க்கும் பொருள்கள் மங்கலாக அல்லது இரண்டாகத் தெரிவது
* பேசுவதில் உளறல்
தடுக்க... தவிர்க்க..!
* இரவு நேரங்களில் 6 - 8 மணி நேரம் சீரான தூக்கம் அவசியம்.
* பாதாம் மற்றும் தர்பூசணியைச் சாறாகப் பருகலாம்.
* தேன் கலந்த இஞ்சி டீயைத் தினசரி குடிக்கலாம். இது குமட்டல் மற்றும் வாந்தியைக் கட்டுப்படுத்தும்.
அடிக்கடி பாராசிட்டமால் சாப்பிடுவீற்களா? படிங்க !
இந்தப் பிரச்னைக்கு மருந்து, மாத்திரைகள் மட்டும் தீர்வு அல்ல. யோகா செய்வதன் மூலம் வெர்டிகோ தலைச்சுற்றலைச் சரி செய்யலாம்.
தலைச் சுற்றலைத் தடுக்கும் 5 யோகா பயிற்சிகள் இங்கே...
4 . சுப்த பாதாங்குஸ்தாசனம் (Supta Padangusthasana) (அ) ஹேண்டு டு பிக் டோ போஸ் (Hand to big toe pose)
5 . தண்டாசனா (Dandasana) (அ) ஸ்டஃப் போஸ் (Stuff pose)
முதல்முறை செய்பவர்களின் கவனத்துக்கு...
* முதல்முறையாக இந்தப் பயிற்சிகளைச் செய்பவர்கள், ஒவ்வோர் அசைவையும் மெதுவாகச் செய்ய வேண்டும்.
* திடீரென ஏற்படும் உடல் அசைவாலும் தலைசுற்றல் ஏற்படலாம்.
* யோகா பயிற்சியாளர்கள் அல்லது இயற்கை மருத்துவர்களின் ஆலோசனைப்படி இந்தப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்வதால், உடல் மற்றும் மனம் அமைதி அடைவதை உணர முடியும்.