தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர் களுக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தாக்குகிறதா என்பது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வேகம் எடுக்க தொடங்கி உள்ளது. கொரோனா கட்டுப்படும் என்று எதிர் பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து வைரஸ் பரவும் வேகம் அதிகரித்து வருகிறது.
இட்லி வெஜ் உசிலி செய்வது எப்படி?
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்ட பின்பும் கூட தமிழகத்தில் கொரோனா தீவிரம் அடைந்து வருகிறது.
தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1821 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும் கொரோனா விலிருந்து 94 பேர் குணமடைந் துள்ளனர்.
தமிழகத்தில் நேற்று மேலும் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது.
பொதுவாக வாய்ப்பு குறைவு
பொதுவாக உலகம் முழுக்க யாருக்காவது ஒரு வைரஸ் தாக்கினால் அவர்களுக்கு மீண்டும் அந்த வைரஸ் தாக்க வாய்ப்புகள் குறைவு.
முட்டை பாண் பிரியாணி செய்வது எப்படி?
ஒருமுறை ஒருவரை வைரஸ் தாக்கினால், அவர்களுக்கு அந்த வைரசுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி உருவாகி விடும்.
இதனால் அவர்களுக்கு மீண்டும் அந்த வைரஸ் தாக்க வாய்ப்புகள் மிக மிக குறைவு.
ஆனால் கொரோனா இப்படி இல்லை. ஒருமுறை கொரோனா தாக்கினால் அவர்களுக்கு மீண்டும் கொரோனா வராது என்று கூற முடியாது.
சீனாவில் மீண்டும் வந்தது
தென்கொரியா மற்றும் சீனாவில் கொரோனா தாக்கிய சிலருக்கு மீண்டும் கொரோனா வந்தது குறிப்பிடத்தக்கது.
இதனால் ஒருமுறை ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கினால் மீண்டும் அவருக்கு வைரஸ் வராது என்று உறுதியாக சொல்ல முடியாது.
கொரோனா அழியும் நேரம் சிங்கப்பூர் பல்கலைக்கழகம் தகவல் !
கொரோனா தாக்கி குணமடைந்த ஒருவர் மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கிய வேறு ஒருவரோடு தொடர்பு கொண்டால், அவருக்கு மீண்டும் கொரோனா ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
தமிழகம் என்ன நிலை
இதனால் கொரோனா தாக்கி குணமடைந்த நபர்களும் கூட தொடர்ந்து தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்த நபர்களுக்கு கொரோனா மீண்டும் தாக்குகிறதா என்று கேள்வி எழுந்தது.
அதாவது ஒருவருக்கு கொரோனா வந்து அவர் குணமடைந்த பின் மீண்டும் அவருக்கு கொரோனா ஏற்படுகிறதா என்று கேள்வி எழுந்துள்ளது .
கொரோனா பாதிக்கப்பட்டவர் களுக்கு மீண்டும் வருகிறதா
இதற்கு நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். அதில், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்த யாருக்கும் மீண்டும் கொரோனா வரவில்லை.
கொரோனா மூலம் இந்தியாவுக்கு செக் வைக்கிறதா சீனா?
தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்ட யாருக்கும் மீண்டும் கொரோனா வராதது ஒரு வகையில் நல்ல விஷயம் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை தமிழகத்தின் நிலை இது தான் என்பது குறிப்பிடத் தக்கது.
உறுதியாக கூற முடியாது
ஆனால் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப் பட்டவர்களுக்கு மீண்டும் கொரோனா வராது என்று உறுதியாக சொல்ல முடியாது.
இதனால் தான் கொரோனாவில் இருந்து குணமடைந்த வர்களும் வீட்டில் 14 நாட்கள் வீட்டில் தனிமை படுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
முதல் பிளாஸ்மா சிகிச்சை பெற்ற கொரோனா நோயாளி - மருத்துவர்கள் சாதித்தது எப்படி?
கொரோனாவில் குணமடைந்த பின்பும் கூட மக்கள் தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.