நாங்க தப்லீக் மாநாட்டுக்கு போய் வந்தவர்கள்.. இப்போது குணமாகி விட்டோம்.. எங்கள் பிளாஸ்மா தருகிறோம்,
எடுத்து கொள்ளுங்கள் என்று டெல்லி மாநாட்டுக்கு போய் வந்த முஸ்லீம்கள் உதவ முன் வந்திருப்பது அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது!
நம் நாட்டிற்குள் கொரோனா வரவே வராது என்று உறுதியாக நம்பப்பட்ட நிலையில் தான், எதிர்பாராமல் வைரஸ் ஊருடுவியது.. அதன் தாக்கமும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் எவ்வளவு தான் தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொண்டிருந்தாலும் அதன் வீரியம் அதிகரித்து வருகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த வர்களின் உடலில், இந்த வைரஸை எதிர்க்கும் திறன் கொண்ட எதிர் அணுக்கள் அல்லது பிளாஸ்மா இருக்கும்...
இந்த எதிர் அணுக்களை எடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு செலுத்தும் போது அவரது உடலில் உள்ள வைரஸ் தொற்றை அழிக்க முடியும். இதன் மூலம் பாதிக்கப் பட்டவரும் குணமடைந்து விடுவார்.
இது தான் அந்த பிளாஸ்மா முறை!
நோயாளிகள்
இதற்காக ஒருவரின் உடலில் இருந்து 800 மி.லி. பிளாஸ்மா பிரித்தெடுக்கப் படும்... ஒரு கொரோனா நோயாளிக்கு 200 மி.லி. அளவு பிளாஸ்மா தான் செலுத்தப்படும்...
குணமடைந்த நோயாளி ஒருவரிடம் இருந்து எடுக்கும் பிளாஸ்மாவை 4 நோயாளிகளுக்கு செலுத்தி குணமாக்க முடியும்.
இதை கேரளா எப்போதோ தொடங்கி விட்டது.. பலரும் சரியாகினர்.. இந்த பிளாஸ்மா முறையை தான் நம் முதல்வரும் அறிவித்திருந்தார்.
தயக்கம்
வைரஸால் குணமடைந்தவர்கள் தாமாக முன் வந்து பிளாஸ்மா பரிசோதனைக்கு தங்களது அணுக்கள் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப் பட்டது..
ஆனால் குணமடைந்த பலரும் பிளாஸ்மா கொடுக்க தயக்கம் காட்டினர்..
இந்த சமயத்தில் தான் இஸ்லாமியர்கள் தங்கள் பிளாஸ்மாவை கொடுக்க முன் வந்துள்ளனர்.. இவர்கள் டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் ஆவர்.
மருத்துவம்
இந்தியாவில் தொற்று பரவவுவதற்கு காரணமே இஸ்லாமியர்கள் தான் என்றும் டெல்லி மாநாடு தான் என்றும் குற்றம் சாட்டப்பட்டது..
மத ரீதியான சர்ச்சைகளும் எழுந்தன.. அதே போல தொற்றால் பாதிக்கப் பட்டவர்கள் தங்களுக்கு மருத்துவம் செய்யும் டாக்டர்கள் மீது எச்சிலை துப்பி அவமரியாதை செய்யப் பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.
வீடியோ
வெறுப்புணர்ச்சி அதிகமானது.. அவர்கள் மீது ஒரு சாராருக்கு அதிருப்தியும் பெருகியது.. இது அத்தனையும் இப்போது நொறுங்கி கொண்டிருக்கிறது..
டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தோம்.. குணமடைந்து விட்டோம்.. எங்கள் பிளாஸ்மாவை தர முன் வந்துள்ளோம்..
அதனை பெற்று கொண்டு கொரோனா பாதிக்கப் பட்டவர்களை மீட்டெடுக்க வேண்டும் என வீடியோ மூலம் அரசிடம் தெரிவித்து வருகின்றனர்.
எஸ்வி சேகர்
இதனிடையே, இந்த செயல் பாஜக தரப்பை சிலிர்க்க வைத்துள்ளது எதிர் பாராத ட்விஸ்ட்.. பாஜக நாராயணன் முதல் எஸ்வி சேகர் வரை இதற்கு வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்..
டெல்லி சம்பவத்துக்கு பிறகு இஸ்லாமியர் களை அதிகமாக விமர்சித்து காட்டம் தெரிவித்திருந்தது பாஜக தரப்பு..
ஆனால் இப்போது அப்படியே தலைகீழ் மாற்றமாக இஸ்லாமியர்கள் செயலை வரவேற்றுள்ளது நெகிழ்ச்சியை தந்து வருகிறது...
மற்ற தரப்பினர் இதை பற்றி பெரிதாக கருத்து சொல்லாத நிலையில் பாஜக தமிழக புள்ளிகள் ட்வீட் போட்டு மகிழ்ச்சியை தெரிவித்தது தான் ஹைலைட் ஆக உள்ளது.
சுப நிகழ்ச்சிகள்
அதே போல, தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் கோயில்களும் மூடப்பட்டுள்ளன...
இதனால் கல்யாணம் உட்பட எந்த சுப நிகழ்ச்சிகளும் நடக்காததால், கோயில்களின் அர்ச்சகர்கள் சிரமத்துக் குள்ளாகி வருகின்றனர்.. அதனால் இவர்களுக்கும் சில இஸ்லாமியர்கள் உதவ முன் வந்துள்ளனர்..
தஞ்சாவூர் அய்யங்கடைத் தெரு பள்ளிவாசல் இமாம் முகமது ருஸ்தும் அலி ஏற்பாட்டின்படி, ரசாஏ முஸ்தபா அறக்கட்டளை சார்பில்,
தஞ்சாவூர் வடக்கு வீதியில் உள்ள விநாயகர் கோயில் பகுதியில் உள்ள 15 இந்து கோயில் அர்ச்சகர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.800 மதிப்புள்ள அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.
பாராட்டு
தொடர்ந்து பல்வேறு நல செயல்களால் இஸ்லாமியர்கள் திரும்பி பார்க்க வைத்து வருகின்றனர்..
எதையாவது சொல்லி துவேஷத்தை பரப்பி பிரிவினை உண்டுபடுத்த நினைக்கும் சில விஷமிகள் இதனால் வாயடைத்து போயுள்ளனர்..
எந்த அளவுக்கு வெறுப்பு பிரச்சாரம் செய்யப் பட்டதோ அது அத்தனையும் சுக்கு நூறாக நொறுங்கி கொண்டிருக்கிறது.. இஸ்லாமியர்கள் மனிதம் தழைத்து பெருகுகிறது.