கொசுதானே என்ன ஆகிவிடும் என்று அலட்சியப் படுத்த வேண்டாம் !

நோய்களின் தலைவன் கொசுக்களைப் பற்றி அறிவோம். பல நோய்கள் பரவுவதற்குக் காரணமாக இருப்பது தண்ணீர். அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது கொசுக்கள்.
கொசுதானே என்ன ஆகிவிடும்

மலேரியா முதல் டெங்கு வரை பல நோய்களைப் பரப்பும் வேலைகளை கொசுக்கள் செய்கின்றன. இந்த கொசுக்களைப் பற்றி சில தகவல்களை இங்கே கூறுகிறோம்.

உலகத்தில் 2,500 வகையான கொசுக்கள் உள்ளன. கொசு நீர் நிலைகளில்தான் முட்டையிடும். ஒரு சில கொசு அசுத்தமான நீரிலும், ஒரு சில கொசு சுத்தமான நீரிலும் முட்டையிடும்.
பிரம்மிக்க வைக்கும் கூர்நுனிக் கோபுரம் அதிசயங்கள் !
பெரும்பாலான கொசுக்கள் பகல் நேரத்தில் குளுமையான இடங்களில் தங்கி ஓய்வெடுத்து விட்டு மாலையில் பறக்க ஆரம்பிக்கும்.

ஒரு சில வகை கொசுக்கள் தான் பகலில் பறந்து வந்து கடிக்கும். வீடுகளில் உள்ள கொசுக்கள் பொதுவாக அதிக தூரம் பறப்பதில்லை.

ஒரு சில பெரிய வகை கொசுக்கள் பல மைல்கள் பறந்து செல்லும் திறன் பெற்றுள்ளன.
கொசு என்று அலட்சியப் படுத்த வேண்டாம்

கோடைக் காலத்தில் கோடை வெப்பத்தில் உயிர் வாழ முடியாது என்று அறியும் கொசுக்கள், குடிசை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் குட்டை போன்ற இடங்களுக்கு அருகே வாழ்கின்றன.

கோடை முடியும் வரை அப்பகுதிகளில் இருக்கும் கொசு, மழைக் காலம் துவங்கிய பிறகு அங்கிருந்து மற்ற இடங்களுக்குச் சென்று முட்டைகளை இட்டு இனப்பெருக்கம் செய்கின்றன.
முகத்தில் உள்ள ரோமங்களை அகற்றுவதற்கு என்ன செய்யலாம்?
கொசுக்கள் நம்மைக் கடிக்கும் போது அதனை அடிப்பதால், அதன் ஊசிப் பகுதி நமது உடலில் தங்கிவிட வாய்ப்பு உள்ளது.

கொசுக்கள் மனிதன் இருப்பதை பல மைல் தூரத்தில் இருந்தே உணரும் திறன் பெற்றுள்ளன. கொசுக்களை அழிக்க தற்போது பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.
Tags:
Privacy and cookie settings