இதயம் மிகவும் முக்கியமான உறுப்பு. தற்போது இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் மக்கள் அதிகம் பாதிக்கப் படுகின்றனர்.
மேலும் நாளுக்கு நாள் புதிய ஆரோக்கிய பிரச்சனைகளாலும் மக்கள் அவஸ்தைப்பட்டு வருகின்றனர். அதில் இதயம் சம்பந்தப்பட்ட ஓர் பிரச்சனை தான் இதய கட்டி.
இதயக் கட்டி என்பது இதய வால்வுகளில் அசாதாரண வளர்ச்சியாகும். இந்த கட்டிகள் தீங்கு விளைவிக்கக் கூடியவையாகவும் இருக்கலாம் அல்லது தீங்கற்ற தாகவும் இருக்கலாம்.
இதயக் கட்டிகளில் இரண்டு வகைகள் உள்ளன. அவையாவன:
* முதன்மை இதய கட்டிகள்
* மெட்டாடோஸ்டிக் இதய கட்டிகள்
முதன்மை இதய கட்டிகள்
இந்த வகை கட்டிகள் மற்றொரு வகை இதய கட்டிகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் அரிதானது.
முதன்மை இதய கட்டிகள் இதயத்தில் உருவாகும் மற்றும் அதில் பெலும்பாலானவை தீங்கற்ற கட்டிகளாகும். முதன்மை இதயக் கட்டியின் மிகவும் பொதுவான வகை மைக்ஸோமா ஆகும்.
மெட்டாஸ்டேடிக் இதய கட்டிகள்
மெட்டாஸ்டேடிக் இதய கட்டிகளானது மற்றொரு உறுப்பில் இருந்து ஆரம்பமாகும். பொதுவாக சிறுநீரகங்கள், மார்பகங்கள், சருமம் அல்லது நுரையீரல் என ஆரம்பித்து,
பின் இதயத்திற்கு பரவும். அனைத்து மெட்டாஸ்டேடிக் கட்டிகளும் புற்றுநோய் கட்டிகளாகும். இந்த வகை இதய கட்டிகளால் தான் பெரும்பாலானோர் பாதிக்கப்படுவர்.
என்ன அறிகுறிகள்?
இதய கட்டிகளுக்கு என்று குறிப்பிட்ட அறிகுறிகள் எதுவும் இல்லை. ஒவ்வொருவரின் உடல் நிலையைப் பொறுத்து, மிதமானது அல்லது தீவிர அறிகுறிகளை வெளிக்காட்டும்.
மேலும் இந்த அறிகுறிகள் மற்ற இதய நோயின் அறிகுறிகளைப் போன்று தான் இருக்கும்.
இதய கட்டி இருந்தால் வெளிப்படும் முக்கிய அறிகுறிகள் பின்வருமாறு:
* மூச்சுத்திணறல்
* அசாதாரண இதயத் துடிப்பு
* தாழ் இரத்த அழுத்தம்
* நெஞ்சு வலி
* தலைச்சுற்றல் மற்றும் உடல் சோர்வு
சிறிய அறிகுறிகள் பின்வருமாறு:
* திடீர் எடை இழப்பு
* மூட்டு இணைப்புக்களில் வலி
* கால் வீக்கம் மற்றும் அடிவயிறு வீக்கம்
* காய்ச்சல் அல்லது இருமல்
* சருமத்தில் ஆங்காங்கு சிவப்பு நிற சிறிய புள்ளிகள்
இதய கட்டிகள் எதனால் வருகிறது?
10 சதவீத நோயாளிகளுக்கு இதய கட்டிகள் வருவதற்கு பரம்பரை ஓர் காரணமாக இருக்கிறது. இதய கட்டிகள் வருவதற்கான காரணங்கள் மனிதனுக்கு மனிதன் வேறுபடும்.
ஆனால் பொதுவாக இதய கட்டிகள் வருதற்கு காரணமாக நினைப்பது நோயெதிர்ப்பு மண்டலத்தின் இயலாமை மற்றும் கட்டிகளுக்கு வழிவகுக்கும் உடலில் ஏற்படும் அசாதாரண வளர்ச்சியை ஒழிக்க முடியாமை ஆகும்.
அதுமட்டுமின்றி, இதயத்தில் கட்டிகள் வருவதற்கு கதிரியக்கம், குறிப்பிட்ட வைரஸ்கள், புகையிலை, நிக்கோட்டின், பென்சின் மற்றும் வெயிலில் அதிகம் சுற்றுவது போன்ற வைகளும் காரணங்களாகும்.
கண்டறிவது எப்படி?
இதய கட்டிகளைக் கண்டறிவது மிகவும் கடினம். ஏனெனில் இது மிகவும் அரிதானது மற்றும் அதன் அறிகுறிகள் மற்ற இதய நோய்களின் அறிகுறி களையும் கொண்டுள்ளது.
இதய முணுமுணுப்பு, அரித்மியா அல்லது விவரிக்க முடியாத இதய செயலிழப்பு அறிகுறிகளால் பாதிக்கப் பட்டவர்களுக்கு பரிசோதனையின் மூலம் முதன்மை இதய கட்டிகளை கண்டறிய முடியும்.
மேலும் உடலின் மற்ற பகுதிகளில் கட்டிகளைக் கொண்டவர் களுக்கு இதய செயலிழப்பின் அறிகுறிகள் வெளிப்பட ஆரம்பித்தது.
அதைத் தொடர்ந்து இதயத்தை பரிசோதித்ததில் இரண்டாம் வகை இதய கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதய கட்டிகள் இருப்பதைக் கண்டறியும் சோதனைகளாவன:
* மார்பக எக்ஸ்-ரே
* எக்கோகார்டியோகிராம்
* இதயம் எம்.ஆர்.ஐ.
* கரோனரி ஆஞ்சியோகிராபி
* இரத்த பரிசோதனைகள்
* டோமோகிராஃபி
* எலக்ட்ரோகார்டியோகிராம்
இதய கட்டிகளைத் தடுப்பது எப்படி?
இதய கட்டிகளை உண்டாக்கும் சில காரணிகளான பரம்பரை, வயது அல்லது பாலினம் போன்றவற்றை மாற்ற முடியாது.
இருப்பினும் இதய கட்டிகளின் அபாயத்தை குறைக்கும் சில செயல்களைப் பின்பற்றுவதன் மூலம், இதய கட்டிகள் வருவதைத் தவிர்க்கலாம்.
புகைப்பிடிப்பதைத் தவிர்க்கவும்
பெரும்பாலான இதய நோய்கள் வருவதற்கு முக்கிய காரணியாக இருப்பது புகைப்பிடிப்பது. சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் இதய வால்வுகளை பாதித்து,
தமனிகளின் சுவற்றில் ப்ளேக்குகளை உருவாக்குவதோடு, இதய கட்டிகளையும் உண்டாக்கும். எனவே உடனே இந்த கெட்ட பழக்கத்தைக் கைவிட முயற்சி செய்யுங்கள்.
தினசரி உடற்பயிற்சி
தினமும் உடற்பயிற்சி செய்து வந்தால், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
அதிலும் எப்போது ஒருவர் தினசரி உடற்பயிற்சி யுடன், ஆரோக்கிய மான உணவுகளையும் உட்கொண்டு, உடல் எடையை ஆரோக்கியமாக பராமரித்து வந்தால், எப்பேற்பட்ட நோய்களும் உடலை அண்டாது.
அளவாக குடிக்கவும்
மது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. அதிலும் ஒருவர் அளவுக்கு அதிகமாக எப்போதும் மது குடிக்கும் பழக்கம் கொண்டிருந்தால், அதனால் பெரும் ஆபத்தை தான் சந்திக்க வேண்டியிருக்கும்.
ஒரு வேளை உங்களால் மது குடிக்கும் பழக்கத்தை முழுமையாக தவிர்க்க முடியா விட்டாலும், அளவாக குடியுங்கள். அளவாக குடிப்பதால் எவ்வித ஆபத்தும் ஏற்படாது.
வெயிலில் அதிகம் சுற்றக்கூடாது
வெயிலில் வைட்டமின் டி உள்ளது தான். அதற்காக அளவுக்கு அதிகமாக வெயிலில் சுற்றினால், அது இதய கட்டிகளின் அபாயத்தை அதிகரிக்கும். எனவே வெயிலில் அதிகம் சுற்றுவதைத் தவிர்த்திடுங்கள்.