சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் எங்கும் தனது கோரமுகத்தை காட்டி வருகிறது.
அதில் இருந்து தப்பிக்க இந்தியாவில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கும் சூழல் உருவாகி உள்ளது. சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப் பட்டுள்ளன.
இதனால் வேலையிழந்து தவிக்கும் தமிழ் சினிமா தொழிலாளர்க ளுக்காக பெப்சி அமைப்பு நிதி திரட்டி வருகிறது.
திரைப்பிரபலங்கள் பலரும் நிதியுதவி செய்து வருகின்றனர். அந்தவகையில் பெப்சிக்கு நடிகர் விஜய் ரூ.25 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.
அதே போல் தமிழ்நாடு முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும், பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சமும் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இது தவிர கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சமும், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி ஆகிய
மாநிலங்களின் முதல்வர் நிவாரண நிதிக்கு தலா ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.1.30 கோடி நிதி கொரோனா தடுப்பு பணிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.