இன்ஜினுக்குள் இருக்கும் பிஸ்டன்கள், உலோகங்களால் ஆனவை. இவை உரசும்போது, வெப்பம் ஏற்பட்டு விரைவில் உலோகங்கள் தேய்ந்து விடும். அதற்கு, லூப்ரிகன்ட் தேவை.
அதுதான் இன்ஜின் ஆயில். இந்த ஆயிலின் விஸ்காஸிட்டி, அதாவது மசகுத்தன்மை குறைந்து உலோகங்கள் வெப்பத்தில் உருகி, தனது வடிவத்தை இழந்து கொஞ்ச நேரத்தில் செயலிழந்து விடும்.
இதைத் தான் இன்ஜின் சீஸ் ஆகிவிட்டது என்கிறோம். ஏழு கடல், ஏழு மலை தாண்டியெல்லாம் இன்ஜினின் உயிரைப் பாதுகாக்க வேண்டிய தில்லை. ஒழுங்காக இன்ஜின் ஆயிலை மாற்றினாலே போதும்.