வெளிநாட்டு இந்தியர்கள்.. எப்போது நாடு திரும்புவார்கள்.. அரசின் திட்டம் என்ன?

லாக்டவுன் முடிவுக்கு வந்த பிறகே வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர மத்திய அரசு திட்ட மிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அரசின் திட்டம் என்ன?

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் தற்போதைய நிலையில் 26000க்கும் அதிகமானோர் பாதிக்கப் பட்டுள்ளனர். 824 பேர் உயிரிழந்துள்ளனர். 
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பரவும் வேகம் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. 

இந்நிலையில் அடுத்த இரு மாதங்களில் கொரோனா வைரஸ் தொற்றால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்ற கவலை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க மார்ச் 24ம் தேதி தொடங்கி மே 3 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. 

இதன் காரணமாக சர்வதேச மற்றும் உள்ளூர் விமான சேவைகள் ரத்து செய்யப் பட்டுள்ளன. இதன் காரணமாக வளைகுடா நாடுகள் உள்பட பல்வேறு நாடுகள் இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கி தவித்து வருகிறார்கள். 

அவர்கள் தங்களை அரசு சிறப்பு விமானம் மூலம் அழைத்து வர வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
வளைகுடா நாடுகளும் இந்தியர்களை திரும்ப அழைத்து செல்லுமாறு ராஜாங்க ரீதியாக வற்புறுத்தி வருகின்றன. இந்தியாவில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பலரும் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். 

அவர்களை திரும்ப அழைத்து வரவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. 

இந்நிலையில் வெளியுறவு அமைச்சகம், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், ஏர் இந்தியா, மாநில அரசுகள் மற்றும வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரங்கள் 
வெளிநாட்டு இந்தியர்கள்.. எப்போது நாடு திரும்புவார்கள்

ஆகியவை நாடு திரும்ப விரும்பும் இந்திய நாட்டினரை வெளிநாடுகளில் இருந்து அழைத்துவர திட்ட மிட்டிருந்தன. 

இந்நிலையில் லாக்டவுன் நீக்கப்பட்ட பின்னரே இந்தியர்கள் திரும்பி அழைத்து வரப்படுவார்கள் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

அவர்களை சிறப்பு விமானங்கள் அல்லது வழக்கமான விமானங்கள் மூலம் மீண்டும் விமான சேவை தொடங்கப் பட்டவுடன் அழைத்து வரப்படுவார்கள் என்றும் 
ஆனால் லாக்டவுன் சூழ்நிலையைப் பொறுத்து மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 

ஆனால் நாடு திரும்ப விரும்பும் இந்தியர்கள் விமான டிக்கெட்டு களுக்கு கட்டாயம் பணம் செலுத்த வேண்டியது இருக்கும் என்று கூறப்படுகிறது.
Tags:
Privacy and cookie settings