கொரோனா வைரஸ் லாக்டவுன் காலத்தில் பெரும்பாலான அத்தியாவசியம் தவிர அனைத்தும் முடங்கி யுள்ளன.
இந்த நிலையில் லாக்டவுன் காரணத்தினால் வண்டிகள் செல்லாததால், பெரும் பாலானவர்கள் தங்களது வாகனத்திற்கான இன்சூரன்ஸினை புதுபிக்க வில்லை என்றும் கூறப்படுகிறது.
இதில் உள்ள நல்ல விஷயம் என்னவெனில் இந்த லாக்டவுன் காரணத்தினால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடப்பதால், கடந்த 60 நாட்களில் குறைவான விபத்துகள் தான் உள்ளதாகவும்,
இதனால் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கணிசமான அளவே இன்சூரன்ஸ் க்ளைம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் லாக்டவுனினால் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு சற்று ஆறுதல் கொடுக்கும் வகையில்,
அக்கோ ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட் நிறுவனம், அது தவிர இன்னும் சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பாலிசிகள் புதுபிப்பதில் 10-15% தள்ளுபடிகள் அளித்துள்ளன.
இது மூன்றாம் தரப்பு பாலிசிகளுக்கும் சில தள்ளுபடிகளை வழங்கி யுள்ளதாகவும் அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதே பாரதி ஆக்ஸா நிறுவனம் (Bharti AXA General Insurance Company Ltd) தங்களுடன் நீண்ட காலமாக உள்ள வாடிக்கை யாளர்களுக்கு சில தள்ளுபடியை வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
எனினும் தற்போதைய நிலவரப்படி, அனைத்து காப்பீட்டாளர் களும் இந்த குறிப்பிடத்தக்க தள்ளுபடிகளை வழங்கவில்லை.
கொரோனாவால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது தொழில் வளர்ச்சி 25 -30% வீழ்ச்சியினை இந்த துறை சந்திக்கலாம் என்றும் எதிர் பார்க்கப்படுவதாக இத்துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதற்கு முக்கிய காரணம் புதிய காப்பீடுகள் விற்பனை குறைந்துள்ளது. மேலும் லாக்டவுன் காரணமாக இன்சூரன்ஸ் புதுபித்தலும் குறைவு என்று பாலிசி பஜார்.காமின் மோட்டார் வணிகத் தலைவர் சஜ்ஜா பிரவீன் சவுத்ரி கூறியுள்ளார்.
இதே டிஜிட்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் ஆதர்ஷ் அகர்வால் மோட்டாருக்கான இன்சூரன்ஸ் புதுபித்தல் விகிதம் குறைந்து விட்டது. மேலும் உரிமைகோரல் எண்ணிக்கையும் குறைந்து விட்டது.
கொரோனா உணர்த்தும் மோசமான அறிகுறி - அசால்டா இருக்காதீங்க !
ஆனால் பிரீமியங்களைக் குறைக்க நிறுவனம் திட்டமிட வில்லை. ஏனெனில் விரைவில் க்ளைம்கள் அதிகரிக்கும் என்று எதிர் பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.
காப்பீட்டாளார்கள் எந்த அளவுக்கு தள்ளுபடியை வழங்குவார்கள் என்பது அவர்களின் தயாரிப்புகளை பொறுத்தது.
எனினும் பொதுவாக வாகன பிரீமியங்கள் 10% குறையும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது.
எப்படியோங்க கொரோனாவால் முடங்கிக் கிடக்கும் வாகன ஓட்டிகளுக்கு இது சற்று ஆறுதலை கொடுக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.