தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் ஊரடங்கு மற்றும் சுய தனிமைப் படுத்துதல் போன்றவை நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது.
தற்போது நமது வாழ்க்கையில் அக்கறை, கவனம் மற்றும் அன்பு போன்ற குணநலன்கள் அதிகரித்துள்ளது.
உடல் ஆரோக்கியத்தை பற்றி கவலைப்படாமல் இருந்தவர்கள் அனைவரும் தற்போது தங்கள் சுகாதார நடவடிக்கைகள் மூலம் ஆரோக்கியத்தை பேணுகின்றனர்.
சுற்றுப் புறத்தைப் பற்றி அக்கறை இல்லாதவர்கள் கூட தற்போது தங்கள் வீடுகளின் அருகில் மரங்கள் நடுவதை நாம் காணலாம்.
எப்போதும் ஹோட்டல் உணவு உட்கொண்டிருந் தவர்கள் தற்போது வீட்டு சமையலில் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஒரு குறிப்பிட்ட வகையில் இந்த வகை சமூக விலகல் நமக்கு பல நல்ல பழக்கங்களை சொல்லிக் கொடுத்திருக்கிறது என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் சில விஷயங்கள் சரியாக இருப்பதில்லை.
சமூகத்தில் இருந்து தனிமைப் படுத்திக் கொண்டிருப்பதால் நமது உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்பது குறித்த ஆராய்ச்சியில் ஆராய்ச்சி யாளர்கள் சில தகவல்களை கண்டறிந்துள்ளனர்.
அதாவது சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்திக் கொள்வதால் கொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.
ஆனால் இதயம் தொடர்பான பல்வேறு பாதிப்புகள் அதிகரிக்கலாம் என்று அந்த ஆய்வு கூறுகிறது. ஆம், சமூக விலகல் காரணமாக மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயம் 40% அதிகரிக்கிறது.
சமூக விலகல் மற்றும் இதய நோய்
குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நமக்கு அன்பானவர்கள் ஆகியோருடன் இணைந்து இருப்பது நமக்கு மனநிறைவையும் சந்தோஷத்தையும் கொடுக்கும்.
குடும்பம் மற்றும் நண்பர்களிடருந்து விலகி இருப்பவர்கள் அவர்களை விரைந்து காண்பதற்கு ஆவலோடு காத்திருக்கின்றனர்.
பொதுவாக நீண்ட நாட்கள் நமக்கு நெருக்க மானவர்களோடு பேசாமல் இருந்தால் மனம் நிலை கொள்ளாமல் இருக்கும்.
தற்போது ஊரடங்கு காரணமாக பலரும் தனக்கு நெருக்க மானவர்களை நீண்ட நாட்களாக காண முடியாத நிலையில் உள்ளனர்.
இது இதய ஆரோக்கி யத்தை பாதிக்கும். இந்த காலகட்டத்தில் இதய நோய்க்கான வாய்ப்பு அதிகரிக்க இது ஒரு முக்கிய காரணமாக இருக்க முடியும்.
ஆராய்ச்சி
ஒரு குறிப்பிட்ட ஆராய்ச்சி குழுவை சார்ந்தவர்கள் 4,300க்கும் அதிகமான பங்கேற்பாளர் களைப் பற்றி தொடர்ந்து 13 ஆண்டுகள் ஆய்வு நடத்தி வந்தனர்.
இந்த விவரிக்கப்பட்ட ஆராய்ச்சியில் பல்வேறு வயதினர் கலந்து கொண்டனர்.
இந்த ஆராய்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு இதய நோய்க்கான தாக்கம் ஆராய்ச்சிக்கு முன்வரை இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
அரசியல், ஆன்மீகம் அல்லது நண்பர்கள் குழு, திருமண உறவு, குடும்ப பின்னணி மற்றும் பிற சமூக தொடர்பு களுடனான அனைத்து வகையான சமூக ஆதரவையும் உள்ளடக்கிய
சமூக தனிமைப் படுத்தப்பட்ட காலத்தை இந்த பங்கேற்பாளர்கள் பின்பற்றுவதை இந்த குழு ஒரு நெருக்கமான சோதனைக்கு உட்படுத்தியது.
ஆராய்ச்சியின் முடிவு
இந்த 13 ஆண்டு கால ஆராய்ச்சியின் முடிவில் 339 பேருக்கு இதய நோய் பாதிக்கப் பட்டிருப்பதாகவும், 530 பேர் இறந்ததாகவும் கண்டறியப்பட்டது.
இதற்கு முக்கிய காரணம் சமூக விலகல் மற்றும் சமூகத்துடன் கொண்ட தொடர்பில் குறைவு ஏற்பட்டது என்று தெரிய வந்தது.
சமூகத்துடன் ஆழமான தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதால் இதய ஆரோக்கியம் அதிகரிக்கிறது என்பது இந்த ஆய்வின் மூலம் நமக்கு தெரிய வருகிறது.
இதய ஆரோக்கியத்திற்கான முக்கிய காரணிகள்
இதய ஆரோக்கி யத்திற்கு, ஆரோக்கியமான இரத்த அழுத்தம், ஆரோக்கியமான கொழுப்பின் அளவு மற்றும்
ஆரோக்கிய மான உடல் எடை போன்ற பாதுகாப்பு காரணிகளின் பங்கைப் போன்றது தான் சமூகத்துடனான உறவு என்பதும்.
நாம் இதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் மற்றும் நமது ஒட்டுமொத்த ஆரோக்கி யத்தையும் நீண்ட ஆயுளையும் மேம்படுத்த
சமூக தனிமைப் படுத்தலுடன் தொடர்புடைய சிக்கல்களைச் சமாளிப்பதற் கான சிறந்த வழிகளைக் கண்டறிய வேண்டும் என்று மற்றொரு ஆராய்ச்சி கூறுகிறது.
தொழில்நுட்ப உதவி அவசியம்
எது எப்படி இருந்தாலும் சமூகத்துடன் கூடிய தொடர்பை நாம் துண்டிக்கக்கூடாது. சமூகம் என்பது நமது ஆரோக்கி யத்தை தீர்மானிக்கும் ஒரு முக்கிய காரணியாகும்.
இந்த ஊரடங்கு நிறைவடைந்து எல்லாம் சரியாகும் போது அவசியம் நமது உறவுகளை நேரில் சென்று சந்திப்பது நல்லது.
அதுவரை தொழில் நுட்பங்களின் உதவியில் அவர்களுடன் தொடர்பில் இருக்க முயற்சியுங்கள்.