சென்னையில் அதிக கேஸ்கள் மருத்துவமனைகளில் இடம் உள்ளதா? உண்மை பின்னணி !

சென்னையில் உள்ள கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் எவ்வளவு இடங்கள் மீதம் இருக்கிறது, எத்தனைகள் பெட்களில் ஏற்கனவே நோயாளிகள் இருக்கிறார்கள் என்று விவரம் வெளியாகி உள்ளது.
சென்னையில் அதிக கேஸ்கள் மருத்துவமனைகளில் இடம் உள்ளதா?

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு தினமும் கேஸ்கள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 1458 பேருக்கு கொரோனா கேஸ்கள் ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தில் மொத்த பாதிப்பு 30152 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20955 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை கேஸ்கள் அதிகரித்து வருவதால் சென்னை மருத்துவமனைகளில் போதிய இருக்கைகள் இல்லை, பெட்கள் நிரவி வருகிறது என்று செய்திகள் வெளியானது. 

இது தொடர்பாக தற்போது உண்மை விவரம் வெளியாகி உள்ளது.

என்ன விவரம்
என்ன விவரம்
இந்த நிலையில் சென்னையில் கொரோனா சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனைகளில் மீதம் இருக்கும் பெட்களின் விவரம் பின்வருமாறு. 

எஸ்ஆர்எம் மெடிக்கல் கல்லூரியில் மொத்தம் 100 பெட்கள் இருக்கிறது. அங்கு 62 பெட்கள் பயன்படுத்தப் பட்டுள்ளது. 

38 பெட்கள் மீதம் உள்ளது. ஸ்ரீ ராமச்சந்திரா மீடிக்கல் கல்லூரியில் மொத்தம் 150 பெட்கள் இருக்கிறது. அங்கு 23 பெட்கள் பயன்படுத்தப் பட்டுள்ளது. 127 பெட்கள் மீதம் உள்ளது.

பில்லோர்த் மருத்துவமனை
பில்லோர்த் மருத்துவமனை

பில்லோர்த் மருத்துவமனை, சென்னையில் மொத்தம் 32 பெட்கள் இருக்கிறது. அங்கு 31 பெட்கள் பயன்படுத்தப் பட்டுள்ளது. 1 பெட் மீதம் உள்ளது. சவீதா மெடிக்கல் கல்லூரியில் மொத்தம் 200 பெட்கள் இருக்கிறது. 
அங்கு 32 பெட்கள் பயன்படுத்தப் பட்டுள்ளது. 168 பெட்கள் மீதம் உள்ளது. அப்போலோ மருத்துவமனை வானகரத்தில் மொத்தம் 54 பெட்கள் இருக்கிறது. அங்கு 64 பெட்கள் பயன்படுத்தப் பட்டுள்ளது.

நோபல் மருத்துவமனை நிலை
நோபல் மருத்துவமனை நிலை
நோபல் மருத்துவ மனையில் மொத்தம் 50 பெட்கள் இருக்கிறது. அங்கு 49 பெட்கள் பயன்படுத்தப் பட்டுள்ளது. 1 பெட் மீதம் உள்ளது. காவிரி மருத்துவ மனையில் மொத்தம் 50 பெட்கள் இருக்கிறது. 

அங்கு 50 பெட்கள் பயன்படுத்தப் பட்டுள்ளது. மேல்மருத்துவத்தூர் ஆதி பராசக்தி மெடிக்கல் கல்லூரியில் மொத்தம் 185 பெட்கள் இருக்கிறது. அங்கு 9 பெட்கள் பயன்படுத்தப் பட்டுள்ளது. 176 பெட்கள் மீதம் உள்ளது.

ஸ்ரீ பாலாஜி மெடிக்கல் கல்லூரி விவரம்

ஸ்ரீ பாலாஜி மெடிக்கல் கல்லூரியில் மொத்தம் 80 பெட்கள் இருக்கிறது. அங்கு 80 பெட்கள் பயன்படுத்தப் பட்டுள்ளது. மாதா மெடிக்கல் கல்லூரியில் மொத்தம் 110 பெட்கள் இருக்கிறது. 
அங்கு 1 பெட் பயன்படுத்தப் பட்டுள்ளது. 109 பெட்கள் மீதம் உள்ளது. ஏசிஎஸ் மெடிக்கல் கல்லூரியில் மொத்தம் 195 பெட்கள் இருக்கிறது. 195 பெட்கள் மீதம் உள்ளது.

டாக்டர் மேத்தா மருத்துவமனை விவரம்
டாக்டர் மேத்தா மருத்துவமனை விவரம்
டாக்டர் மேத்தா மருத்துவமனையில் மொத்தம் 62 பெட்கள் இருக்கிறது. அங்கு 44 பெட்கள் பயன்படுத்தப் பட்டுள்ளது. 18 பெட்கள் மீதம் உள்ளது. பிலோர்த் மருத்துவமனையில் மொத்தம் 31 பெட்கள் இருக்கிறது. 

அங்கு 30 பெட்கள் பயன்படுத்தப் பட்டுள்ளது. 1 பெட் மீதம் உள்ளது. பீ வெல் மருத்துவமனையில் மொத்தம் 36 பெட்கள் இருக்கிறது. அங்கு 18 பெட்கள் பயன்படுத்தப் பட்டுள்ளது. 18 பெட்கள் மீதம் உள்ளது.

இடம் இருக்கிறது
இடம் இருக்கிறது
பாரத் மெடிக்கல் கல்லூரியில் மொத்தம் 60 பெட்கள் இருக்கிறது. 60 பெட்கள் மீதம் உள்ளது. ஸ்ரீ சத்யா சாய் மெடிபீக்கள் கல்லூரியில் மொத்தம் 20 பெட்கள் இருக்கிறது. 20 பெட்கள் மீதம் உள்ளது. 
டாக்டர் காமாட்சி மெமோரியல் மருத்துவமனையில் மொத்தம் 16 பெட்கள் இருக்கிறது. அங்கு 15 பெட்கள் பயன்படுத்தப் பட்டுள்ளது. 

1 பெட்கள் மீதம் உள்ளது. விஜயா குரூப் ஆப் மருத்துவமனையில் மொத்தம் 90 பெட்கள் இருக்கிறது. அங்கு 53 பெட்கள் பயன்படுத்தப் பட்டுள்ளது. 37 பெட்கள் மீதம் உள்ளது.

அதிக இடங்கள்
அதிக இடங்கள்

இதன் மூலம் சென்னையில் எதிர் பார்த்ததை விட அதிக இடங்கள் இருக்கிறது. முக்கியமாக சென்னையில் இருக்கும் சிறிய தனியார் மருத்துவ மனைகளில் அதிக இடங்கள் உள்ளது. 
அதே போல் இங்கெல்லாம் அதிகமாக வென்டிலேட்டர்கள் மீதம் இருக்கிறது. தமிழகத்தில் பெரும்பாலும் நோயாளிகளுக்கு வென்டிலேட்டர்கள் வைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings