உலகளவில் விமானங்கள் இரண்டு விதிமுறைகள் படி பறக்கின்றன. அவை..
1 . விஷூவல் பிளைட் ரூல்ஸ் (VFR)
2 . இன்ஸ்ட்ருமெண்ட் பிளைட் ரூல்ஸ் (IFR).
1 . விஷூவல் பிளைட் ரூல்ஸ் (VFR)
இது மிகவும் சிறிய ரக விமானங்களில் போதிய கருவிகள் இல்லாத போது பயன் படுத்தும் முறை. இதற்கு விமானி வெளியே பார்த்து தான் பறக்க வேண்டும்.
திசை காட்டி இருந்தாலும் அங்காங்கே நிலத்தில் உள்ள அடையாளங்களை வைத்து பறக்கும் பாதையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
இரவில் நகரங்களின் விளக்குகளின் அடர்த்தியை வைத்து அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.
2 . இன்ஸ்ட்ருமெண்ட் பிளைட் ரூல்ஸ் (IFR).
இப்போது உருவாக்கப்படும் எல்லா விமானங்களும் இந்த விதி முறையில் பறக்கும். இதற்கு என்று குறைந்த பட்ச கருவிகள் இருக்க வேண்டும் என்ற வரையறை உள்ளது.
உதாரணத்திற்கு இதிலேயே பல நிலைகள் உள்ளன.
இந்த கருவிகள் மூலம் நாம் எங்கே எவ்வளவு தொலைவில் இருக்கிறோம் போன்ற செய்திகளை அறிய முடியும். வெளியே பார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.
அதனால் இரவுக்கும் பகலுக்கும் வித்தியாசம் இல்லை.
வானிலை மோசமாக உள்ள நேரத்தில் ஓடுபாதை தூரத்தில் இருந்து தெரியா விட்டாலும் இக்கருவிகளின் துணைக் கொண்டு ஓடுபாதையின் அருகில் வரை செல்ல முடியும். சில விமானங்களில் தானே இறங்கிக் கொள்ளும் வசதியும் உண்டு.