சிலருக்கு அறுவை சிகிச்சை செய்த பின்பும் மீண்டும் குடல் இறக்கம் ஏற்பட்டு விடுகிறதே, ஏன்?’ இந்தக் கேள்வி பலருக்கும் இப்போது ஏற்பட்டிருக்கும்.
அதற்கான காரணங்கள் இவை:
சிலர் குடல் இறக்கத்தின் ஆரம்பத்தில் அலட்சியமாக இருந்து விடுவார்கள். அறுவை சிகிச்சைக்கு பயந்து பலர் குடல் இறக்கத்தைப் புறக்கணிப்பார்கள். இதனால் குடல் இறக்கத்தில் அடைப்பு ஏற்பட்டு விடும்.
விளைவு, நோயாளியின் குடல் வயிற்றுக்குள் போகாமல், ரத்த ஓட்டம் தடைபட்டு, குடல் அழுகி, மிக ஆபத்தான நிலைமையில் வரும் போது அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும்.
அப்போது அழுகிய குடலை வெட்டியெடுத்து விட்டு, மீதிக் குடலைச் சீராக்க வேண்டும். பிறகு குடல் இறக்கத்தையும் சரி செய்ய வேண்டும். இதுசற்று சிக்கலான அறுவை சிகிச்சை.
நோயாளியைப் பிழைக்க வைப்பதே இந்தச் சிகிச்சையின் போது மருத்துவரின் முக்கிய குறிக்கோளாக இருக்கும்.
இச்சிகிச்சை அவசர அவசரமாக செய்யப் படுவதால், தையல் சரியாகப் போடவில்லை என்றால், கிருமித் தொற்று மற்றும் ரத்த ஒழுக்குக் கட்டியினால் அறுவை சிகிச்சை புண் ஆறுவதற்குத் தாமதமானால்
அல்லது தசைகளின் பலவீனம் காரணமாக போடப்பட்ட தையல் விட்டுப் போனால்… இப்படிப் பல காரணங்களால் இந்த நோயாளிகளில் ஒரு சிலருக்குக் குடல் இறக்கம் மீண்டும் வர வாய்ப்புள்ளது.
மேலும், இடைவிடாத இருமல்,காசநோய், அதிக பளுவைத் தூக்குதல், பருமன், வயிறு உப்புசம் போன்ற காரணங்களாலும் குடலிறக்கம் மீண்டும் வரலாம்.
உடல் பலவீனமாக இருந்தாலும் குடல் இறக்கம் மீண்டும் ஏற்படலாம். ஆகவே, அலட்சியமும் அறுவை சிகிச்சை பயமும் தான் ஆபத்தில் முடியும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
குடல் இறக்கத்தைப் பொறுத்த வரை நோயின் ஆரம்ப நிலையிலேயே மருத்துவரிடம் காண்பித்து, திட்டமிட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டு விட்டால் குடல் இறக்கம் மீண்டும் வராது.
இடுப்பு வார்முதியவர்கள், இதய நோயாளிகள், நுரையீரல் நோயுள்ளவர்கள் மற்றும் வேறு சில காரணங்களால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாதவர்கள் ‘இடுப்பு வார்’ (Truss) அல்லது வயிற்றுக் கச்சையை (Abdominal Belt) அணிந்து கொள்ளலாம்.
படுத்துக் கொண்டு, குடல் பிதுக்கத்தை முழுவதுமாக வயிற்றுக்குள் தள்ளிக் கொண்டு, இந்த இடுப்பு வாரை அணிந்து கொள்ள வேண்டும்.
இதைப் பகலில் மட்டும் அணிந்து கொண்டால் போதும். இரவில் அணியத் தேவையில்லை. இது ஒரு தற்காலிக நிவாரணமே தவிர முழு சிகிச்சை ஆகாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
அறிகுறிகளை அலட்சியப் படுத்தினால், குடலில் ரத்த ஓட்டம் தடைபட்டு, குடல் அழுகி விடும். இதனால் உயிருக்கே ஆபத்து வரும்.
இடைவிடாத இருமல், காசநோய், அதிக பளுவைத் தூக்குதல், பருமன், வயிறு உப்புசம் போன்ற காரணங்களாலும் குடலிறக்கம் மீண்டும் வரலாம். உடல் பலவீனமாக இருந்தாலும் குடல் இறக்கம் மீண்டும் ஏற்படலாம்.