முஸ்லீம் ராஷ்டிரிய மன்ச் என்ற முஸ்லீம் அமைப்புக்கு, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பயிற்சி முகாமை நடத்துகிறது. இது தொடர்பான பயிற்சி முகாம், நாக்பூரில் ஜூன் 7ம் தேதி தொடங்கியது.
15 மாநிலங்களைச் சேர்ந்த முஸ்லீம் ராஷ்டிரிய மன்ச் அமைப்பைச் சேர்ந்த தொண்டர்கள் இதில் கலந்து கொண்டனர்.
பயிற்சி வகுப்பின் தொடக்கத்தில், ஆர்.எஸ்.எஸ். முன்னாள் தலைவர் கே.எஸ். சுதர்சன் பேசுகையில்,
இங்கிலாந்துக் காரர்கள், முஸ்லீம் களையும், இந்துக் களையும் தங்களது அரசியல் சுயலாபத்திற் காக பிரித்து வைத்தனர்.
இங்கிலாந்துக் காரர்கள், முஸ்லீம் களையும், இந்துக் களையும் தங்களது அரசியல் சுயலாபத்திற் காக பிரித்து வைத்தனர்.
அந்த பிரிவினைவாத அரசியலை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் தான் நம்மைப் பிரித்து வைத்துள்ளது.
ஆனால் கலாச்சாரம் நம்மை சேர்த்து வைக்கிறது. அன்பு, அமைதி ஆகிய தத்துவங்களை மக்களிடையே நாம் பிரசாரம் செய்ய வேண்டும்.
நாம் அனைவருக்கும் ஒரே மூதாதையர் தான், கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கங்க் அனைத்தும் ஒன்று தான் என்பதை இந்தியாவைச் சேர்ந்த முஸ்லீம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
வேற்றுமையில் ஒற்றுமை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாம் என்ற மாபெரும் மதத்தின் உயரிய தத்துவங்களை நாம் புரிந்து கொண்டு அமைதியுடனும், சகோதரத்து வத்துடனும் வாழ வேண்டும்.
பார்சிகள், யூதர்கள், ஆங்கிலோ இந்தியர்கள் தான் இந்தியாவின் சிறுபான்மை யினர். முஸ்லீம்கள் வெளியி லிருந்து இந்தியாவுக்கு வரவில்லை.
இந்த மண்ணைச் சேர்ந்தவர்கள் தான் முஸ்லீம்கள். தங்களது வழிபாட்டு முறை, மதப் பழக்கங்களை அவர்கள் மாற்றிக் கொண்டிருக்கலாம்.
ஆனால் அவர்களுக்கும், இந்து சகோதரர் களுக்கும் ஒரே மூதாதையர்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
முஸ்லீம் ராஷ்டிரிய மன்ச் அமைப்பின் காப்பாளராக தன்வீர் அகமது, தேசிய ஒருங்கிணைப் பாளர்களாக முகம்மது அப்சல், சலாபத் கான் ஆகியோரும்,
ஒருங்கிணைப்பு செயலாளராக கிரீஷ் ஜுயூல், மக்கள் தொடர்பாளராக உணர் இலியாசி ஆகியோர் செயல் படுவார்கள் என பயிற்சி வகுப்பின் போது அறிவிக்கப் பட்டது.
Thanks for Your Comments