வங்கிகள் குறை தீர்ப்பாயத் திட்டம் 2006-ஆம் ஆண்டு வணிக மயமாக் காப்பட்ட வங்கிகள் (பொதுத் துறை மற்றும் தனியார்த் துறை),
பிராந்திய ஊரக வங்கிகள், முறைப் படுத்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் போன்ற வற்றின் சேவையில் உள்ள வாடிக்கையா ளர்களின் மனக் குறைகளை அவர்கள் தெரிவிப் பதற்கு வழி வகுக்கிறது.
வங்கிகள் வாடிக்கை யாளர்களின் மனக்கு றையினை ஒரு குறிப்பிட்ட காலத்தி ற்குள் தீர்த்து வைப்பது கட்டாய மாகும்.
வங்கிகளின் பதிலில் வாடிக்கை யாளர் திருப்தி அடையா விட்டாலோ அல்லது வங்கிகள் வாடிக்கை யாளரின் குறைகளை தீர்த்து
வைக்கா விட்டாலோ வாடிக்கை யாளர்கள் வங்கிகள் குறை தீர்ப்பாய த்திடம் மேல் முறை யிடலாம்.
வங்கி வாடிக்கை யாளர்கள் கீழ்க்கண்ட வங்கி சேவைகள் தொடர்பான தங்களது குறைகளை விண்ணப் பமாக தெரிவிக் கலாம்
ஒரு வங்கி கணக்கி லிருந்து மற்றொரு கணக்கிற்கு பண மாற்றம்
வரை வோலைக்கு பணம் பெறுதல்
ஏடிஎம் மற்றும் பணம் பெறும் அட்டை
கடன் அட்டை
இணையதளம் மூலம் வங்கி வசதி
வங்கிக்கடன்
நடமாடும் வங்கி மற்றும் இதர
குறைகளின் அடிப்படை
வங்கி குறைதீர்ப் பாயம் அல்லது வங்கியிடம் எந்த ஒரு நபரும் கீழ்க்கண்ட எந்த வங்கி அல்லது இணையதள வங்கி சேவை குறைகள்
அல்லது இதர சேவைக் குறைபாடு களின் அடிப்படையில் தங்களுடைய குறைகளை பதிவு செய்யலாம்.
பணம் கொடுக் காமல் இருத்தல் அல்லது பணம் கொடுப்பதில் தேவையற்ற காலதாமதம், வரை வோலை, இதர பில்கள் மூலம் பணம் பெறுவதில் காலதாமதம்.
ஏடிஎம், கடன் அட்டை, பணம் பெறும் அட்டை போன்றவை சம்பந் தமான சேவை குறை பாடுகள்.
எந்த ஒரு சேவைக் காகவும் குறைந்த அளவு தொகை யினை முறையான காரண மின்றி ஏற்றுக் கொள்ளாமல் இருத்தல், தேவையி ல்லாமல் கட்டணம் வசூலித்தல்.
பணம் திரும்ப தராமல் இருத்தல் அல்லது பணம் திரும்ப தருவதில் கால தாமதம். வரை வோலை, டிராப்ட்கள், மற்றும் பண ஆணை போன்ற வற்றை தராமல் இருத்தல் அல்லது இவற்றை தருவதில் காலதாமதம்.
வேலை நேரத்தினை முறையாக பின்ப ற்றாதது. கடன் மற்றும் முன்பணம் போன்ற வற்றைத் தவிர இதர வங்கி சேவைகள் அளிக்காமை அல்லது கால தாமதம் செய்தல்.
டெபாசிட் தொ கையினை திரும்ப தராமல் இருத்தல், வாடிக்கை யாளரின் வங்கிக் கணக்கில் பணம் போடுதல், போன்ற வற்றில் கால தாமதம்,
வட்டி விகிதம், டெபாசிட், நடப்புக் கணக்கு மற்றும் இதர கணக்கு போன்ற வற்றில் ரிசர்வ் வங்கியின் வரை முறைகளை பின் பற்றாமல் இருத்தல்.
ஓய்வூதியம் தராமல் இருத்தல் அல்லது ஓய்வூதியம் தருவதில் காலதாமதம்.
ரிசர்வ் வங்கி, இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு வரி செலுத்தும் போது ஏற்றுக் கொள்ளாமல் இருத்தல் அல்லது ஏற்றுக் கொள்ளு வதில் காலதாமதம்.
அரசாங்க பிணையப் பத்திரங்கள் போன்ற வற்றை விநியோகி க்காமல் இருத்தல், விநியோ கிப்பதில் ஏற்படும் குறைபாடுகள், விநியோகிப்பதில் காலதாமதம்.
போதுமான காரணங் களின்றியும், முன்னறி விப்பின்றியும் டெபாசிட் கணக்குகளை முடித்தல்.
கணக்கு களை முடிப்பதில் அல்லது மூடுவதற்கு ஒப்புக் கொள்ளாதது அல்லது காலதாமதம் செய்தல். வங்கியால் வரையறுக்கப் பட்ட செயல் முறைகளை பின்பற் றாததது.
கடன் விண்ணப் பங்களை பரிசீலித்து கடன் வழங்க ஒப்புக் கொள்ளுதல் மற்றும் கடன் வழங்கு தலில் காலதாமதம்.
முறையான காரணங்கள் இல்லாமல் கடன் விண்ணப் பங்களை விண்ணப்ப தாரரிடமிருந்து பெற்றுக் கொள்ள மறுத்தல்.
வாடிக்கையா ளர்களிடன் வங்கிகள் நடந்து கொள்ள வேண்டிய விதி முறைகளை பின்பற்றாமல் இருத்தல்.
கடன்களை வசூலிக்க முகவரை நியமிப்பது போன்ற வற்றில் ரிசர்வ் வங்கியின் வரை முறை களை பின்பற்றாமல் இருத்தல்.
எங்கு குறைகள் பற்றிய விண்ணப் பத்தினை சமர்ப்பிப்பது ?
உங்கள் கணக்கு இருக்கும் குறிப்பிட்ட வங்கிகளில் குறைகள் அடங்கிய விண்ணப் பத்தினை சமர்ப்பிக்க வேண்டும். குறைகள் பற்றிய விண்ணப் பத்தினை அதற்குரிய அதிகாரி யிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
குறைகள் பற்றிய விண்ணப்பம் ஒரு வெள்ளைத் தாளிலோ அல்லது அதற்குரிய வரையறுக்கப் பட்ட விண்ணப்ப மாகவோ வங்கிகளில் சமர்ப்பிக் கப்படவேண்டும்.
குறைகள் பற்றிய விண்ணப் பத்தினை பெற்றுக் கொண்டவுடன் அதற்குரிய அதிகாரி விண்ணப் பத்தினை பெற்றுக் கொண்டதற்கான உறுதி அட்டையினை விண்ணப் பதாரரிடம் தர வேண்டும.
குறைகள் பற்றிய விண்ணப்பத்தினை வங்கியிடம் சமர்ப்பிக்க வேண்டிய செயல்முறை :
குறைகள் பற்றிய விண்ணப் பத்தினை கடித மாகவோ அல்லது இணையம் மூலமா கவோ வங்கியிடம் சமர்ப்பிக்கலாம்.
கடிதம் வாயிலாக நீங்கள் விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதாக இருந்தால் கீழ்க்கண்ட ஆவணங்களை உங்கள் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
உங்களுடைய வங்கிக் கணக்கு பாஸ் புத்தகம் – அடையாள ஆவணமாக உங்களுடைய வேண்டு கோளுக்கான சாட்சிக்கான ஆவணங்கள் குறிப்பிட்ட வங்கி அதிகாரி யிடமிருந்து
விண்ணப் பத்தினை சமர்ப்பித் தவுடன் விண்ணப் பத்தினை சமர்ப்பித் ததற்கான உறுதி அட்டையினை பெற்றுக் கொள்ளவும்.
இணையம் மூலம் உங்கள் குறைகளை பதிவு செய்தல்
பெரும்பாலான பொதுத்துறை வங்கிகளும், தனியார் வங்கிகளும் இணையம் மூலம் வாடிக்கை யாளர்கள் தங்கள் குறைகளை பதிவு செய்ய வசதியினை ஏற்படுத்தியுள்ளன.
உங்களுடைய குறைகளை பதிவு செய்ய கீழ்க்கண்ட இணையதள முகவரியினை சொடுக்கவும்.
சில வங்கிகள் இன்னும் இணையம் மூலம் வாடிக்கை யாளர் குறைகளை பதிவு செய்வதற்கு வசதிகள் ஏற்படுத் தவில்லை.
உங்களுடைய வங்கி அத்தகையாதக இருப்பின் கடிதம் வாயிலா கவே உங்கள் குறைகள் பற்றிய விண்ணப்பத்தினை பதிவு செய்ய முடியும்.
குறைகளை பற்றிய விண்ணப்பத்தினை பதிவு செய்தவுடன் என்ன செய்வது?
வாடிக்கை யாளர்கள் குறைகளை தீர்க்க வங்கிகள் பொதுவாக 2-3 வார காலம் எடுத்துக் கொள்ளும். ஆனால் இந்த கால இடைவெளி வங்கி களுக்கு வங்கி வேறுபடும்.
உங்களுடைய விண்ணப் பத்திற்கு வங்கி பதிலளிக் காமலோ அல்லது குறைகளை தீர்ப்பதில் காலதாமதம் செய்தாலோ நீங்கள் வங்கியினை தொடர்பு கொண்டு உங்கள் விண்ணப் பத்தினை பற்றி நினை வூட்டலாம்.
இதற்கு பின்பும் வங்கிகள் பதிலளிக் காமல் இருந்தால் நீங்கள் ‘ வங்கி குறை தீர்ப்பாய த்தினை’ அணுகலாம்.
வங்கிகள் உங்களுக்கு அளித்த பதிலில் நீங்கள் திருப்தி அடையாமல் இருந்தா லும் நீங்கள் வங்கி குறை தீர்ப்பாய த்தினை அணுகலாம்.
உங்களுடைய குறைகள் பற்றிய விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ள வங்கிகள் குறை தீர்ப்பாயம் நாடெங்கிலும் 15 மண்டல அளவிலான அலுவல கங்களைக் கொண்டுள்ளது
வங்கி குறை தீர்ப்பாயத்திற்கு எவ்வாறு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பது?
ஒவ்வொரு வங்கிகள் குறை தீர்ப்பாயமும் ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் அதிகாரத் தினை கொண்டுள்ளன.
உங்கள் மாநிலம் அல்லது வங்கிக்கு மேலுள்ள வங்கிகள் குறை தீர்ப்பாயத்திடம் உங்களது விண்ணப் பத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.
வங்கிகள் குறை தீர்ப்பாயத்திடன் உங்கள் குறைகள் பற்றிய விண்ணப் பங்களை கடிதம் வாயிலாகவோ அல்லது இணையம் வாயிலாகவோ நீங்கள் தெரிவிக்கலாம்
கடிதம் வாயிலாக நீங்கள் உங்கள் விண்ணப் பத்தினை தீர்ப்பாய த்திடம் அளிக்க விரும் பினால் அதன் இணைய தளத்தில் விண்ணப்பம் என்ற பொத் தானை சொடுக்கி விண்ணப் பத்தினை பதிவிறக்கம் செய்யலாம்.
உங்களுடைய விண்ணப் பத்துடன் உங்களுடைய வேண்டு கோளுக்கு ஆதாரமாக கீழ்க் கண்ட ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.
சேவைக் குறைபாடு பற்றி வங்கிக்கு நீங்கள் தெரிவித்ததற்கு வங்கி வழங்கிய சான்று
உங்களுடைய வங்கிக் கணக்கு புத்தக பாஸ் புத்தகத்தின் நகல் அடையாளத் திற்கான சான்றாக வங்கிக்கு அவற்றின் சேவைக்குறை பாட்டினை
நீங்கள் தெரிவத்தற்கான நகல் வங்கிக்கு நீங்கள் சேவை குறைபாடு பற்றிய விண்ணப்பம் குறித்து நீங்கள் வங்கிக்கு
நினை வூட்டியதற்கான சான்று உங்களுடைய முறையீட்டுக்கு ஆதாரமாக இருக்கும் எந்தவொரு ஆவணமும்
வங்கிகள் தீர்ப்பாயத்திடம் நீங்கள் உங்களுடைய விண்ணப்பத்தினை நேரிலோ அல்லது உத்திரவாத அட்டை இணைக்கப்பட்டு விரைவு அஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.