மாறன் சகோதரர்களால் தொடர்ந்து செய்த துரோகங்கள் - சன்குழுமம் !

0
ஆனால் மாறன் சகோதரர்க ளால் ஏற்பட்ட மனகசப்பு களை எந்த நிலையிலும் வெளிப் படையாக வெளிப் படுத்தாமல்
 விவேக மாகவும், பல நேரங்களில் பெருந்தன்மை யாகவுமிருந் தார் கருணாநிதி.


தனது கலையுலக அனுபவங்களை தொடராக எழுத விரும்பினார் கருணாநிதி. அதை குங்குமம் இதழுக்கு சில ஆரம்ப அத்தியாயங்களை எழுதித்தந்தார்.

ஆனால் அதை பல மாதங்களாக பிரசுரிக்காமல் அலட்சியப் படுத்தினார் கலாநிதி.

கலாநிதியின் கட்டளையால் தான் தனது கட்டுரைகள் பிரசுரமாக வில்லை. என்பதை
வாரிசு போட்டி வந்தது எதனால்? - சன்குழுமம் !
அறிந்த கருணாநிதி அதை ஆனந்த விகடனுக்கு அனுப்பி வைக்க,

அது விகடனில் வாராவாரம் வெளியாகி வாசகர்களால் விரும்பி படிக்கப் பட்டது.

பல நேரங்களில் கருணாநிதி யின் முக்கிய அறிக்கைகள் போதுமான முக்கியத்துவ மின்றி சுருக்கி சொல்லப் படுவது,

அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி களில் சிலவற்றை ஓளிபரப் பாதது,

பேராசிரியர் அன்பழகன், மு.க. ஸ்டாலின் போன்றவர் களின் நிகழ்ச்சி களையும், அறிக்கை களையும் கூடுமான வரை தவிர்த்தது,

நாடறிந்த கவிஞரான கனிமொழி 'கருத்து' என்ற அமைப்பை தோற்று வித்த போதும்,

சென்னை சங்கமம் நிகழ்ச்சியை நடத்திய போதும் இயன்ற வரை இருட்டடிப்பு செய்தது...

போன்ற பல சம்பவங்கள் கருணாந்ிதியை பலமாக பாதித்த போதும் வெளிப் படையான மோதலை அவர் விரும்ப வில்லை.


கருணாநிதிக்கு நெருக்க மானவராக அறியப் பட்டதால் மாலன், கலாநிதி மாறனால் அவமானப் படுத்தப்பட்டு வெளியேற்றப் பட்டார்.

கருணாநிதி சிபாரிசு செய்யும் யாரையும் சன் செய்தி பிரிவிலோ அல்லது

வேறு பிரிவிலோ சேர்ப்ப தில்லை என்பதை அறிவிக்கப் படாத கொள்கையாக கடை பிடித்தார் கலாநிதி .

யாருக்கு யாரால் நன்மை :

1996 தொடங்கி ஒவ்வொரு சட்டமன்ற, நாடாளு மன்றத் தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தல் களிலும்

தி.மு.க வின் வெற்றிக்கு சன் தொலை காட்சியின் பலம் பிரதான மாகக் கருதப்பட்டது.
கதிகலங்கிய கருணாநிதி - சன்குழுமம் ! 
பெரு வாரியான பார்வை யாளர்களை தன் வசம் வென்றெடுத் திருந்த சன் குழுமத்தின் செய்திகள்,

நேர் காணல்கள், விவாதங்கள், கருத்து கணிப்புகள் போன்றவை தி.மு.கவின் வெற்றிக்கு கணிசமான பங்காற்றியது.

கருணாநிதி 100 கூட்டங்களில் பேசினாலும் ஏற்படுத்த முடியாத தாக்கத்தை சன் தொலை காட்சியின் பத்து நிமிட ஒளிபரப்பு ஏற்படுத்து கிறது....



அவரது காலடி தடம் படமுடியாத குக்கிராமங் களுக்கெல் லாம் தங்கள் சேனல் தான் அவரது கருத்து களை கொண்டு சேர்க்கிறது... என்றும்,

சன் குழுமத்தின் பிரச்சார பலமில்லாமல் தி.மு.க வால் தேர்தலை எதிர் கொள்வது இயலாத தென்றும் மாறன் சகோதரர்கள் மனக் கணக்கு போட்டனர்.

ஆக, எப்படி யாயினும் தங்களை அனுசரித்து போவதை தவிர கருணாநிதி க்கு வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்தனர்.
அதுவும் சமீபத்திய தேர்தல்களில் போட்டியிட்ட குறிப்பிடத்தக்க வேட்பாளர் களுக்கு சன் குழுமத்தி லிருந்து நிறைய பண உதவியும் தரப்பட் டுள்ளது.

திமு.க தலைமை கஞ்சத் தனமானது என்ற பெயரை மாற்றி தராளமாக கட்சிக் கரார்களுக்கு பணம் தந்தனர் மாறன் சகோதரர்கள்.


திமு.க தலைமை யகத்தை 'கார்ப்பரேட்' அலுவலகமாக ஆக்கியது போல் மாவட்ட கட்சி அலுவலகங் களையும் மாற்ற திட்ட மிட்டனர் மாறன் சகோதரர்கள்.

பிரச்சாரம் செய்ய கருணாநிதி க்கு சொசுகு கார் தந்தது போல் மாவட்ட செயலாளர் களுக்கும் கார்கள் தரவும்

அவர்களுக்கு அந்த அந்த மாவட்டத்து கேபிள்நெட் வோர்க் தொழில் வாய்ப்பை தரவும் திட்ட மிட்டனர் மாறன் சகோதரர்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings