கால்பந்து போட்டிக்கு ஏன் இத்தனை மகத்துவம் !

ஒலிம்பிக் போட்டிக்கு அடுத்தபடியாக உலகில் மிகப்பெரிய விளையாட்டு எதுவென்றால் அது உலக கோப்பை கால் பந்து போட்டிதான். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்த போட்டி இந்த முறை பிரேசில் நாட்டில் நடக்கிறது.
கால்பந்து போட்டிக்கு ஏன் இத்தனை மகத்துவம் !
இது முதன் முதலில் உருகுவே நாட்டில் 1930_ல் தொடங்கப்பட்டது. இந்த உலக கோப்பை கால்பந்து திருவிழா வரும் 12ம்தேதி துவங்கி அடுத்த மாதம் 13ம்தேதி வரையில் பிரேசில் நாட்டில் நடைபெற உள்ளது.

மொத்தம் 12 நகரங்களிலுள்ள மைதானங்களில் வைத்து இப்போட்டிகள் நடைபெறுகின்றன. இது 20_வது உலககோப்பை கால்பந்து போட்டியாகும். 

64 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உலககோப்பை கால்பந்து போட்டி நடத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த கோப்பையை பிரசில் அணியே பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக வல்லுனர்கள் கூறுகிறார்கள். இது வரை பிரசில் 5 முறை கோப்பையை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கால்பந்து போட்டிக்கு ஏன் இத்தனை மகத்துவம் தெரியுமா?
இதற்குரிய பரிசுத் தொகையே இதன் முக்கிய காரணம் ஆகும். இதன் பரிசுத் தொகை : -

உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை 3400 கோடியாகும். தங்கள் அணிக்காக விளையாடிய வீரர்களை விடுவிக்கும் உள்ளூர் கிளப்புகளுக்கு இழப்பீட்டு தொகை ரூ. 413 கோடியாகும்.

போட்டிக்கு தயாராவதற்கு 32 அணிகளுக்கு தலா ரூ. 9.0 கோடி வழங்கப்படும் தொகையும் இதில் அடங்கும்.

1. சாம்பியன் - முதல் இடம் - ரூ . 207 கோடி,

2. இரண்டாவது இடம் - ரூ . 148 கோடி,

3. மூன்றாவது இடம் - ரூ . 130 கோடி,

4. நான்காவது இடம் - ரூ . 118 கோடி,

5. கால் இறுதியுடன் செல்லும் அணிக்கு - ரூ . 82 1/2 கோடி (4 அணிக்கு),

6. இரண்டாவது சுற்றுடன் வெளியேறும் அணிக்கு - ரூ . 53 1/4 கோடி (8 ),

7. முதல் சுற்றுடன் வெளியேறும் அணிக்கு - ரூ . 47 1/4 கோடி (16 அணிக்கு),

இந்த போட்டியில் வழங்கப்படும் உலக கோப்பையை பற்றி நீங்கள் அறிவீர்களா ?
இந்த கோப்பை 14.4 அங்குலம் உயரமும் , 5.1 அங்குலம் சுற்றளவும் உடையது. மேலும் 5 கிலோ எடை கொண்ட இந்த கோப்பை 18 கேரட் தங்கத்தால் செய்யப்பட்டது. 

ஆனால் வெற்றி பேரு அணிக்கு தங்க முலாம் பூசப்பட்ட மாதிரி கோப்பையே வழங்கப் படுகிறது. தங்கக் கோப்பையை FIFA தன வசமே வைத்துக் கொள்கிறது.
Tags:
Privacy and cookie settings