நாம் பெற்றிருக்கும் புனித மிக்க ரமலான் மாதத்தை பயனுள்ள வகையில் கழிக்கவும் அதில் வர இருக்கும் நரக விடுதலைக்கான பத்து நாட்களை ஒளிமய மாக்கவும் ஒரு அருமையான வாய்ப்பு.
குர்ஆன் ஓதத் தெரியா தவர்கள், இன்னும் இந்த புனிதமிக்க ரமலானி லாவது அதை ஓதி பழகலாம் என்று முயற்ச்சி ப்பவர்கள்,
தங்களின் நேரங்களை கீழ்க்கண்ட அவ்ரா துகளை ஓதுவதன் மூலமும் பிரயோஜன மாக்கலாம்.
ஹதீஸ் அறிவிப்புகள், பெரியா ர்களின் ஞானம் மற்றும் அனுப வத்தின் மூலமாக அறியப் பட்ட சில அமல்களை எவர் ஒருவர் செய்வாரோ அது அவருக்கு நரகத்தை விட்டு பாதுக்கா ப்பதாக ஆகிவிடும்.
இதில் கூறப்படு கின்ற அனேக அமல்கள் ஹதீஸ்களில் அறிவிக்கப் பட்டவை, ஆனால் அவைகளில் சில பலஹீன மான, மிக பலஹீன மான ஹதீதுகள் ஆகும்
இறை நேசர்கள், நாதாக்கள் இவைகளை மிகவும் அனுபவம் நிறைந்த அமல்களாக அறிவித்து ள்ளார்கள்.
அதை தனக்கும் தன்னுடைய குடுப்பத்தி ற்க்கும் உற்றார் உறவின ர்களில் மரணித்த வர்க்களுக் காகவும் ஓதிவருமாரு வலியுறுத்தி யுள்ளார்கள்.
ஆகையால் இதை ஹதீதுகள் என்ற அடிப்படையில் அல்லாமல் பெரியோ ர்களின் அனுபவமிக்க அமல்களின் அடிப்படையில் இதை பொக்கிஷமாக விளங்க வேண்டும். அதன் விளக்கம் கீழே தரப்படுகிறது.
முதலாவது:
கலிமா தய்யிபா لا إله إلا الله எழுபதாயிரம் முறை ஓத வேண்டும். ஒரே இடத்தில் அமர்ந்து ஓதுவது சிறந்தது. பல நாட்கள் அமர்வுகளில் ஓதுவதும் பயனளிக் கக்கூடியது.
இது ஒவ்வொரு 100 தடவைக்கும் محمدا رسول الله வை சேர்த்து, ஆரம்பத்தில் மூன்று, நான்கு முறைகள் ஏதாவது ஒரு ஸலவாத்து சேர்க்க வேண்டும்.
இதை ஓதுபவர், அல்லது யாருக்காக ஓதப்படுகிறதோ இன்ஷா அல்லாஹ் நரக்கத்தை விட்டும் பாதுகாப்பு கிடைக்கும்.
இரண்டாவது:
سبحان الله وبحمده (ஸுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி) என்று ஓராயிரம் முறை ஓதுவது. சிறந்த நேரம் சுப்ஹு தொழுகைக்கு பின் ஆகும்
மூன்றாவது:
سورة الاخلاص சூரத்துல் இக்خலாஸ் ஓராயிரம் முறை ஓதுதல் ஒவ்வொன்றின் ஆரம்பத்தில் பிஸ்மில்லாஹ்வை சேர்த்து ஓதவேண்டும்
நான்காவது:
لا إله إلا الله والله أكبر நாற்பது தடவை ஓதுதல்.
ஐந்தாவது:
காலை அல்லது மாலை இந்த துஆவை ஓதுதல்:
اللهم إني أصبحت اشهدك وأشهد حملة عرشك وملائكتك وجميع خلقك أنك أنت الله لا إله إلا انت وحدك لاشريك لك وأن محمد
عبدك ورسولك
குறிப்பு:
இந்த துஆ நரக நெருப்பை விட்டும் பாது காக்கும் விஷயத்தில் தெளிவான, உறுதியான அறிவிப்பு உள்ளது அபுதாவூத் அவர்கள் நீண்ட அறிவிப் பாளர்கள் தொடர் மூலமாக இதை பதிவு செய்துள் ளார்கள்.
ஆறாவது :
சுப்ஹூ தொழுகைக்கு பிறகு ஆயிரம் விடுத்தம் الحمد لله ஓதுதல்.
ஏழாவது:
16641 பதினாயிரத்தி அறநூற்றி நாற்பத்தி ஒரு முறை يا لطيف யா லத்தீஃப் ஓதுதல்.
இந்த வலீஃபா நரகத்தை விட்டும் பாதுகாக்கக் கூடியது அல்லாமல் இத பல உலக மறு உலக தேவைகள், நாட்டங்கள், நோக்க ங்கள் நிறைவேறுவ தற்க்கும் காரணமாக அமையும்.
எட்டாவது.
ஆயிரம் தடவை ஸலவாத்து ஓதுதல் ஸலவா த்தின் வாசகங்கள் ஹதீசுகளில் பலவகைகளில் வந்துள்ளன, அவைகளில் எது ஓதினாலும் போதுமானது.
மிக சிறந்தது, தொழுகயில் ஓதப்படும் ஸலவாத்து தரூதே இப்ராஹீம் ஆகும். ( தொகுப்பு : முப்தி ஷஃபி(ரஹ்)) ( தமிழில் : ஜஃபர் சாதிக் ஹஸனீ)