இன்றைய கால கட்டத்தில் பலரும் பல வசைச் சொற்களை கூறி மற்றவரை பலித்து கூறுகிறார்கள். இதனை நம்மால் கேட்க முடிவது இல்லை. இவை அனைத்தும் மிகவும் கடுமையான சொல்லாகவே இருக்கிறது.
ஆனால் நமக்கு முந்தைய தலை முறைகள் சொல்லும் சொற்கள் வசைச் சொல்லாக இருந்தாலும் அவற்றில் அர்த்தமும் மற்றவர்கள் கேட்டுப் போகக் கூடாது என்னும் நல்லெண்ணமும் இருந்தது.
அவற்றில் சில இங்கே : -
அன்னை என்பவள் அன்பும் கருணையும் மிக்கவள். கல்லையும் கரைத்து விடும் அன்னையின் அன்பு,
1. நாசமற்று போறவனே : -
ஒரு தாய் தன்னுடைய மகனை திட்டும் பொழுது கூட தன மகன் பாலகி விடக்கூடாது என்னும் நல்லெண்ணத்தில் தான் கூறுகிறாள். நாசம் என்பது எதிமரையான் சொல்.
அட்ட்று என்பதும் அதற்க்கு எதிர் மறையான சொல்லாகும். இதன் அர்த்தம் நாசம் அற்று போறவனே.
நாசமாகாமல் நன்றாக வாழ்வாயாட மகனே என்பதாகும். தன மகனை திட்டும் பொது கூட தவறாக போய் விடக்கூடாது என்று நினைக்கிறாள் என்பதே.
2. வெண்ணையில் விலங்கிட்டு வெயிலில் நிற்க வைப்பேன் : -
வெண்ணை என்பது ஒரு உருகும் பொருள் ஆகும் இது சூடு பட்டவுடன் வுருகும் பொருள். தன்னுடைய மகனுக்கு தண்டனை வழங்கும் தாய் அந்த தண்டனை நிரந்தரம் ஆகாமல் சில நொடி மட்டுமே வழங்குகிறாள்.
வெண்ணையில் விலங்கிட்டு வெயிலில் நிற்க வைத்தால் சில நொடிகளி விழங்கு உருகி விடுவிக்கப் படுவான் என்பதே இதன் அர்த்தம்.
3. மண்ணில் விலங்கிட்டு உன்னை மழையில் நிற்க வைப்பேன் : -
மண் என்பது கரையக் கொடியது இதில் விளங்கிட்டால் அது கரைந்து விடும் என்பதே இதன் பொருள் ஆகும்.
4. சிலர் அரசமரத்தை சுற்றி வா இது தான் உனக்கு தண்டனை என்பார்கள்: -
இதன் பொருள் அரசமரம் என்பது மரங்களுக் கெல்லாம் அரசன் என்பதாகும். இந்த மரம் அதிகமான ஆக்சிஜனை வெளியிடும் ஒரு அற்ப்புதமான மரம் ஆகும்.
அரச மரத்தை சுற்றி வந்தால் அது வெளியிடும் ஆக்சிஜன் நமக்கு அதிக அளவில் கிடைப்பதால் நாம் ஆரோக்கியம் பெறுவோம் என்பதே இதன் பொருள்.