சவுதி அரேபியா உலகிலேயே அதிக செல்வம் கொழிக்கும் நாடு ஆகும். அனால் இந்த நாட்டில் உள்ள பணம் படைத்த அரேபியர்களின் ஆசை அளவில்லாதது.
இவர்கள் தங்களுடைய காம இச்சையை அடக்கு வதற்காக சிறிய குழந்தைகளை கூட விட்டு வைப்பது இல்லை.
அத்தகைய பெரும் முதலைகள் ஒரு பெருந் தொகையை வரதட் சணையாக கொடுத்து, 15 வயது சிறுமியை 90 வயது முதியவர் திருமணம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
சவுதி அரேபியாவை சேர்ந்தவர் பென் அலி மஷ்ரகி இவர் வயது 90. இவர் சமீபத்தில் 15 வயது சிறுமி சரிபா அலியை திருமணம் செய்து கொண்டார்.
இத்திரு மணத்திற்கு மனித உரிமை ஆர்வலர்களும், பெண்கள் நல அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
ஆனால் திருமணம் என்பது சட்டப் பூர்வமான ஒன்று என்றும், சிறுமியை மணப் பதற்காக 17,500 டொலர் ( இந்திய ரூ. 10,00,000 ) பணத்தை குறித்த சிறுமியின் பெற்றோருக்கு கொடுத்த தாகவும் பென் அலி தெரிவித் திருந்தார்.
திரும்பவும் என் மனைவியை கொண்டு வந்து என்னிடமே விடுங்கள் என்றும் வற்புறுத்தி வந்தார்.
இந்நிலையில் அந்தப்பெண் தன்னுடைய குடும்பத் திற்காகவே முதிய வரை திருமணம் செய்து கொண்டதாக பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார்.
அந்த சிறுமி கூறிய வாக்கு மூலத்தில், நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர், என்னுடன் பிறந்தவர்கள் 12 பேர்.சொந்த வீடில்லாமல், குடிசையில் வாழ்ந்து வருகிறோம்.
குளிர் காலம் ஆனாலும், மழை காலம் ஆனாலும் மிகுந்த கஷ்டங்களுக்கு இடையில் வாழ்ந்து வருகிறோம்.
இதன் காரணமாகவே தான் பெரும் தொகையை பெற்றுக் கொண்டு குடும்பத்திற்காக முதியவரை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தேன் என்று தெரிவித் துள்ளார்.