திருச்சி மாவட்டம் தா. பேட்டை அடுத்த வேலம்பட்டி புதூர் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு திருவாரூர் மாவட்டம் மயிலா டுதுறை அடுத்த பூந்தோட்டம் பகுதியில் வசித்த தேவகி என்கின்ற சின்னகுஞ்சம்மாள் (வயது 70) வந்துள்ளார்.
நீண்ட ஜடா முடியுடன் நிர்வாண கோலத்தில் உள்ளார். இவரது உறவினர் புவனேஸ்வரி என்பவர் கூறும் போது, சின்னகுஞ்சம்மாள் எனக்கு சித்தி முறை உறவு. இவர் குளித்து 20 வருடங்களுக்கு மேல் இருக்கும்.
அவர் மீது எவ்வித துர்நாற்றமும் வீசுவது கிடையாது. அதே போல் துணி உடுத்துவதும் கிடையாது. பக்தர்கள் யாராவது சட்டை கொடுத்தால் அவரது மனதுக்கு பிடித்தால் மட்டுமே வாங்கி கொள்வார்.
இவரது ஆசி கிடைத்தால் நினைத்த காரியம் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. வியாபாரம், குழந்தை பாக்கியம், திருமணம் தடை உள்ளிட்ட பிரச்சினைகளால் சிரமப்படுவோர், சின்ன குஞ்சம்மாளை தரிசனம் செய்தால் பிரச்சினைகள் அகலும். பூந்தோட்டம் பகுதியில் வசித்து வந்தவரை வீட்டிற்கு காரில் அழைத்து வந்துள்ளோம் என்று கூறினார்.
இது குறித்து சின்னகுஞ்சம்மாளிடம் நாம் கேட்டதற்கு என்னை காளி, சித்தர், நெருப்புகாளி என்று பக்தர்கள் கூறுகின்றனர். எனக்கு அது பற்றி கவலையில்லை. நான் அதை நம்பவும் மாட்டேன். நான் விபூதி பூசிவிடுவதால் நல்லது நடக்கிறது என்று பக்தர்கள் பார்த்து விட்டு சொல்கின்றனர்.
எனக்கு குளிப்பதற்கும், துணி உடுத்துவதற்கும் பிடிப்பதில்லை. மழை, பனி, குளிர், வெயில், காற்று எதுவும் எனக்கு தெரியாது. நான் இங்கு தங்குவதற்கு குடிசை கட்டி தருவதாக பக்தர்கள் கூறியதால் இங்கேயே தங்கியிருக்க விரும்புகிறேன் என்று கூறினார்.
பக்தர்கள் பலரும் விபூதி பூசி கொண்டும், ரூபாய் நோட்டுகளில் கையெழுத்து பெற்றும் செல்கின்றனர். சின்ன குஞ்சம்மாளை பார்த்த போது பக்தர் ஒருவர் வழங்கிய புதிய வெள்ளை நிற சட்டையை விருப்பத்துடன் அணிந்திருந்தார்.
இப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் சின்ன குஞ்சம்மாளை பார்த்து செல்கின்றனர்.