மருத்துவ ஆய்வு என்ற போர்வையில் சுமார் 100க்கும் அதிகமான பெண்களை மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்து, அதை வீடியோ எடுத்து விற்பனை செய்த நபரை ஜப்பான் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜப்பானைச் சேர்ந்தவர் 54 வயது ஹிடயுக்தி நொகுச்சி. உறங்கும் போது பெண்களின் இரத்த அழுத்தம் எவ்வாறு உள்ளது என்பது தொடர்பாக ஆய்வு செய்து வருவதாக தன்னை அடையாளப் படுத்திக் கொண்ட நொகுச்சி,
இதற்கென பல பெண்களை ஹோட்டல் மற்றும் கடற்கரை விடுதிகளுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, ஆய்வு செய்வதாகக் கூறி அப்பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்துள்ளார் நொகுச்சி.
மேலும் அந்த அந்தரங்க காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து ஆபாச இணைய தளங்களுக்கு விற்று அதன் மூலமாக 85000 டாலருக்கும் (52 லட்சம் ரூபாய்) மேல் சம்பாதித்திருக்கிறார்.
நொகுச்சி குறித்து கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் மீதான குற்றங்கள் அம்பலமானது.
அதனைத் தொடர்ந்து நொகுச்சியைக் கைது செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து இதுவரை மட்டும் நொகுச்சியால் பாதிக்கப்பட்ட 14 வயது முதல் 40 வயதிற்குட் பட்ட 39 பேர் அடையாளம் காணப்ப ட்டுள்ளதாகவும்,
ஆனால் இவரால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 100க்கும் மேல் இருக்கும் என்றும் ஜப்பான் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவர் முறையாக டாக்டருக்குப் படித்தவரா என்று தெரியவில்லை. இதுகுறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது அட்டூழியத்திற்கு டோக்கியோ, ஒசாகா, சிபா, டோசிகி, சிஷுவோகா
ஆகிய நகரங்களைச் சேர்ந்த பெண்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். விரைவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ள நொகுச்சிக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்குமென எதிர்பார்க்கப் படுகிறது.