நிர்வாண பெண்ணுடன் நடனமாடிய போலிஸ் !

பரகுவே போலிஸ் நிலையத்தில் நிர்வாண பெண்ணுடன் நடனமாடிய பொலிஸ் உத்தியோகஸ்தர்! 
நிர்வாண பெண்ணுடன் நடனமாடிய போலிஸ் !
பரகுவேயிலுள்ள பொலிஸ் நிலையமொன்றில் நிர்வாணமான பெண்ணொருவரும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரும் நடனமாடியமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரகுவேயின் தேசிய பத்திரிகைகளில் ஒன்றான “குரோனிக்காவில்” இச்சம்பவம் தொடர்பான புகைப்படத்துடன் செய்தி வெளியானது.

அப்படத்தில் முழு நிர்வாண கோலத்திலுள்ள பெண்ணொ ருவருடன் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் நடனமாடியவாறு காணப்பட்டார்.

மேற்படி பொலிஸ் உத்தியோகஸ்தர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான சம்பவங்கள் பரகுவே பொலிஸ் நிலையங்களில் அடிக்கடி இடம்பெறுகின்றன என இச்செய்தி வெளியான பின்னர், சிலர் தகவல் தெரிவித்துள்ளமை பரகுவேயில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து விசாரணை நடத்த பரகுவே பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார் என அந்நாட்டு பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இப்படியான சம்பவம் இது மட்டும்தானா அல்லது வழக்கமான நடத்தையின் ஒரு பாகமா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது என போலா அலோன்ஸோ எனும் மேற்படி பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings