இந்தியாவின் www.mid-day.com என்ற இணையம் சவுதியில் உள்ள சேக்குகளுக்கு "தற்காலிகமாக மனைவி" சப்ளை என்ற பெயரில் செய்தி வெளியிட்டு வருகிறது.
இந்த நாளிதழின் (MID DAY) பெண் நிருபர் கிராந்தி விபுதேயு, மற்றும் ஆண் நிருபர் பூபன் படேல் ஆகிய இருவரும் சேர்ந்து ஒரு மாதத்திற்கும் மேலாக
உளவு பார்த்து அரபு ஷேக்குகளின் லீலைகளை வெளிக்கொண்டு வந்ததாக அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்கள் .
அரபு நாடுகளில் இருந்து நமது இந்தியாவிற்கு வரும் ஷேக்குகளில் சிலர், தங்கள் காம இச்சையை, தாகத்தை தணித்துக் கொள்ள இந்திய பெண்களை திருமணம் செய்வதும்
தங்களது இச்சை முடிந்ததும் அந்த பெண்களை தலாக் என்ற விவாகரத்து செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இந்தியாவிற்கு சுற்றுலா என்ற பெயரில் விசாவில் வரும் அரபு நாட்டு ஆண்கள் சிலர், மும்பை மற்றும் வட மாநில நகரங்களில் வந்து இறங்கியதும் தனக்கு தேவையான பெண் தேடும் படலத்தை அங்கிருந்தே தொடங்கி விடுகின்றனர்.
அதற்கென்றே உள்ள சில பெண் புரோக்கர்கள் அவர்கள் தங்கியிருக்கும் இடங்களுக்கு பெண்களை கூட்டி சென்று காட்டுகின்றனர்.
அதில் எந்த பெண் பிடித்திருக்கிறதோ அந்த பெண்ணை அரபு நாட்டவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.
திருமணம் என்பது முறைப்படியே செய்ய வேண்டும் என விரும்பும் ஷேக், அந்த பெண்ணுடன் திருமணம் செய்து கொள்கின்றனர்.
அனால் அந்த திருமணத்திற்கு முன்பு ரூ.15 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் பேரம் பேசப்பட்டு பெண்ணுக்கு கைமாற்றப்படுகிறது.
மேலும் எத்தனை நாட்களுக்கு ஷேக்கிற்கு மனைவியாக இருக்க வேண்டும் என்பதும் ஒப்பந்தம் மூலம் முடிவு செய்யப்பட்டு ஷேக்கின் மனைவியாக மாறுகிறாள்.
அந்த பெண்ணுடன் இந்தியாவில் உள்ள சுற்றுலா மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் ஷேக், அந்த பெண்ணை தன் காம இச்சையை , தாகத்தை தணித்துக்கொள்ள விருப்பம் போல பயன்படுத்துகிறார்.
தன் விசா காலம் முடியும் போது திருமணம் செய்து வைத்த மதகுருவிடம் வந்து விவாகரத்தும் (தலாக்கும்) செய்து விடுகிறார். விவாகரத்தும் சில வினாடிகளில் முடிந்து விடுகிறது.
இப்படி குறிப்பிட்ட காலத்துக்கு அரபு ஷேக்கின் மனைவியாக வாழ்ந்த அந்த பெண்னின் கரப்பு சூறையாடப்பட்டு கசக்கி வீசப்படுகிறாள். மேலும்
அவளுக்கு கொடுக்கப்படும் பணத்தில் கொஞ்சமே கிடைக்கிறது. 50 சதவீத பணம் மதகுரு எடுத்து கொள்கிறார். மீதமுள்ளதை பெண்ணும், ஏஜண்டுகளும் பகிர்ந்து கொள்கின்றனர்.
இத்தகைய ஒரு கொடூரமான சம்பவம் மும்பை, ஐதராபாத் நகரங்களில் வெகு சர்வ சாதாரணமாக நடக்கிறது குறிப்பிடத்தக்கது.