அமெரிக்காவைச் சேர்ந்த ஜென் செட்லர் எனும் யுவதி நடிகையோ பாடகியோ அல்ல. ஆனால் சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டகிராமில் சுமார் 13 லட்சம் பேர் அவரை பொலோ செய்கின்றனர்.
இதற்கு முக்கிய காரணம் அவரின் பின்னழகு. அத்துடன் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஜென் செட்லர், தனது உடற்பயிற்சிகள் மூலமும் பெரும் எண்ணிக்கையானோரைக் கவர்ந்துள்ளார்.
தன்னை விதவிதமாக புகைப்படங்களைப் பிடித்து ஜென் செட்லர் வெளியிடுகிறார். அதனால் தினமும் அவரின் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்கிறது.
அண்மையில் நியூயோர்க் மிட்டவுன் ரயில் நிலையத்தில் இரு சுவர்கள் மீது கைகளையும் கால்களையும் அழுத்திக் கொண்டு அந்தரந்தி லிருந்தவாறு ஜென் செட்லர் போஸ் கொடுத்தார்.
இதைப் பார்ப்பதற்கும் பலர் திரண்டனர். அது உண்மையான தோற்றமா எனக் கேட்டார் ஒருவர். மற்றொரு இளைஞர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஜென் செட்லரிடம் கோரினார்.
கூட்டம் திரள்வதைப் பார்த்து பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் அங்கு வந்தனர்.
பின்னர் அவர்களும் ஜென் செட்லரின் சாகசங்களைப் பார்க்க ஆரம்பித்தனர். 5 அடி உயரமான இவரின் எடை 50 கிலோகிராம் ஆகும்.
‘நான் எங்கே சென்றாலும் மக்கள் என்னை அடையாளம் கண்டு கொள்கின்றனர்’ என்கிறார் ஜென் செட்லர்.
கடந்த 2012 மார்ச் மாதம் இன்ஸ்டகிராம் இணையத்தளத்தில் அவர் இணைந்தார். இப்போது 13 லட்சம் பேர் அவரை இன்ஸ்டகிராமில் பின்தொடர்கின்றனர்.
அமெரிக்காவின் பிரபல பாடகி ரிஹானா, கால்பந்தாட்ட வீரர் டெரல் ஒவென்ஸ், கூடை பந்தாட்ட நட்சத்திரமான அமர் ஸ்டோடெமைர் ஆகியோரும் ஜென் செட்லரை இன்ஸ்டகிராமில் பின்தொடர்பவர்களில் அடங்குகின்றனர்.
ஆனால், தான் உடற்பயிற்சி செய்வதைப் பார்ப்பதற்கு பெரும் எண்ணிக்கையானோர் கூடி விடுவதால் இனிமேலும் பொது இடங்களில் உடற்பயிற்சியிலீடுபடுவதற்கு தான் விரும்பவில்லை என அவர் கூறியுள்ளார்.
நான் எங்கு போனாலும் அது பெரிய கூட்டம் கூடி விடுகிறது. என்னை மற்றவர்கள் வெறித்துப் பார்ப்பதை நான் விரும்பவில்லை என அவர் கூறுகிறார்.
எவ்வாறெனினும் இவர் இணையத் தளங்களில் தன்னைத்தானே படம்பிடித்து (செல்ஃபீ) வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.
அதிகமாக முகத்தை படம் பிடிப்பதில்லை எனது உடலையே அதிகம் படம்பிடிக்கிறேன் என அவர் ஒப்புக் கொள்கிறார்.
இணையத் தளங்களில் பிரபலமானவராக இருப்பதால் அவருக்கு வருமானம் கிடைக்கிறது.
ஆரோக்கிய பானங்கள், போஷாக்கு உணவு தயாரிக்கும் நிறுவனங்கள் இவரை தமது விளம்பரங்களுக்கும் ஊக்குவிப்புத் திட்டங்களுக்கும் பயன்படுத்துகின்றன.