பாடகி மரியாகறேயின் படப்பிடிப்பு இரத்தானதால் 150,000 டொலர் கோரி வழக்கு அமெரிக்காவின் பிரபல பாடகிகளில் ஒருவரான மரியா கறேயின் புகைப்படப்பிடிப்பு இரத்துச்செய்யப்பட்டால் 150,000 அமெரிக்க டொலர் நஷ்ட ஈடு கோரி புகைப்படப்பிடிப்பாளர் ஒருவர் வழக்குத் தொடுத் துள்ளார்.
44 வயதான மரியா கறே கடந்த 24 வருடங்களாக பாடகியாக விளங்குகிறார். ஏராளமான விருதுகளை யும் அவர் வென்றுள்ளார். மரியா கறேயின் புகைப்படங்கள் போட்டோஷொப் மூலம் மாற்றப்பட்டு அவ ரின் தோற்றம் மெருகேற்றிக் காட்டப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் ஏற்கெனவே உள்ளது.
இந்நிலையில், புகைப்படப்பிடிப்பாளர் ஒருவர் தொடுத்த வழக்கானது, மரியா கறேயின் புகைப்படப்பிடிப்புகளுக்கு செலவிடப்படும் பணம் குறித்த தகவல்களையும் அம்பலமாக்குவதாக உள்ளது. இப்புகைப்படப்பிடிப்பு இரத்துச்செய்யப்பட்டமை யால் 85,000 அமெரிக்க டொலர்கள் இழப்பு ஏற்பட்ட தாக அப் புகைப்படப்பிடிப்பாளர். தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், மரியா கறேயின் பாடல்பதிவு நிறுவனமான டெவ் ஜேம் ரெக்கேர்ர்டிங் நிறுவனம் தனக்கு 150,000 டொலர்களை (சுமார் ஒரு கோடியே 96 லட்சம் ரூபா) வழங்க வேண்டும் என அப் புகைப்படப்பிடிப்பாளர் கோரியுள்ளார்.
மேற்படி 85,000 டொலர்களில் ஆடையலங்கார நிபுணருக்கான 65,391 டொலர்கள், சிகையலங்கார நிபுணருக்கான 9600 டொலர்கள், மேக் அப் நிபுண ருக்கான 7200 டொலர்கள் ஆகியவையும் அடங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.