மேலும் விளக்கமாக: பயன்பாடு: பெண்களில் மலட்டுத் தன்மைக்கு பலோப்பியன் குளாயில் இருக்கும் குறைபாடு காரணமாக இருக்கும் வேளைகளில் கருக்கட்டல் செயல்முறை கடினமாகி விடும்.
அதே போல் ஆண்களின் மலட்டுத் தன்மைக்கு விந்துக்களின் தரம் குறைவாக இருந்தாலும் கருக்கட்டல் கடினமாகும்.
இப்படியான நிலைகளில் இம்முறையில் செயற்கையாக, உடலுக்கு வெளியாக கருக்கட்டல் நிகழ்த்தப்படும்.
ஆணின் விந்தின் தரம் குறைபாடு ள்ளதாக இருப்பின், விந்தானது நேரடியாக முட்டையினுள் செலுத்தப் படும்.
இதனை குழிய முதலுருவுக் குள்ளான விந்து ஊசி மூலம் ஏற்றும் முறையெனலாம் (intracytoplasmic sperm injection - ICSI). ஆரோக்கிய மான முட்டை,
கருக்கட்டும் திறன் கொண்ட விந்து, கருத்த ரிப்பை ஆரோக்கிய மாக ஏற்கக் கூடிய கருப்பை என்பன இம்முறை வெற்றியளிப் பதற்கு முக்கிய மாகும்.
இவைகளில் ஏதேனும் ஒன்றோ அல்லது மூன்றும் தரம் குன்றி அமைந்து விட்டால் வேறு பல முறைகள் கையாளப் பெறுகின்றன.
இம்முறை மிகவும் விலை உயர்ந்ததாக இருப்பதனால், விலை குறைந்த முறைகள் வெற்றி அளிக்காத நிலையிலேயே இம்முறை பயன்படுத் தப்படும்.
இம்முறையில் சிலசமயம் முட்டை வழங்கும் பெண்ணும், கருக்கட்டலின் பின்னர் கருவைத் தாங்கி கருத்தரி ப்புக்கு உட்படும் பெண்ணும் வேறு வேறாக இருப்பர்.
குழந்தை தேவையான பெண்ணில் ஆரோக்கியமான முட்டைகள் பெறப்பட முடியா தெனின், வேறொரு பெண்ணிடம் முட்டைகள் பெறப்பட்டு,
கருக்கட்டலின் பின்னர், குழந்தை தேவையான பெண்ணின் கருப்பையில் முளையம் உள்வைத்து பதிக்கப்படும்.
இதனால் மாதவிடாய் நிறுத்தம் ஏற்பட்ட பெண்களும் கூட குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடிகின்றது.
குழந்தை தேவையான பெண்ணின் கருப்பை கருவைத் தாங்கும் வல்லமை அற்றதாகக் கருதப்படின்,
அப்பெண்ணின் முட்டை கருக் கட்டலுக்கு உட்படுத்தப் பட்ட பின்னர், வேறொரு பெண்ணின் கருப்பையில் பதித்து, குழந்தை பிறப்பின் பின்னர் மற்ற பெண்ணிடம் குழந்தை கையளிக் கப்படும்.
ஆண்களிலும் குழந்தை தேவையான ஆணின் விந்துக்கள் ஆரோக்கியம் அற்றதாக இருக்கும் வேளை யில் வேறொரு ஆண் விந்து வழங்கியாக இருக்க முடியும்.
ஆனால் சில நாடுகளில் இம்முறைக்கு கணவனின் விந்தே பெற முடியும் என்ற கட்டுப்பாடு உள்ளது.
அதே வேளை செயற்க விந்தூட்டல் முறைக்கு விந்து வழங்கி ஒருவரிடமிருந்து விந்து பெறப்பட அனுமதிக்கப் படுகிறது.
50 வயதைக் கடந்த பெண்களும் இம்முறை யால் குழந்தை பெற்றுக் கொண்டு ள்ளனர்.
செயல்முறை
பெண்ணில் முட்டையானது பாலோப்பியன் குழாயிலேயே வைத்து உறிஞ்சப் பட்டு, கருக் கட்டலில் பயன் படுத்தப் படலாம்.
எனினும், அப்படி செய்யும் போது குறைந்த அளவிலேயே வெற்றி யளிப்பதாக உள்ளது.
வெள்ளரிக்காயின் அற்புதமான மருத்துவ குணங்கள் !
அதனால் பெண்ணுக்கு வளரூக் கிகளை அளித்து, அதன் மூலம் சூலகத்தின் தொழிற் பாட்டை கூட்டி, அதிக எண்ணிக்கை யான முட்டைகள் உருவாகச் செய்து,
பின்னர், அம்முட்டைகளை சூலகத்தி லிருந்து பிரித்தெடுத்து, உடலுக்கு வெளியாக ஒரு நீர்ம வளர் ப்பூடகம் ஒன்றில் வைத்து,
அவற்றுடன் ஆணில் இருந்து பெறப்படும் விந்து பாய்மத்தைச் சேர்ப்பத னால், முட்டையுடன் விந்து கருக்கட்டச் செய்யப் படுகிறது.
பின்னர் கருக்கட்ட லுக்கு உட்பட்டு கலப்பிரிவுக் குள்ளாகும் (உயிரணுப் பிரிவுக் குள்ளாகும்) கரு முட்டை யானது,
பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தப் பட்டு, பெண்ணின் வெற்றி கரமான கருத்தரி ப்புக்கு உதவி குழந்தையாக உருவாவ தற்கு ஏதுவாகின்றது.
சோதனை முறையின் வெற்றி வாய்ப்பு
இந்த சோதனை முறையில், வெற்றி வீதம் என்பது விரும்பத் தக்க விளைவைக் கொடுக்கும் வீதத்தைக் குறிக்கும்.
கணக்கிடும் முறையின் அடிப்படை யில் இது கருத்தரிப்பு வீதத்தை, அல்லது உயிர் வாழும் குழந்தை களின் பிறப்பு வீதத்தைக் கொடுக் கின்றது.
Thanks for Your Comments