தான் குழந்தை பெறும் காட்சியை பார்வையிட தலா 22 லட்சம் ரூபா டிக்கெட்!

தான் குழந்தை பெறும் காட்சியை நேரில் பார்வையிட விரும்புப வர்களுக்கு தலா 22 லட்சம் ரூபா விலையில் டிக்கெற் விற்பனை செய்த மொடல்
பிரிட்டனைச் சேர்ந்த மொடல் ஒருவர், தான் குழந்தை பிரசவிக்கும் காட்சியை நேரடியாக பார்வையிடுவதற்கான வாய்ப்பை வழங்குவதற்காக டிக்கெற் விற்பனை செய்கிறார்.

23 வயதானஜோஸி கன்னிங்காம் எனும் இந்த யுவதி செயற்கை முறையில் மார்பகங்களை பெரிதாக்கிக் கொண்டவர்.

பிரிட்டனின் அரச மருத்துவ மனையில் 4800 ஸ்ரேலிங் பவுண்கள் (சுமார் 10 லட்சம் ரூபா) செலவிலான மார்பக அழகு சிகிச்சை செய்து கொண்டதால் பரபரப்பாக செய்திகளில் இடம் பெற்றவர் இவர்.

தனது நெஞ்சுப்பகுதி தட்டையாக இருப்பதால் தனது வாழ்க்கை நாசமாகுகிறது என மருத்துவர்களிடம் குமுறியிருந்தார் ஜோஸி கன்னிகாம். இதனால் அவர் மீது அனுதாபம் கொண்ட மருத்துவ அதிகாரிகள் ஜோஸியின் மார்பகங்களை பெரிதாக்குவதற்கான சத்திரசிகிச்சைக்கு பரிந்துரை செய்தனர்.

அதையடுத்து கடந்த வருட முற்பகுதியில்,  4800 ஸ்ரேலிங் பவுண்கள் செலவில் மார்பகங்களை பெரிதாக்குவதற்கான சத்திரசிகிச்சை அரச வைத்தியசாலையொன்றில் செய்யப்பட்டது.

வரிசெலுத்தும் பொதுமக்களுக்கு இந்த சத்திரசிகிச்சைகக்காக தான் நன்றிகூறுவதாகவும் பகிரங்கமாக அறிவித்தார் ஜோஸி.

ஆனால், நோயாளிக ளுக்காக செலவிடப்பட வேண்டிய  பொது மக்களின் வரிப்ப ணத்தை இத்தகைய மார்பக அழகுசி கிச்சைககளு க்கு பயன் படுத் துவதா என சர்ச்சையும் ஏற்பட்டது. பிரித்தானிய வரியிறுப் பாளர்களின் சங்ககத்தின் பேச்சாளரும் இது குறித்து பகிரங்கமாக அதிருப்தி தெரிவித் திருந்தார்.

அவ்வேளை யில் இரு குழந்தை களின் தாயாக இருந்த ஜோஸி, மொடலிங் துறையில் ஈடுபட  ஆர்வம் கொண் டிருந்தார். அதுவும் நீச்சலுடை மொடலாக பணியாற்ற வேண்டுமென அவர் விரு ம்பினார்.

பரபரப்பான கருத்துக்களை வெளியிட்டு அடிக்கடி செய்திகளில் இடம்பெறும் ஒருவராக ஜோஸி கன்னிங்காம் காணப்பட்டார். இந்நிலையில் மூன்றாவது குழந்தைக்கு தாயாகப் போகும் அவர், இப்பிரசவ காட்சியை பார்வையிட விரும்புபவர்களுக்காக டிக்கெற் விற்பனை செய்யப்போவதாக அறிவித்தார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் தனது வீட்டிலுள்ள அறையொன்றில் இப்பிரசவம் நடைபெறும் எனவும் இதை பார்வையி டுவற்காக நால்வருக்கு  தலா 10,000 ஸ்ரேலிங் பவுண் (சுமார் 22 லட்சம்  ரூபா) விலையில் டிக்கெட் விற்பனை செய்யவுள் ளதாகவும் ஜோஸி தெரிவித்தார்.

தற்போது மேற்படி நான்கு டிக்கெட்களும் விற்பனையாகி விட்டதாக ஜோஸி கன்னிங்காம் அறிவி த்துள்ளார்.  இந்த டிக்கெட்களை வாங்கியவர்களில் மூவர் ஊடகவி யலாளர்கள் எனத் தெரிவிக்கப் படுகிறது. மற்றொருவர், ஜோஸி கன்னிங் காமின் தீவிர ரசிகராம்.

டிக்கெட் டுகளை வாங்கிய ஊடகவி யலாளர்கள் ஜோஸியின் பிரசவ காட்சி களை படம் பிடிக்கவும் அனுமதிக்கப் படுவார்கள் என அறிவிக்கப்ப ட்டுள்ளது.

தனது மார்பக அழகுசிகி ச்சைக்காக பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை செலவிட்ட பணத்தை திருப்பிச் செலுத் துவதற்கு இந்த டிக்கெற் விற்பனையின் மூலம் திரட்டிய பணத்தின் ஒரு பகுதியை பயன்படுத்தப் போவ தாகவும் ஜோஸி கன்னிங்காஹம் கூறுகிறார்.

ஆனால், இவர் குழந்தை பெறும் காட்சியை மற்றவர்கள் எதற்காக பார்வையிட விரும்பு கிறார்கள் என சிலர் கேள்வி எழுப்பி யுள்ளனர்.
Tags:
Privacy and cookie settings